உபகதைகளில் நான் எழுதும் மூன்றாவது கதையின் முடிவு.2
ஓகஸ்ட் 14, 2015 at 12:11 பிப 8 பின்னூட்டங்கள்
அறிவுடைய பூனையும் தன்னுடைய பேராபத்தைப் புரிந்து கொண்டு,பலிதா நீ சொன்னவைகளை மனதில் வாங்கி நான் யோசிக்கிறேன். யோசித்தேன். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். உன் யோசனையையும்,மதியையும் பாராட்டுகிறேன். எனக்கும் உன்னை விட்டால் யார் உதவ இருக்கிறார்கள்? நானும் ஸமயம் வரும்போது உனக்கு வேண்டிய ஒத்தாசைகளைச் செய்வேன். நான் உன் மாணவன். தஞ்சமடைகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. என்றது.
எலி கூறியது. அன்புச் சகோதரனே மிக்க அழகான பதிலைக் கூறினாய். என்னைச் சுற்றிலும்கீரி,ஆந்தை,வேடன். நான் உன் பின்னால் இந்த வலையினுள் புகுந்து விடுகிறேன். நீ என்னைக் கொன்று விடாதே. நான் உயிரோடு இருந்தால் இந்த வலையின் கயிறுகளை அறுத்து , உன்னைக் காப்பாற்றுவேன் ஸத்திய வார்த்தையிது. மெள்ள உன் கட்டை வேடன் வருவதற்குள் அறுத்து விடுவேன். லோமேஷும் அதற்கு முகமன் கூறி வரவேற்றது. பயமின்றி காரியத்தைத் தொடங்கு என்றது. நான் உனக்கு என் உற்றார் உறவினருடன் சேர்ந்து எப்போதும் நன்மை செய்து கொண்டு இருப்பேன் என்றது. எலி உள்ளே சென்றது . அதை பூனை மடியிலிருத்திக் கொண்டது. பயமின்றி எலி உறங்கியது. தரையிலிருந்த கீரியும்,மரத்திலிருந்த ஆந்தையும் ஸரி இதுவும் வலைக்குள் சிக்கி விட்டது . நாமும் போய்விட்டு வருவோம் என்று பேசிக் கொண்டது. எலி எழுந்து மெல்ல மெல்ல வலையை அறுக்கத் தொடங்கியது. அதைப்பார்த்த லோமேஷ் நண்பா சீக்கிரம் காரித்தை முடி. என்றது. பலிதன் இரவு பூராவும் மெல்லமெல்லவே காலை நேரம் ஆகும் வரை நேரத்தை நீட்டிக் கொள்வது போலத் தோன்றியது. நண்பா அவஸரப்படாதே நான் ஸமயத்தை அறிவேன். ஸமயமில்லாத உதவி இலாபமளிக்காது. அகாலத்தில் நீ விடுதலை அடைந்தால் எனக்கு பயமுண்டாகும். வேடுவன் வருவதற்குள் நான் விடுத்து விடுவேன். நீ விடுபட்டதும் முதலில் மரத்தில் ஏறுவாய். தவிர வேறு அவசியமிருக்காது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வாய் என்றது. நானும் வளையினுள் புகுந்து விடுவேன் என்றது
. பூனை கோபத்துடன் கூறியது. நல்ல மனிதர்கள், சினேகிதரின் வேலைகளை விரைவாகச் செய்து முடிப்பார்கள் உன்னைப்போலல்ல. உன் ஆயுள் முடியப் போகிறதோ என்னவோ? நீ பழைய பகையை மனதில் வைத்து தாமதம் செய்வாயாகில் அதன் பலனை நீயும் அனுபவிப்பாய். பழைய பகைக்கு என்னை மன்னித்துவிடு.சீக்கிரம் காரியத்தை முடி என்றது.
