சென்னை ஸென்ட்ரலில் மும்பை பிள்ளையார். இங்கும்

செப்ரெம்பர் 15, 2015 at 10:16 முப 16 பின்னூட்டங்கள்

சென்ற வருஷம் பிள்ளையாரே வாரீர்,பெருமாளே வாரீர் என்று கூப்பிட்டோம். செய்தித்தாளில் மும்பைப் பிள்ளையார் ஸென்ட்ரல் ஸ்டேஷனில்.  சென்னையைப்பார்க்க அருள்பாலிக்க போட்டோ வெளியாகி இருந்தது.

கணபதி சென்னையில்.

சென்னை ஸென்ட்ரலில் மும்பை கணேஷ் வருகிறார். பராக். எச்சரிக்கை

சென்னை ஸென்ட்ரலில் மும்பை கணேஷ் வருகிறார். பராக். எச்சரிக்கை

சென்னை சென்று விட்டார் கணேஷ்.  எனக்கு கடைப்பிள்ளையார்களைப் பார்க்க வேண்டுமென்றேன்.  என் மகனிடம். மறந்து விட்டது போலும்.  நேற்று ஜி மெயிலில்   ஆபீஸினின்றும் வரும்போது படங்களாக அனுப்புகிறான். உயர்ந்த பதவியிலிருந்தாலும், அம்மாவுக்காக   இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி,    பேப்பர் மூட்டங்களை நீக்கி ஞாபகமாக அனுப்பி இருந்தார். எத்தெத்தனை கணேஷ்ஜிக்கள். எங்கெங்கு ஆவாஹனமோ?  முன்னதாக நம் மனதிலும் ஆவாஹனம் செய்யலாம்.  அப்புறம் பூஜைக்குப் பின்னர் மண்டல்களின் கணேஷ்ஜீக்களையும் பார்க்கணும் என்று நினைக்கிறேன். பார்க்கலாமா? முதலில் எந்த கணேஷ்?

அழகிய மஹா கணபதியா நீங்கள்

அழகிய மஹா கணபதியா நீங்கள் நமஸ்காரம்.

வாங்க அடுத்தபடியா என்த கணபதி?

இரட்டை கணபதி

இரட்டை கணபதி

அப்புறம் அடுக்கடுக்காய் அலங்கார விபின்ன கணபதிகள்

எத்தனை கணேஷுகள்

எத்தனை கணேஷுகள்

இன்னும்

குறுகுறுப்பாக

குறுகுறுப்பாக

இன்னும்

பச்சை வண்ணப் பாங்கா

பச்சை வண்ணப் பாங்கா

IMG_2702என்னப் பாருங்கள்

நான் எவ்வளவு ஓபனா தரிசனம் கொடுக்கறேன். பாருங்கள். வணங்குவோம்.

நான் எவ்வளவு ஓபனா தரிசனம் கொடுக்கறேன். பாருங்கள். வணங்குவோம்.

மிகுதி   ஆனந்த சதுர்த்தி  தரிசனத்தில்  நிறைய மண்டலிகளின்   வினாயகர்களைத் தரிசனம் செய்வோம்.  சென்னை சென்றகணேசரைப் பார்த்து   மும்பை கணேஷுகளையும் பார்க்க உதவியது  என் பிள்ளைக்கு மிகவும் நன்றி.

Entry filed under: படங்கள். Tags: .

ஸந்தோஷச்செய்தி மும்பைப் பிள்ளையார்கள்.

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135  |  12:10 பிப இல் செப்ரெம்பர் 15, 2015

    இந்த முறை பிள்ளையார் ஸ்பெஷல் ‘பாகுபலி பிள்ளையார்’ தான்! பாகுபலி படத்தில் பாகுபலி சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு வருவதுபோல ஒரு காட்சி. அதே போல செய்த பிள்ளையார் தான் இந்த வருட ஸ்பெஷல்!

