ரிஸோட்டோரைஸ். Risotto rice

ஏப்ரல் 28, 2015 at 7:20 முப 11 பின்னூட்டங்கள்

ரிஸோட்டோரைஸ்                                                                 சாப்பிட ரெடி.

வடஇந்தியா, தென் இந்தியா  என சமையல்கள் எழுதுவதுடன்

என் மருமகள் செய்த இந்த கான்டினெண்டல் வகையும பாருங்களேன்.

பேத்தியிடம் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாட்டுப்பெண்

கேட்க, அவள் ரிஸோட்டோ ரைஸ் என்று சொல்ல  எனக்கும் குறிப்பு கொடு

என்று  தெரிந்து கொண்டு,  எழுதியிருக்கிறேன்.

பல வகை குறிப்புகளை அவர்கள்  செய்கிரார்கள்.

என்ன ஒன்று. இது செய்ய அந்த ஸ்டிக்கி அரிசியை வாங்கவில்லை.

சீரகச்சம்பாவிலேயே செய்துள்ளாள்.

நான் சீஸ்,மஷ்ரூமெல்லாம் சாப்பிடுவதில்லை. பிடித்தவர்கள்

செய்து சாப்பிடலாமே!

வேண்டியவைகள்

அரிசி—-1கப்

பார்மோஸன் சீஸ்—1கப்

சுத்தம் செய்து நறுக்கிய மஷ்ரூம்—1 கப்

நறுக்கிய காரட்—அரைகப்

ஜுசுனி நருக்கியது—1கப்

ஜுசுனி. ஜெனிவாவில்குர்ஜர்

ஜுசுனி.
ஜெனிவாவில்குர்ஜர்

மேலே தூவ—-நறுக்கிய வெங்காயத்தாள் விருப்பத்திற்கிணங்க

ஆலிவ் ஆயில்—3 டேபிள்ஸ்பூன்

ருசிக்கு, உப்பு,காரத்திற்கு  மிளகாய்ப் பொடி. சிறிது

செய்முறை.

மஷ்ரூம் அமிழ  தண்ணீர் வைத்து மைக்ரோவேவ் அவனில் 4நிமிஷங்கள்

வேக வைத்து எடுக்கவும்.

தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக்  கொள்ளவும். இதுவே மஷ்ரூம் ஸ்டாக்.

காய்கறிகள் வேக வைத்து அதன் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளலாம்.

ஏதாவதொன்று.

அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து, தண்ணீரை வடிக்கட்டவும்.

ஆழமான நான் ஸ்டிக் வாணலியில்,  ஆலிவ் ஆயிலைச் சுடவைத்து

காரட்,ஜுசுனியை வதக்கவும்.

அரிசியையும் சேர்த்து வதக்கி,    மஷ்ரூம் ஸ்டாக்கும் தண்ணீருமாக

இரண்டு கப்சேர்த்து வேக வைக்கவும். அரிசி வேக எவ்வளவு தண்ணீர்

வேண்டுமோ சேர்க்கவும். உப்பு காரம் சேர்க்கவும்.

நன்றாக வெந்ததும், தீயைக் குறைத்து ஸிம்மில் வைத்து,சீஸைச்

சேர்த்துக் கிளரவும் உடன் வெந்த மஷ்ரூமையும் சேர்க்கவும்.

எல்லாம் ஒன்று சேர்த்துக் கிளறி, நறுக்கிய பச்சை வெங்காயத்தாளைச்

சேர்த்து இறக்கவும்.    ரிஸோட்டாரைஸ் தயார்.

காப்ஸிகம் சேர்க்கலாம். பீன்ஸ்,மட்டர்,காலிஃப்ளவர், ப்ரகோலி இன்னும் வேண்டியவைகள்

எதெதுவோ அவைகளைத் தேர்ந்தெடுத்தும் செய்யலாம். இது வீட்டிலிருந்ததைக்

கொண்டு செய்தது. கலர்கலராக கேப்ஸிகம்சேர்த்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்.

