அன்னையர் தினப்பதிவு 18
நவம்பர் 28, 2014 at 4:46 பிப 13 பின்னூட்டங்கள்
உங்களுக்கு எத்தனை வயது? ஸொந்த வீடு நிலம் உள்ளதா? இப்படி
சில கேள்விகள் கேட்பதற்குத் தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
கூட யார் இருக்காங்கோ?
வாங்க உக்காருங்க, எல்லாரும் புதுசா இருக்கீங்க எனக்கு யார்,என்ன
எதுவுமே புரியலே!
யாரைப் பாக்கணும் உங்களுக்கு?
தலைப்புடவையை ஸரிசெய்து கொண்டு,தலைப்பை இழுத்துப்
போர்த்திக் கொண்டு, நிக்கறதைப் பார்த்து,
அக்கம்பக்கம் வாசலில் துணி உலர்த்த, அது இது என்று வந்தவர்கள் கூட
என்ன யார் வந்திருப்பதுபோல் பார்வை!
பாட்டியாத்துக்கு யார்யாரோ வந்திருக்காயென்று நியூஸ் கொடுத்துக்
கொண்டே ஓடும் சிறுவர்கள்.
என்னைப் பற்றி கேக்கறீங்க இல்லையா?
ஸொந்த நிலம்நீர் எல்லாம் இருக்கு,வேறெ வடிவத்தில்.
கூடவா, இந்த ஊரிலிருக்கறவங்க எல்லார் கூடவும் நான் இருக்கேன்.
பேத்தி இருக்கு. கூட.
ஒரு நிமிஷம் இருங்க, வந்துட்டேன்.
கீழே இறங்கிப் பார்க்கிறாள்.
அருணாசலம், வாப்பா,நல்லஸமயம் நீ வந்துட்டே.
என்னென்னவோ கேட்கிறார்கள்.
வழிவசமா நீயும் வந்தே,
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறேன்.
இவரு எங்க மனுஷரு.
மனுஷரு யார் தெரியுமா? ~ஒரு ஸ்கூல் வாத்தியார். உறவுகாரரும் கூட.
அம்மா மாதிரி ஒரு ஸோஷியல் ஒர்க்கரும் கூட.
நான் சொல்றேன் இப்போ இந்தப் பெயர். அவர்களுக்கு அந்த நாளில்
உபகாரி என்று சொல்லுவார்கள்.
எங்காவது பொதுக் கூட்டமா,ஆன்மீக பஜனையா? கோவில் ஸம்பந்த
வஸூலா, அவர் வருவார்.
ஓட்டுப்போட அழைத்துப் போகவும் வருவார்.
ரேஷன் காலத்தில் கவர்மென்ட் கட்டாய நெல் கொள் முதலா?
அதிகாரிகளுக்குஒத்தாசையாக நெல் வைத்திருப்பவர்களிடம்,
நியாயத்தைஎடுத்துச் சொல்லிஒரு வீட்டில் ,2அல்லது 3 மூட்டை நெல்லாவது
கொடுக்கச் செய்து விடுவார்.
யாருக்கு எந்தவிதமான ஒத்தாசை தேவைப்பட்டாலும், மற்றவர்களைக்
கொண்டாகிலும் நிறைவேற்றுவார்.
நல்லது,கெட்டது எல்லாவற்றிலும் முன் நிற்பார்.
வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும்.மார்கழிமாத பஜனையில்
பொங்கல் வாரி வழங்கத் தயங்கமாட்டார்.
வாங்கஸார்,வாங்க,வாங்க. வாசலிலிரங்கி பேசுகிரார்.
மெல்லிய குரலில் விசாரிக்கிரார்.
இந்தம்மா உங்களையெல்லாம் பார்த்து கொஞ்ஜம் பயப்படராங்க போலிருக்கு.
ஓ இதுதானே. நான் சொல்றேன் அவங்களுக்கு.
ஒண்ணுமில்லேம்மா. என்ன உங்களுக்கு இவ்வளவு தயக்கம்?
நல்லது செய்யதான் வந்திருக்கிரார்கள்.
வயதான சற்று அனாதரவான பேர்களுக்கு பண உதவி செய்ய
ஸர்காரில் திட்டம் போட்டிருக்கா. ஒரு வழியும் பண்ணி இருக்கா.
இவ்வளவு சீக்கிரம் இதுக்கு ஒரு வழி பண்றான்னு எனக்கே தெரியலே.