பெரிய நீதி சாஸ்திர வித்வானாகிய எலி பதில் கூறியது. எவன் ஒரு பயந்த பிராணி மூலம்நண்பனாக்கிக் கொள்ளப் பட்டானோ, எவன் தானாகப் பயந்து அவனுக்கு நண்பனாகிறானோ, இந்த இரண்டுவகை நண்பர்களும் காப்பாற்றப் பட வேண்டும். பாம்பாட்டி பாம்பின் வாயிற்கைவிட்டு எடுப்பது போல, ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். யாரும் யாருக்கும் நண்பனுமல்ல,விரோதியுமல்ல. வேடன் வரும்போது நீ பயந்து ஓடத் தொடங்குவாய். என்னை ஒன்றும் செய்ய மாட்டாய். பல கயிறுகளை அறுத்து விட்டேன். இன்னும் ஒன்றுதான் பாக்கி உள்ளது. லோமேஷா பயப்படாதே. அமைதியாக இருஎன்றது.இவ்வாறுபேசிப்பேசியேஇரவைக்கழித்தது.கிங்கரன் போன்ற உருவத்துடன் காலையில் வேடன் வருவதை இரண்டும் பார்த்தன. பூனை பயமுற்றது. எலியே இப்போது என்ன செய்வாய் என்றது. ஆந்தையும்,கீரியும்,வேடனைப்பார்த்து பயந்தது. நம்மால் இவ்விரண்டையும் தாக்க முடியவில்லை. அவைகள் காரியமாக வேண்டி நட்பு வலையில் இருக்கின்றன. நாம் நம்மிடத்திற்கே போவோம் என்று போய்விட்டன. இப்போது எலி மீதமுள்ள ஒரு கயிற்றையும் அறுத்து விட்டது. வலையிலிருந்து விடுபட்டதும் லோமேஷ் மரத்தின் மீது ஏறிக்கொண்டு விட்டது. விடுதலைப்பெற்றஎலி பலிதனும் ,விரைவாகத் தன் வளையிற் புகுந்து விட்டது. இன்னும் கதை இருக்கிறது. வேடன் ஒன்றும் கிடைக்கவில்லையே என்று வருத்தத்துடன் போனான். மரக்கிளையில் உட்கார்ந்திருந்த லோமேஷ் எலிக்கு காது கேட்கும்படி கூறியது.ஸகோதரனே என்னிடம் பேசாமலேயே உன் வளைக்குள் புகுந்து விட்டாயே! நான் உன்னிடம் மிகவும் நன்றியுள்ளவன். நான் உன் உயிரைக் காப்பாற்றி உள்ளேன். உனக்கு இன்னும் ஸந்தேகமுள்ளதா? ஆபத்து ஸமயத்தில் என்னை நம்பினாய். இது நட்பின் ஸுகத்தை அனுபவிக்கும் காலம். நீ ஏன் அருகில வர பயப்படுகிறாய்? நீயும் தீய மனிதர்களைப் போல் தானா? என் பந்து மித்ரர்களுடன் உன்னை உபசரிப்பேன். நீ எனக்கு உயிரளித்தவன். என் எல்லா ஆஸ்திகளையும் உனக்குக் கொடுக்கிறேன். நீ ஆலோசனையில் மிகச்சிறந்தவன் என்றது. பூனையின் இந்த மென்மையான மொழிகளைக்கேட்ட எலி சொல்லியது நண்பா எனக்குத்தோன்றியதைச்சொல்லுகிறேன். நண்பர்கள், பகைவர்கள் எல்லோரையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.எப்போதும் யாரும் நண்பனாகவோ,பகைவனாகவோ இருப்பதில்லை. ஒருவருக்கொருவர்நண்பனும்,பகைவரும் ஸமாதானம் செய்து கொண்ட பின்னும், அவர்களுக்கு ஆபத்து நேரும் போது அவரவர்கள் தன்னலத்துடன்தான் செயல்படுவார்கள். நட்பும்,பகையும்நிலையானபொருளல்ல.நம்பிக்கைக்குரியவனையும்தகுதி இல்லாதவனையும் அதிகம் நம்பக்கூடாது. இவ்வுலகில் சுயநலமே சாரமானது. நீயும் நானும் ஸமமாக உதவி செய்து கொண்டாயிற்று.கணவன்,மனைவி,ஸகோதரன் முதலானவர்களின் பிரேமைகூட சுயநலம் வசப்பட்டதாகும். அவர்கள் இயல்பாக அன்பைக் காட்டினாலும்,சில ஸமயம் கோபிக்கத்தான்செய்கிரார்கள் நீசபலத்தினால்தான் வலையில் சிக்கினாய். ஸமயம் மனதை மாற்றுகிறது. இந்த நேரத்தில் உன் அன்பை எப்படி நம்புவது? நானும் ஸுயநலத்திலிருந்து விலகவில்லை. நம்மிருவரிடமும் அதிக வேறுபாடுகள் உள்ளன. உன் பந்துக்கள் என்னைக் கொல்ல மாட்டார்களென்பது என்ன நிச்சயம்? நீயும் பசியுடனிருக்கிராய். நம் மிருவரின் உத்தேசம் முடிந்து விட்டது. உனக்கு நன்மை உண்டாகட்டும். எனக்கு இவ்வளவு தூரத்திலிருந்தும் உன்னிடம் பயமுண்டாகிறது. நீயும் என் நன்மையைக்கோரு. . நானும் ஓடிவிடுகிறேன். நீயும் வேடுவனிடமிருந்து தூர விலகிப்போ என்றது. வேடன் பெயர் கேட்டதும் பூனையும் நடுநடுங்கி வேறு பக்கம் நோக்கிச் சென்று விட்டது.