காஸில் பதமாகும் ரிஸோட்டாரைஸ்காஸில் இறக்குவதற்கு முன் இது.

நன்றி பிரதீஷா.

Entry filed under: கான்டினெண்டல். Tags: , .

கோபுரத்துக்கிளி. தர்பூசணி ஜூஸ்.

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN  |  9:01 முப இல் ஏப்ரல் 28, 2015

    தாங்களும் என்னைப்போலவே சீஸ்,மஷ்ரூமெல்லாம் சாப்பிடுவதில்லை என்றாலும் பிடித்தவர்கள் செய்து சாப்பிடலாமே! என்ற நல்லெண்ணத்துடன் கொடுத்துள்ள பதிவு பாராட்டுக்குரியதே !

    மறுமொழி
    • 2. chollukireen  |  12:40 பிப இல் ஏப்ரல் 29, 2015

      நாம் சாப்பிடாவிட்டாலும் புதுமை விருப்பமாக தற்காலம் விருப்பமானதொரு உணவு. பாராட்டுக்கு நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்  |  2:00 முப இல் ஏப்ரல் 29, 2015

    செய்து பார்க்கிறோம் அம்மா… நன்றி…

    மறுமொழி
    • 4. chollukireen  |  12:39 பிப இல் ஏப்ரல் 29, 2015

      செய்து பார்க்கிறோம். நன்றி தனபாலன். அன்புடன்

      மறுமொழி
  • 5. ranjani135  |  10:08 முப இல் ஏப்ரல் 29, 2015

    ஜுகுனியா? ஜுசுனியா? காய்கறியா அது? எப்படி இருக்கும்?
    மஷ்ரூம் சைவ உணவுதான். நிறைய பேர்கள் அதை சாப்பிடுவதில்லை. இங்கு எல்லாம் பழக்கம்.
    புதுவகையான ரெசிபி போலிருக்கிறது.

    மறுமொழி
    • 6. chollukireen  |  12:33 பிப இல் ஏப்ரல் 29, 2015

      ஜுசுனிதான். ஜெனிவாவில் குர்ஜர் என்று சொல்வார்கள். அங்கு நிறைய கிடைக்கும். இங்கும் கிடைக்கிறது. விலை அதிகம். இதுவும் காய்கறிதான். நான் கறியும் செய்வேன் அங்கு இருக்கும் போது. வெளிநாட்டு காய்கறிஇது. வெள்ளரிக்காய் போல விதைகளில்லை. அன்புடன்

      மறுமொழி
  • 7. ezhil  |  11:39 முப இல் ஏப்ரல் 29, 2015

    படிக்கும் போது வித்தியாசமாய் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கணும்“

    மறுமொழி
  • 8. chollukireen  |  12:37 பிப இல் ஏப்ரல் 29, 2015

    சீஸ் ஒன்று அதிகம். வெளிநாட்டுப் பெயர். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

    மறுமொழி
  • 9. adhi venkat  |  7:54 முப இல் ஏப்ரல் 30, 2015

    புதுமையாக இருக்கும்மா. நானும் இதுவரை காளான், சீஸ் சாப்பிட்டதில்லை…:)

    மறுமொழி
  • 10. chollukireen  |  11:10 முப இல் ஏப்ரல் 30, 2015

    பிட்ஸா சாப்பிடுபவர்களாயின் அதிலும் சீஸ் முக்கியப் பொருள். மஷ்ரூம் இப்போது
    டாக்டர்களாலும் சிபாரிசு செய்யப்படுகிறது. வெஜிடேரியன்தான். அன்புடன்

    மறுமொழி
  • 11. marubadiyumpookkum  |  12:11 பிப இல் மே 5, 2015

    எம் வீட்டில் / குடும்பத்தில் இதை வெஜிடபுள் பிரியாணி போல காளான் பிரியாணி என
    செய்கிறார்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2015
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 269 other followers

வருகையாளர்கள்

  • 427,538 hits

காப்பகம்

பிரிவுகள்


Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

%d bloggers like this: