Archive for மார்ச் 16, 2016
ஒரு பரோபகாரத் தந்தை.

உதவி
துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை மற்றவர்களுக்கும் இம்மாதிரி கஷ்டம் நேரிடக் கூடாது என்று, அதற்குத் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று,செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என் மனதை மிகவும் நெகிழ்த்தியது.
பார்க்கப்போனால் இவர் அன்றாடும் காய்கறிகளைத் தள்ளு வண்டியில் வைத்து விற்று அந்த வருமானத்தில் இரவு,பகல்,மழை,வெயில்,குளிர் எதுவும் பாராது,அலைந்து திரிந்து சம்பாதித்தால்தான் குடும்பம் ஓடும். மும்பை அந்தேரி பகுதியில் விஜயாநகர் இவர் வியாபார ஏரியா. தான் படும் கஷ்டம் பிள்ளைக்கு வரக்கூடாது என்று,ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவைத்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,டிப்ளமா என்ஜீயனிரிங் படிப்பதற்காக ஒரு பாலி டெக்னிக் கல்லூரிக்குஅவருடைய பிள்ளை தனது நண்பருடன் சென்றுவிட்டு மோட்டர் ஸைக்கிளில்வரும் போது, எதிர் பாராத வகையில் வீதியில் மழை நீரால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தில் வீழ்ந்து இருவரும்தூக்கி எறியப்பட்டனர். இவரின் பிள்ளை பலத்த அடியில் உயிரிழந்தான் தந்தை தாதாராவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. தனது பெண்ணிற்காக அதிகம் துக்கத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதன்பிறகு மகனுக்கு செலுத்தும் அஞ்ஜலியாக, பிரருக்கு இம்மாதிரி கஷ்டம் நேரிடாமலிருப்பதற்காக, காய்கறி விற்கும்போதே வீதியில் எங்கு குழி,பள்ளங்கள் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பார்த்து நிரப்புகிரார்.
இதை ஆரம்ப நாட்களில் பலர் வேடிக்கைப் பார்த்தனர். தற்போது என்னுடன் ,பலர்ஒத்தாசையும் புரிகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. இது ஸம்பந்தமாக சாலை பராமரிப்பு நிறுவனம்மீது, போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் 6,7 மாதங்களாகியும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என்று கனவு கண்டேன் அவ்வளவு புத்திசாலிமகன். எங்களைவிட்டு மகிழ்ச்சி சென்று விட்டாலும், என் மகனுக்குச் செலுத்தும் அஞ்ஜலியாக இதைச் செய்து வருகிறேன் என்கிரார் தாதாராவ்.
பின் குறிப்பு. மனம் நெகிழ்ந்த வேளையிலும், தாதாராவ் குழிகளை நிரப்பி அஞ்ஜலி செய்வது மனதை நெகிழ்த்துகிறது. இது ஒரு மாதத்திற்கு முந்தைய பேப்பரில் வந்த ஸமாசாரம்தான்.பெற்றமனம். இதுதான். என்னுடைய கேமரா பழுதாகி இருந்ததால் அப்போது போட நினைத்த ஸமாசாரமிது.