    நீங்கள் போட்டிருக்கும் சிறப்புப் படங்களும் நன்றாக இருக்கின்றன.

    விநாயக சதுர்த்தி திருவிழா நல்வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  3:35 பிப இல் செப்ரெம்பர் 18, 2015

      அப்படியா? பாகுபலி படம் நான் பாரக்கவில்லை. இவ்வருடத்திய விசேஷம் எந்த பிள்ளையார் நாளை பேப்பர் பார்த்தால்தான் தெரியும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. யாவருக்கும் விசேஷ வாழ்த்துகள். பார்க்கலாம். கணபதி தரிசனத்தில் இன்னும் என்ன பார்க்கலாம் என்று. இன்னும் ஒரு வாரத்திற்குமேல் தரிசனம் செய்யலாமே. அன்புடன்

      மறுமொழி
  • 3. பிரபுவின்  |  1:54 பிப இல் செப்ரெம்பர் 15, 2015

    அழகான,நேர்த்தி மிக்க கணபதி சிலைகள்.உங்கள் பிள்ளைக்கு நானும் நன்றி சொல்லுகிறேன்.கணபதியின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கட்டும்.
    நன்றி அம்மா.அன்புடன் பிரபு.

    மறுமொழி
    • 4. chollukireen  |  3:39 பிப இல் செப்ரெம்பர் 18, 2015

      இன்னும் ஏராளமான பிள்ளையார்கள் மும்பையில் தரிசனம் செய்யக் கிடைக்கும். பத்து நாட்கள் கோலாஹலம்தான். உங்கள் வரவுக்கும் அன்பான பதிலுக்கும் மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      மறுமொழி
  • 5. இளமதி  |  2:20 பிப இல் செப்ரெம்பர் 15, 2015

    கண்ணில் ஒற்றிக்கொண்டேன் அம்மா!

    அழகிய வடிவங்கள்!..
    அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டுகிறேன் அம்மா!

    மறுமொழி
    • 6. chollukireen  |  3:42 பிப இல் செப்ரெம்பர் 18, 2015

      உன்னுடைய வேண்டுதல்கள் பலிதமாகட்டும்.நல்ல பொதுவான வேண்டுதல். நன்றி பெண்ணே. அன்புடன்

      மறுமொழி
  • 7. ஸ்ரீராம்  |  12:30 முப இல் செப்ரெம்பர் 16, 2015

    அழகிய விநாயகர் படங்கள். கிரிக்கெட் ஆடும் பிள்ளையார், மௌஸ் பிடிக்கும் பிள்ளையார், கண்ணாடி அணிந்த பிள்ளையார் என்று படங்கள் அணிவகுக்கின்றன. ரஞ்சனி மேடம் சொல்லி இருக்கும் பாகுபலி பிள்ளையார் இதுவரை கண்ணில் படவில்லை! பார்க்க வேண்டும்!

    மறுமொழி
    • 8. chollukireen  |  3:57 பிப இல் செப்ரெம்பர் 18, 2015

      நானும் பாகுபலி வினாயகரைத்தான் தேடுகிறேன். எங்கு கிடைப்பார். பார்த்தால் சொல்லுங்கள் என் நமஸ்காரத்தை. அன்புடன்

      மறுமொழி
  • 9. Geetha Sambasivam  |  10:33 முப இல் செப்ரெம்பர் 16, 2015

    அருமையான பிள்ளையார்கள். இந்த வருஷம் சென்னையில் கிரிக்கெட் ஆடும் பிள்ளையார்னு கணேஷ் பாலா போட்டிருந்தார். அவரை நான் பல வருடங்கள் முன்னரே மும்பையில் பார்த்திருக்கேன். உலகக்கோப்பை நடந்த சமயம். சென்னைக்கு இப்போத் தான் வந்திருக்கார் போல!

