Archive for ஜூன் 13, 2022
வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி
மிகவும் எளிதாகக் செய்யக் கூடிய இதைச் செய்து பாருங்கள். வெஜிடபில் பன்னீர்க் கறி. இதுவும் மீள் பதிவுதான். அன்புடன்
தயார் நிலையில் வெஜிடபிள் பன்னீர்
பாலக் பன்னீர், மட்டர்பன்னீர்,மாதிரி, இதுவும் காப்ஸிகம் சேர்த்த
பன்னீர்க்கறி. இதுவும் மிக்க ருசியுடனிருக்கும். ரொட்டி, சாதம்
முதலானவைகளுடன் தொட்டுக்கொள்ள மிகவும் உபயோகமாக
இருக்கும். அவஸரமாக காய்கள் ஒன்றுமில்லாவிட்டால் இதை
உடனே செய்து விட முடிகிரது. பன்னீர் உடம்பிற்கும் நல்ல ஊட்டம்
கொடுக்கும் பொருள். செய்வோமா? வேண்டிய ஸாமான்கள்.
வேண்டிய பொருள்கள்
விஜிடபிள் பன்னீருக்காக
வேண்டியவைகள்.
பன்னீர்——250 கிராம்
கேப்ஸிகம்—-பெரியதாக ஒன்று
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—ஒன்று.
வெங்காயம்—-பெரியதாக ஒன்று.
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு.
–இஞ்சி, கொத்தமல்லி இலை, வேண்டியருசியில் துளி மஸாலா
செய்முறை
பன்னீரைக் கையினால் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
கேப்ஸிகம்,வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்ரையும்
தனித்தனியே சிறியவைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியிலோ, நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெய்
விட்டுக் காயவைத்து முதலில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
காப்ஸிகம்,மிளகாயையும் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து
வதக்கவும்.உப்பு,சேர்த்து சுருள வதக்கி, உதிர்த்த பன்னீரைச் சேர்த்து
அடிக்கடி கிளறிக் கொடுக்கவும். கொத்தமல்லி தூவவும்.
முதலிற் சற்று சேர்ந்தாற்போல யிருந்தாலும் நிதான தீயில்,வதக்க
வதக்க ஸரியாகும்.
ஜீரா ,தனியாப் பொடியோ, அல்லது பிடித்த அதாவது மஸாலாப்
பொடியோ ஒரு துளி சேர்க்கலாம்.
நல்ல ருசியான கறி இது.
எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துச் சாப்பிடலாம்.