இவ்வாறு அந்த பூனை எலி கதையைச் சொல்லி முடித்து பிதாமஹர் சொன்னார். இந்த நீதி தர்மத்திற்கு அனுகூலமானது. சிறந்த அறிவை உபயோகப்படுத்தி நண்பன் பகைவன்வித்தியாஸம், சண்டை,ஸமாதான ஸந்தர்ப்பம்,ஆபத்திலிருந்து விடுபடும் உபாயம், பகைவனுக்கு ஸமமான பலம் இருக்குமானால் அவர்களிடம் ஸமாதானம் செய்து கொண்டு உபாயத்தால் காரியத்தை சாதித்தல் போன்ற வழிகளையும் சொல்லி முடித்தார்.மன்னனுக்கு உபயோகமான கதை இது.
Entry filed under: பாரதக்கதைகளில் சில. Tags: ஒத்தாசை, சீடன், தஞ்சம், பேராபத்து, மனதில்வாங்கி.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:45 முப இல் ஓகஸ்ட் 15, 2015
எலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாடம். அருமையான கதை அம்மா.
2.
chollukireen | 7:44 முப இல் ஓகஸ்ட் 19, 2015
மிக்க மகிழ்ச்சி. நிறைய பாடங்கள் எலியின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது. எனக்கும் கதை மிகவும் பிடித்திருந்தது.மறுமொழி ஸரியாகச் சொன்னீர்கள் அதில் ஒரு திருப்தி. அன்புடன்
3.
chitrasundar | 7:42 பிப இல் ஓகஸ்ட் 15, 2015
காமாஷிமா,
எலியின் வார்த்தைகளில் உண்மை பொதிந்துள்ளது. முக்கியமாக சுயநலம் பற்றியது :))
நம்பிக்கைக்குரியவனையும் தகுதி இல்லாதவனையும் அதிகம் நம்பக்கூடாது ______ நம்பிக்கைக்குரியவனை நம்பக்கூடாது என்பது ஆச்சரியமா இருக்கே ! ஒருவேளை அந்த நாளில் அப்ப்டி இருந்திருக்கலாம்.
நல்ல கதை, மேலும் தொடருங்கள் அம்மா ! அன்புடன் சித்ராசுந்தரமூர்த்தி.
4.
chollukireen | 7:52 முப இல் ஓகஸ்ட் 19, 2015
நம்பிக்கைக்கு உரியவனுக்கும் சுயநலம் வராதிருக்குமா? எல்லோரிடத்திலும் உஷாராக இருக்க வேண்டும் போலுள்ளது. நல்ல கதை என்கிராய். பின்னூட்டங்களே மாமூலள வுகூட வரவில்லை. அடுத்து கதை எழுத யோசனையாக இருக்கிரது. நன்றி சித்ரா. அன்புடன்
5.
chitrasundar | 2:40 முப இல் ஓகஸ்ட் 20, 2015
காமாஷிமா,
ஆமாம், சரிதான். இன்னமும் ‘நம்பித்தானே கொடுத்தேன்’, ‘உன்னைத்தானே நம்பினேன்’ என்றெல்லாம் சொல்லக் கேட்கிறோமே !
“அடுத்து கதை எழுத யோசனையாக இருக்கிறது” _____________ கதையும், கருத்துக்களும் வித்தியாசமா நல்லாத்தானே இருக்கு. படிக்க நாங்கள் இருக்கிறோம் ! மனம் தளராமல் எழுதுங்கம்மா. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 5:10 முப இல் ஓகஸ்ட் 20, 2015
இதுதான் அன்பென்பது. ஊக்கம் கொடுத்து எழுதுகிறாய். எழுதவேண்டும். எழுதுகிறேன். இன்னொரு ஸமாசாரம் ப்ளாகரில் காமாட்சி என்ற பெயரில் எழுத இன்று ஆரம்பித்தேன். எழுதுவது ப்ளாகரிலும் வரவேண்டுமென்ற ஆசை. நினைத்ததை எழுதலாமே? ஆசைதானே தவிர முடியுமா என்ற கேள்வியும் உடனெழுகிறது. எதுவும் கட்டாயமில்லை. பார்ப்போம். உன் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி அன்புடன்
7.
marubadiyumpookkum | 8:24 முப இல் ஓகஸ்ட் 18, 2015
not only to kings, it is applicable to all yes ma…thanks vanakkam,
8.
chollukireen | 7:55 முப இல் ஓகஸ்ட் 19, 2015
நீங்கள் சொன்னால் ஸரியாகத்தானிருக்கும். பின்னூட்டம் மிக்க மகிழ்வளிக்கிறது. நன்றியும், ஆசிகளும். அன்புடன்