பரவாயில்லே,தகவல் சொல்லி உங்கள் பெயரையும் கொடுக்கலாம்.
ஐயையோ வேண்டாம்ப்பா, எனக்கென்ன ஆதரவுக்குக் கொறைச்சல்.
எல்லாரும் நன்னா இருக்கா, கஷ்டம் என்று எதற்குச் சொல்லணும்?
அது தப்பாச்சே.
நிலம் விளையும்,விளையாது. பசங்களெல்லாம் முன்னுக்குத்தானே
வரா.
அவர்களிடம் பிச்சை கேட்கிறமாதிரி இதெல்லாம் எதுக்கு?
அதெல்லாம் ஸரி. பதட்டப் படாதிங்கோ.
சும்மா எவ்வளவு பேர் இருக்கா விவரம் சேகரிக்கரா.அவ்வளவுதான்..
இதில் ஈநாயம் அதாவது குறைவு ஒன்றுமில்லை..
நான் பார்த்துக் கொள்கிறேன்.
பாருங்கள் அவர்கள் சொல்லுகிரார்கள். அந்த ஒத்தைத் தெருவில்
வீடு உள்ளவர்கள் கூட எழுதிக் கொடுத்திருக்கிரார்கள்.
வரச்சே பார்த்துக் கொள்வோம். என்ன சொல்றீங்க?
என்னவோப்பா நீ சொல்றே, சிலைபோல் நின்றிருக்கிறாள்..
விவரம் எல்லாம் விசாரித்து அவர்கள் வாத்தியாரிடம் ஒரு ஃபாரத்தைக்
கொடுத்து பூர்த்தி செய்து கையெழுத்துப் போடும்படி சொல்கிரார்கள்.
இப்போது புரிந்திருக்குமே. உங்களுக்கு.!
முதியோர் பென்ஷனுக்கு ஆட்களை சிபாரிசு செய்து,நேரில் விவரம்
அறிந்து வேலையை முடிக்க வந்தவர்கள்..
ஆரம்ப கால கட்டமில்லையா? சிபாரிசு செய்த வகையில் அவர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட யாவருக்குமே 4,5 மாதங்களிள் உத்தரவாகிவிட்டது.
சட்டம்,கொணர்ந்து நிறைவேற்றிய நல்ல திட்டமல்லவா?
அதனால் மணியார்டர் வர ஆரம்பித்து விட்டது..
இருபது ரூபாய் என்று நினைக்கிறேன்.
மற்றவர்கள் முக்கால்வாசிப் பேர்களுக்கு ஸரியான நபர் அவர்தானென்று
நான்கைந்துபேர் ஸாக்ஷிக்கு வரவேண்டி இருந்தது.
அம்மாவிற்கோ வருஷக்கணக்கில் தபால்கள் மூலம் சுதேசமித்திரன்,
பாரத தேவி போன்ற தின ஸரிகள் அப்பாவின் பெயருக்கு வந்து-
-கொண்டு இருந்ததால், அம்மாவிற்கு ஸாக்ஷிபோடக்கூட யாரும்
அவசியம் இருக்கவில்லையாம்.
போஸ்ட் மேனுக்கும் நிரந்தர வருவாயாக முதியோர்களிடமிருந்து
அன்பளிப்பும் கிடைத்தது.
ஒவ்வொருவரும் ஒரு ரூபாய்.
ஏதோ முதலில் தப்புக்காரியம் செய்வதுபோல் இருந்தது.
வாங்கிப் பழக்கமான பின்னர் யாவருக்கும், இதுவும் ரொம்பவே
உபயோகமாக இருக்கு என்ற எண்ணத்தோடு,தேதியும்,தபால்காரன்
வருகையும் அவசியமாக எதிர்ப்பார்ப்பதொன்றாகி விட்டது என
அம்மா என்னை நேரில் பார்த்தபோது சொல்லிய விஷயங்கள்தானிது,
அதோடுகூட கிராமங்களில் மாத வருவாய் என்பது எல்லோருக்குமிராது.
பண்ட மாற்றுபோல நெல் விற்றுதான் மேற்சிலவு செய்வார்கள்.
இந்த வயதானவர்களின் மாத வருவாயைப் பார்த்து, உங்களுக்கெல்லாம்
பரவாயில்லை. உண்டென்று ஜம்முனு மணியார்டர் வரது..
சொல்வதோடில்லை.
