Archive for மே 12, 2016

தொட்டில்-3

imagesஅழகுத் தொட்டில்கள்படஉதவி   –கூகலுக்கு நன்றி
ஒவ்வொருகதையாக நான் முன்னே நீ முன்னே என்று மனதில்  போட்டிபோட ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒன்றுக்கொன்று ஸம்பந்தமிருப்பதுபோலத் தோன்றினாலும்  இம்மாதிரி எல்லாம் இப்போது சொல்லிக் கேட்க கூட முடியாது.அவ்வளவு உஷாரான காலமிது. இப்போது நடப்பவைகள்  இன்னும் புதியமாதிரி உள்ளது. முன்பு ஸ்வீகாரம் அதாவது தத்தெடுப்பது  என்பது சுலப காரியமில்லை.  பணம்,காசு,ஸொத்து,ஸுதந்திரம்,வீடுவாசல் எல்லாமிருந்து ,அதிலும்நல்லகுடும்பமாக,நெருங்கியஉறவினர்கள்தான்,பங்காளிகளாக இருந்தால்தான்தத்து எடுக்கவோ, கொடுக்கவோ விரும்புவார்கள். நல்லது கெட்டது
நம் கையிலா இருக்கிறது குடும்பத்தில் உள்ள. எல்லோருக்கும் கஷ்டப்படாத வகையில் சொத்துக்களை எழுதி ரிஜிஸ்டர் செய்து விட்டு , ஆசார அனுஷ்டானத்துடன்  உறவினர்முன்,  விதி பூர்வமாக தத்தெடுப்பது என்பது  விருந்துகளுடன் முடியும். பிறகு நல்ல நாளில்   தத்தெடுத்தவர்கள் ஸ்வீகாரப் பிள்ளைக்கு உபநயனம்,பிரமோபதேசம் செய்வார்கள். தத்துக்கொடுத்த பெற்றோர்களுக்கு அதிலும் தாய்க்கு  கனமான பவுனிலான சங்கிலி கட்டாயம் போடுவார்கள்

. மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.நல்ல கனமாகத்தான் சங்கிலி இருந்தது.     வம்பில்லை இது. வழக்கமான  டயலாக். ஸொத்தே அவர்கள் வசம் வருகிறது.  ஒற்றுமையும்,நேசமும் வளர்க்கத்தான் பாடு படுவார்கள்.  எங்கோ ஒன்று ஆக்கிரமிப்புபோல அமைந்து விடுவதும் உண்டு.ஏதோ எனக்கு ஞாபகம் வந்த சிறிதளவு ஸமாசாரமிது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்பவர்களைக்கூட சில ஸமயம்   ஸ்வீகாரம் விடாது.   அந்த ஒற்றைத்தெரு   கோகிலா பாட்டி,தாத்தா எதுவும் வேண்டாம். எல்லாம் கோவிலுக்குக் கொடுத்து விடலாம்,குழந்தை இல்லா விட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டிருந்தவர்    திடீரென்று  போய்விட்டார். குழந்தை  வளர்ப்பதிலும் கஷ்டங்கள் எவ்வளவோ உள்ளது. தானமாக எழுதி வைத்து விடலாம் என்றவர்தான்அவ்வளவாகவயதுமுதிர்ந்தவரும்இல்லை.காயோ,கறியோ,பழங்களோ, எல்லாம் ஏழைகளுக்கு வாரிவாரி வழங்கியவர். சற்று வயதான பாட்டி. என்ன செய்ய முடியும். அவ்வளவாக விவகாரம் போதாது. ஊர்க்காரர்கள்  சேர்ந்து பாட்டியின்   தம்பியின் பேரனை  ஸ்வீகாரம் செய்து வைத்தனர்.

தம்பி யாவற்றையும் பார்த்துக் கொண்டார். அதிக வருஷம் பாட்டி உயிருடனில்லை.  கோவில் முதலானவற்றிற்கும் ஏராளமாக கொடுத்தார்கள். காலம் சென்று கொண்டே இருந்தது. பாட்டியின் மகனும் அழகிய வாலிபனாகி,படித்து,முடித்து தில்லியில்  வேலைக்குப் போனான். என்ன நீங்களே சொல்வீர்கள் காதலா? என்று. ஆமாம் அதுவேதான். கூட வேலை செய்யும் அழகியபெண். மிக்க சினேகம்தான். இவன் மனதில் ஒருதலைக்காதல்போல. அது தெரியாத அந்தப்பெண்    வேறு நண்பருடன் திடீர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு பார்டிக்கு அழைக்க   பையன் விட்டு விட்டான் மனதை.

பயித்தியம் பிடித்தவன்போல் பிதற்ற ஆரம்பித்து விட்டான்.
கலங்கிவிட்டது மனம். கூட இருந்தவர்கள் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுக்க, ஓடினார்கள் பெற்றவர்கள்.எதுவும் தெரியாதவர்கள்.  மனதை விட்டுவிட்ட பிள்ளையைப் பார்த்து, காரணம் மற்றவர்கள் சொல்லக் கேட்டு பதறி ஊருக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவுதான்  எதிரில் யாரைப் பார்த்தாலும்   உன்னை நான் எவ்வளவு காதலித்தேன். உன்னிடம் சொல்வதற்குள், என்னை நீ புரிந்து கொள்ளவில்லையே! இப்படி செய்து விட்டாயே, இது ஸரியில்லை, நான் உன்னை  விரும்புகிறேன் என்று   திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்து விட்டான். ஊரில்   வீட்டுக்கு வீடு அறியாத பெண்கள். வாசலில் தலைகாட்டவே பயம்.தப்பித் தவறி பெண்கள் எதிர்ப்பட்டால்     மிகவும் கஷ்டமாகிவிடும்.வயித்தியம் அவர்கள் செய்தாலும் , வீட்டில் அவனைத் தக்க வைக்க முடியவில்லை.

