Archive for மார்ச் 25, 2022
துளசித்துதி
இது பல வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டப் பதிவு இது. இன்று வெள்ளிக்கிழமை. துளசி ஸ்தோத்திரம் படித்தால் நல்லது. விரும்புவீர்கள் என்று பதிவிட்டுள்ளேன். அன்புடன்
நம்மில் யாவர் வீட்டிலும் துளசிச் செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்கு
சுற்றிலும் கோலமிட்டு,மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது
தொன்று தொட்டு வரும் பழக்கம்.
வீட்டுப் பெண் குழந்களுக்கு கோலம்போட, பக்தியை வளர்க்க என்று கலைக்கும்,தெய்வ பக்திக்கும்
ஒன்று சேர அப்யாஸிக்கப் படுகிறது என்பதும் என் எண்ணம்.
அதிலும் வெள்ளிக் கிழமைகள்,ஆடி,தைமாத வெள்ளிக் கிழமைகள்,
என விசேஷமாக பூஜிப்பதும் உண்டு.
மாக்கோலத்துடன் செம்மண் பூச்சும்,பூக்களுடன் விசேஷ பாயஸ நிவேதனத்துடன்
பூஜித்து ,ஸுமங்கலிகளுக்கு வெற்றிலை,பாக்கு,பழங்கள்,குங்கும சந்தனத்துடன்
அளிப்பதும் உண்டு.
கார்த்திகை மாத சுக்கில பக்ஷ துவாதசியில் துளசி கல்யாணம் என்று கொண்டாடுவதும்
உண்டு.
அப்பொழுது
நெல்லிக் கிளையை மஹா விஷ்ணுவை மனதிலிருத்தி துளசியுடன் சேர்த்து வைத்து
பக்ஷ பரமான்னத்துடன் பூஜிக்கலாம்.
நெல்லிக்காயில் விளக்கேற்றி பூஜிப்பவர்களும் உண்டு.
நேபாளத்தில் ஆடிமாதம் துளசியை நடுவதற்கும் வாத்தியார் வந்து
முறைப்படி நடுவார். இது நேபாளத்து வழக்கம்.
கார்த்திகை மாதம் துளசி விவாக தினத்தன்று, ஹோமம் வளர்த்து, அதையும்
மந்திர கோஷத்துடன் கொண்டாடும் வழக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.
குளிர் நாட்களில் துளசி பட்டுப் போய்விடுவதால், வருஷா வருஷம் நடுவதும்
ஒரு விசேஷநாளாகிறது.
நம்மில்
ஸாதாரணமாக தினமும் தமிழில் துளசித் தோத்திரம் எல்லோரும் சொல்வார்கள்.
அதை எனக்குத் தெரிந்த அளவில்ப் பதிவிடுகிறேன்.
இதைப் படித்து வந்தால் சிறிது நாட்களிலேயே மனப்பாடமாகிவிடும்.
தினமும் மனதினால் இதைச் சொன்னாலே போதும். அவ்வளவு நல்லது.
ஒரு சிறிய தொட்டியில் துளசியை வளர்த்தால் கூட…
View original post 166 more words