மணியார்டர் காரன் போன சிறிது நேரத்துக்கெல்லாம், ரொம்ப அவஸர சிலவு.
ஒரு 5ரூபா குடு, நாளைக்கு நெல் குத்தப் போறேன்.
அரிசியா தந்துடறேன்.
பழைய அரிசி. நன்றாக இருக்கும்.
நல்ல அரிசியை மத்தவாளிடம் கொடுப்பானேன்.
பேங்கில் அடமானம் வைத்துப் பணம் வாங்குவதுபோல செக் வார்த்தைகள்.
இது அம்மாவுக்குமாக மட்டும் இல்லை.
இந்தப்பணம் கிடைக்கும் எல்லோருக்குமான வார்த்தைகள்.
இனாமாதானே வரது,ஸமயத்துக்குக் கொடுக்கட்டுமே?
இந்த ஆதங்ககளுடன் அவர்களின் லோன் அப்ளை.
ஸேங்ஷன் எல்லாம் ஆகும். அரிசி கொடுக்கும் போது இனாமாக
கொடுப்பதுபோல அவர்களுக்கு ஒரு உணர்ச்சி வார்த்தையில் இருக்கும்.
பேத்தி உடனிருப்தால் இன்னும் பணம் வரது.
இப்படி ஸஹஸ்ர வார்த்தைகளும்,வசனங்களும் இருக்கும்.
நல்ல மனிதர்கள் நிரம்பிய ஊர்தான்.
ஸமயத்தில் இப்படியும் தொடர் கதைகள் மிக்க உண்டு.
பேத்தி உடனிருக்கிறாள். தன் பெண்களை அதிகம் படிக்க வைக்க
முடியவில்லை. பேத்தி படிக்கிறாள். ஸந்தோஷம் பாட்டிக்கு.
மேலும் அடுத்துப் பார்க்கத் தொடருங்கள். எழுதுகிறேன்.
விவரங்கள் உள்ளது. ஸரியா?
Entry filed under: அன்னையர் தினம்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
பார்வதி இராமச்சந்திரன். | 11:38 முப இல் திசெம்பர் 1, 2014
ரொம்பவும் யதார்த்தமாக உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறீர்கள்!. இம்மாதிரியான மனோபாவமும் உள்ளதுதான்.. நாணயத்துக்கு இரு பக்கங்கள்.. தேவைக்கு வாங்கிக் கொள்வதும், பின் திருப்பும் போது சுணக்கம் காண்பிப்பதும் உள்ளதே!!.ரொம்ப அருமையாகப் பகிர்ந்து வருகின்றீர்கள்!.. ரொம்ப நன்றி அம்மா!..
2.
chollukireen | 11:59 முப இல் திசெம்பர் 6, 2014
பதிலே எழுதவில்லை நான். பகிர்வு நன்றாக இருக்கிரதென்று கேட்க மகிழ்வு. எல்லாம் நடந்தவைகள்தான். நன்றி உனக்கும்தான். அன்புடன்
3.
chitrasundar | 11:02 பிப இல் திசெம்பர் 1, 2014
காமாக்ஷிமா,
அந்த நாளைய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பு. இருக்கும் விவரங்களை ஒன்று விடாமல் எழுதுங்கம்மா. ஆடம்பரமில்லாத உங்களின் எழுத்துக்களைப் படிக்க ஆசை ஆசையாய் உள்ளது. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 12:10 பிப இல் திசெம்பர் 6, 2014
தொடர்ந்து எழுதி முடிக்கவேண்டும். ரஸித்துப் பின்னூட்டம் மனதுக்குத் திருப்தியை அளிக்கிறது. தொடர்ந்து எழுதாமல் காலதாமதம் என்னுடைய சுகவீனத்தால் ஏற்பட்டு விட்டது. படிப்பவர்களுக்கு தொடர்பு கூட விட்டுப் போயிருக்கும். இனியாகிலும் ஸரிவர தொடர வேண்டும். உன் அன்பிற்கு நன்றி.
அன்புடன்
5.
chollukireen | 11:21 முப இல் மே 17, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நான்குபேர்கள் கூடி விசாரிக்கிரார்கல் என்றால் நாம் என்ன தப்பு செய்திருப்போம்? நிலம்,நீர் எல்லாம் பசங்கள்தானே? மனுஷா எல்லோருடனும் இருக்கிறோம். ஒருவரும் இல்லை,என்று சொல்வார்களா? இல்லே கஷ்டப்படுவதைப் பிறரிடம் சொல்வதா? யோசனைகள் இந்தவிதம். படியுங்கள்.பதிவு 18. அன்புடன்
6.