    மறுமொழி
  • 10. chollukireen  |  4:00 பிப இல் செப்ரெம்பர் 18, 2015

    ப்ளைட் கிடைத்திருக்காது. பார்த்த பிள்ளையார்கள் கூட ஞாபகம் மறந்து விடுகிரது. நீங்கள் பாகுபலியைப் பார்த்தீர்களா? அன்புடன்

    மறுமொழி
    • 11. Geetha Sambasivam  |  12:18 முப இல் செப்ரெம்பர் 19, 2015

      பாகுபலி சினிமாவும் பார்க்கலை, பிள்ளையாரையும் பார்க்கலை.🙂 சினிமாவெல்லாம் தியேட்டர்களில் போய்ப் பார்க்கும் வழக்கம் எண்பதுகளோடு முடிந்து விட்டது. ராணுவக் குடியிருப்பின் திறந்த வெளி தியேட்டர்களில் சில சமயங்கள் (எண்பதுகளின் கடைசியில் )பார்த்திருக்கோம். மற்றபடி தொலைக்காட்சியில் எப்போவேனும் பார்ப்பது தான். பாகுபலி நான் பார்க்கணும்னா இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும்!🙂

      மறுமொழி
      • 12. chollukireen  |  11:16 முப இல் செப்ரெம்பர் 20, 2015

        நானும் அபூர்வமாக யாராவது கட்டாயம் செய்து கூட்டிப்போனால் பார்ப்பதுண்டு. அதற்கே சால் எடுத்துக் கொள்வேன். தமிழில்லா ஊர்கள், என்னவோ Tvஇலாவது பார்க்கலாம் இல்லையா.எதுவும் வழக்கம் இல்லை. மெள்ளவே பாருங்கள். உங்களைப்பற்றியும் பாகு பலியால்தானே தெரிந்து கொள்ள முடிந்தது. ரஸிக்கும்படியான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. அன்புடன்

  • 13. chitrasundar  |  2:26 முப இல் செப்ரெம்பர் 19, 2015

    காமாஷிமா,

    பலவிதமான பிள்ளையார்கள் கண்ணைப் பறிக்கிறார்கள். உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா. கொழுக்கட்டை சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் லேட்டாயிடுச்சு🙂 அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 14. chollukireen  |  11:20 முப இல் செப்ரெம்பர் 20, 2015

      இன்னும் பல பெரிய பிள்ளையார்களைப் பார்த்து வந்தேன். சுலபமாக பார்க்க முடிந்ததை. ஆசைகள் எதற்கும் கூடாது. வயது கூடவே வருகிறது. கொழுக்கட்டைதான் முக்கியமான நிவேதனம் இல்லையா? அதற்குதான் முன்னுரிமை. வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 15. Jayanthi Sridharan  |  8:39 முப இல் செப்ரெம்பர் 19, 2015

    Mami, Nice sharing. I saw Bahubali Pillayar’s picture in The Hindu Online today. For infn.

    மறுமொழி
  • 16. chollukireen  |  11:27 முப இல் செப்ரெம்பர் 20, 2015

    ஸந்தோஷம் ஜயந்தி. பாகுபலி பிள்ளையார் படத்தை நானும் ஹிந்துவில் பார்த்தேன். விவரத்திற்கு நன்றி. ப்ளாகர்டாட்காமிலும் காமாட்சி என்ற பெயரில் வலைத்தளம் எழுத முயற்சித்திருக்கிறேன். எல்லோருடைய பின்னூட்டத்திலும் குறிப்பிட நினைத்தும் ஸமயத்தில் மறந்து விட்டேன். முடிந்தபோது வந்துபார். அன்புடன்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


செப்ரெம்பர் 2015
M T W T F S S
« Aug   Oct »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 256 other followers

வருகையாளர்கள்

  • 392,094 hits

காப்பகம்

பிரிவுகள்


எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

Support

WordPress.com Support

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

The WordPress.com Blog

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: