Archive for ஜூலை 27, 2017
விளக்கு பூஜை நினைவுகள்.
டில்லியில் எப்போதோ நடந்த விளக்கு பூஜையின் படங்கள். மலரும் நினைவுகள் மயூர் விஹார்—மேதா அபார்ட்மென்ட். நாங்கள் ஒரு பத்து தமிழ்க்குடும்பம் இருக்கும்.
வேலைக்குப் போகிறவர்களும் வருவதற்காக சனிக்கிழமைகளில் லலிதா ஸஹஸ்ரநாமம், குத்து விளக்குபூஜை ஆடி,தை வெள்ளிக்கிழமைகள்,நவராத்ரி பத்து தினங்கள் என ஒன்று தவராது செய்தவைகள். ப்ளாகில் போட்டுப் பார்ப்போமா… படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!!
நடுவில் ஒரு விளக்கு. சுற்றிலும் உட்கார்ந்து பூஜை. நிவேதனம் லலிதா அதான் கனராபேங்க் மாமி செய்கிரார். தில்லி ரோஜா இதழ்களாகவேபூஜை.
நினைத்துப் பார்க்கவே ஆனந்தம். அடுத்து கிடைத்த படங்களெல்லாம், டில்லி நினைவுகளாகக் கிடைத்த சில பழைய படங்கள். ஆடி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வந்தது. அவ்வளவே.