Revathi Narasimhan | 12:58 பிப இல் மே 17, 2021
அன்பின் காமாட்சிமா,
எத்தனை உன்னதமான மனுஷி அம்மா!!!
எவ்வளவு வெள்ளை மனசு!!
அந்தக் காலம் அப்படித்தான்.
கிராமத்தில் இருக்கும் வரை பாட்டியும் இப்படித்தான்
இருந்தார்.
சென்னை வந்த பிறகும் சிக்கனம் .உணவுக்குக் குறைவிராது.
நீங்கள் சொல்லிச் செல்லும் அழகு
மனதை நிறைக்கிறது.
நேர்மை அருமை. எல்லோரும் இருக்கும் போது
இல்லை என்று சொல்ல முடியுமா.அது தவறு
என்று யோசிக்கும் தன்மை நம்மில் எப்போதும் உண்டு.
வழியாகப் பரம்பரை தோறும்
பெண்களின் குணம் இதுதான்.
நன்றி மா.
7.
chollukireen | 11:16 முப இல் மே 18, 2021
ஆக இவ்வளவு யோசித்தும்,சொல்வதற்கே யோசித்தும் கடைசியில் கவர்மெண்டு பணம் சாப்பிட ஏதோ கணக்கு பகவான் வைத்திருக்கான். என்ன கணக்கோ தெரியலே என்றும் வார்த்தைகள் வந்து கொண்டுதானிருந்தது. இப்போது நினைத்தாலும் நேரில் பேசுவது போல இருக்கிறது. உங்களுக்கும்பாட்டியின் ஞாபகங்களைத் தூண்டி விட்டுவிட்டேன். ரஸித்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்
8.
ஸ்ரீராம் | 1:19 பிப இல் மே 17, 2021
அந்தக் காலத்தில் 20 ரூபாய் என்றால் எவ்வளவு செய்யலாம்? தபால் காரருக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ரூபாய்! நல்ல சம்பாத்தியம்!
9.
chollukireen | 11:22 முப இல் மே 18, 2021
வருமானம் என்று கையெழுத்துப்போட்டு வாங்குவது.நிம்மதியான வருவாய். காசு புழங்குவதே வித்தியாஸம். ஆறுதலாகத்தானிருந்திருக்கும். நன்றி. அன்புடன்
10.
Geetha Sambasivam | 1:28 முப இல் மே 18, 2021
நல்லதொரு செய்தி. இந்த முதியோர் ஓய்வு ஊதியமெல்லாம் இப்போது தான் தாங்கள் கொண்டு வந்தாற்போல் பேசிக்கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கு. அதுவும் 20 ரூபாய் என்பது எத்தனை பெரிய விஷயம்? நல்லதொரு பகிர்வு. நிகழ்வைக் கண் முன்னே பார்க்கிறாப்போல் எழுதி இருக்கிறீர்கள். அரியதொரு தகவல் கொடுத்ததுக்கு நன்றி.
11.
chollukireen | 11:34 முப இல் மே 18, 2021
இப்போது ஊதியமெல்லாம் உயர்ந்து இருக்கிறது. மணியார்டர் இன்ன தேதிக்கு வரும் என்று தெரியாது. அதிலும் ஆங்காங்கே ஏமாற்றுதலும் நடந்துகொண்டு இருந்தது. உபகாரங்கள் கிடைக்கும் போது அபகாரங்களும் சிலருக்கு நடந்து கொண்டிருந்தது என்று அம்மா சொல்வார்கள். ஒரு 45 வருஷங்களாகவே இந்த ஸிஸ்டம் இருக்கிரது. உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 9:54 முப இல் மே 18, 2021
முதியோர் பென்ஷன் – ஆம்….கொஞ்சம் ஏதிலிகளுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.
நல்லா எழுதியிருக்கீங்க. அந்தக் காலத்துத் தகவல்கள் மனிதர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.
13.
chollukireen | 11:45 முப இல் மே 18, 2021
ஆமாம் ஒன்றுமில்லாது இருந்தவர்களுக்கு உபகாரம்தான். ஏதிலிகள் பதப்பிரயோகம் அருமை. பாராட்டி இருக்கிறீர்கள் தகவல்களை. நன்றி. அன்புடன்