அந்தகாலத்துவயித்தியங்கள்மந்திரம்,தந்தரம்,ரக்ஷை,திருஷ்டி என்று பலவகைகள் செய்து அவன் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே   கஷ்டமாக இருந்தது. பெண்கள் உள்ள வீட்டின் வாசலில்ப் போய் உட்கார்ந்து விடுவான்.  இதனால் எவ்வளவு புரிந்து கொண்ட குடும்பங்களாக இருந்தாலும்  மனஸ்தாபங்கள் உண்டாக ஆரம்பித்தது.   ஏச்சு பேச்சு சண்டை,சச்சரவு அளவிற்கு உயர்ந்தது.  ஏதோ நல்ல  காலம். இதெல்லாம் பாட்டிக்கு இல்லை. சென்னையில் நல்ல டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிந்து, அவ்விடம் அழைத்துப்போனதில்,   யார் செய்த புண்ணியமோ,  படிப்படியாக உடல்நிலை முன்னேறியது.  திரும்ப அதே வேலையிலும் சேர அனுமதி வந்தது.சுபாவத்தில் மிகவும் ஒழுங்கான பையன்.

டாக்டரின் ஆலோசனை     பையனுக்கு   நல்லதொரு விவரங்கள், உண்மை அறிந்த பெண்ணாய்ப் பார்த்து விவாகம் செய்வித்து, தாய்தந்தையர்களான நீங்களும் உடன் போய் இருங்கள்.   எல்லாம் ஸரியாகிவிடும் என்று  மருந்துகள் ஏதோ  சிறிது நாட்களுக்கும் கொடுத்தார்.   எல்லாம்ஸரி.  பெண் யார் கொடுப்பார்கள். பிள்ளைக்கு வசதிகளுக்குக் குறை ஒன்றுமே இல்லை.   ஊரே அவனால் சினேகமிழந்தது. இதற்கு வழி யார் வகுப்பது? பெரிய கேள்விக் குறி யாவர் மனதிலும்.    விடை எப்படிக் கிடைக்கும். வேலைக்குப் போயாக வேண்டும். ஊர் மட்டிலும் மாற்றிக் கிடைத்தது.அம்மா மிகவும்  நல்ல பெயரெடுத்தவள்.  அவள் பெண்ணையே , உன் பெண்ணைக்கொடு.  நான் யாரிடம் கேட்பேன்? இந்த உபகாரம் செய்.  வேறு வழி இல்லை. ஸ்வீகாரத்தில் புத்ரான் தேஹி என்று  பிள்ளையை யாசகமாகக் கேட்பார்களாம்

. நான் உன்னுடன் பிறந்தவனுக்காக   மருமகளாகத் தானம் கொடு என்று கேட்கிறேன் என்று  அறற்றி இருக்கிரார்கள்.பின்னிப் பிணைந்த குடும்பமது. எவ்வளவோ யோசித்திருப்பார்கள்.   பல டாக்டர்களைக் கலந்து ஆலோசித்திருப்பார்கள்.   ஆடம்பரமில்லாது   திருப்பதியில்ப் போய்த் தன் பெண்ணை, விவாகம் செய்து கொடுத்துவிட்டனர் அந்த பாசமுள்ள தம்பதியினர். குடும்பம் தொடங்கியது.அந்தப்பெண்ணும் எவ்வளவு பயந்திருப்பாள்? வேளை நன்றாக இருந்தது.

யாவும் நல்ல படியே சென்று ஒரு குழந்தையும் பிறந்தது. நேசம் மிகுந்தது. குழந்தைதான் சற்று மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்தது. திரும்பவும்கவலைகளா? அதிக மாதங்கள் அது ஜீவித்திருக்கவில்லை

நெருங்கிய  உறவில்  ஸம்பந்தம்  செய்வதால் இம்மாதிரி குறைகள் உண்டாகிறதென்று அறிந்த காலமது.அவளுக்கு   அடுத்து கர்பகாலத்திலேயே தக்க மருந்துகள் சாப்பிட்டுத் ,தற்காப்பு முறையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்க்கை எந்த சிக்கலுமின்றி  வளமாக ஓடி   பாட்டி தாத்தாவின் வம்சம் விளங்கியது

.  ஊர் ஜனங்களுக்கு  ஓரளவு   நெருங்கிய உறவில் ஸம்பந்தம் எந்தளவிற்குப் பாதிக்கிறதென்ற நீதி போதனையும் கிடைத்தது.    எவ்வளவு சிக்கல். வேண்டாமென்றாலும் விடாத தொட்டில் ஸம்பந்தம்.  நினைவுகள் இன்னும் கரை புரள்கிறது. இன்றும் உறவில் ஸம்பந்தம் என்பது அறவே ஒழிக்கப்படவில்லை. நல்ல காலம் இருந்தால் இராகுகாலம் ஒன்றும் செய்யாது என்பது இதுதான் போலும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மே 12, 2016 at 6:31 முப 12 பின்னூட்டங்கள்


மே 2016
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,150 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.