நான் படித்த உப கதைகள்.

பாரதக்கதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்தவாகளில் சிலவற்றைப் பகிர உத்தேசம். பாருங்கள் சிலவற்றை.

Continue Reading ஜூலை 23, 2015 at 7:43 முப 10 பின்னூட்டங்கள்

ராக்ஷஸ தாவரம்.

அதிசயம்,ஆநால் உண்மை என்ற பகுதிக்கேற்ற ராக்ஷஸ தாவரம் என்று தோன்றியது. அதுதான் பகிர்வுக்குக் காரணம்.

Continue Reading ஜூலை 20, 2015 at 5:38 முப 15 பின்னூட்டங்கள்

மகிமை பொருந்திய ஆடி வெள்ளிக்கிழமை.

ஆடி வெள்ளிக்கிழமை எனக்குத் தெரிந்தது பாருங்கள்

Continue Reading ஜூலை 17, 2015 at 5:18 முப 17 பின்னூட்டங்கள்

தினமும் நான் பார்த்த பறவைகள்

தினமும் நான் பார்த்த பறவைகளை இன்றும் பாருங்கள். வயதானவளின் பொழுது போக்க வந்தவைகள்தானிது.

Continue Reading ஜூலை 16, 2015 at 4:02 முப 16 பின்னூட்டங்கள்

தினமும் நான் பார்த்த பறவைகள்

பழக்குலைகள் வாவாவென்று கூப்பிடுகிறது

பழக்குலைகள் வாவாவென்று கூப்பிடுகிறது

சென்ற மாதமும்,போன    வருஷம்  மூன்று மாதங்களுக்கும்  ஓய்விற்காகசென்னை சென்றிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்ப்பதற்கு பறவைகள் காட்சி கொடுத்தாலே போதும்.கவனிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. உடல் நலமில்லாத சென்னை  விஜயத்தின்போது  அவ்விடம் வீடுபெருக்க துடைக்க வென்று உதவிப்பெண் வந்து வேலை செய்யும்போது நான் அக்கடா என்று வீட்டை ஒட்டிய சுற்றுப்புற ச் சுவரினருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விடுவேன் கூடவே படிக்க பேப்பர், கையில் சின்ன  கேமரா, வாயில் ஸ்லோகம்.  ஏதாவது பழத்துண்டுகள் அதுவும்  பின்னாடி வரும்.  பெண்,மாப்பிள்ளை வீடு அது.

நல்ல வெயில் வந்து உள்ளே போ என்று சொல்லும் வரை இதேதான். அதுவரையில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் தானாகவே கண்ணில்ப்படும். வீட்டை ஒட்டிய எங்கள் மனையின் மரங்கள்,செடிகள், அதற்கு வரும் பட்டாம் பூச்சிகள், பறவைகள், அணில்கள். வாழைமரங்கள்,எட்டு வருஷமாகியும் காய்க்காத சாத்துக்குடிமரம், நிழலோரமா  கொய்யாச் செடி, பச்சைப்பசேல் என்ற அரிநெல்லிமரம்,வாழைக்குலைகளுடன்பழத்தோடு கூடிய  வாழை இன்னும் வளர்ந்து வளராத மா,தென்னம் பிள்ளைகள்  , வாயிற்பக்கம் வந்தால்  வீட்டின் எதிர் வரிசைகளில்  வரிசையான பெருங்கொன்றை மரங்கள் என  என் கற்பனையில்  அவைகள்  ரம்யமிக்கவைகள்.  நம்முடைய செடி கொடிகள் அதற்கும் பந்தமிருக்கிரது. அடுக்கு நந்தியாவட்டை, மல்லி. பவழமல்லி  எனபூக்களும்.  விடியற்கால வேளையில் பெருங்கொன்றை மரத்தில் கூவும் குயில்கள்.

நெல்லிமரத்துக் குயில்

நெல்லிமரத்துக் குயில்

இந்தப் பட்சிகளைப் பிடித்து விட,கேமிராவில், மனதில் தோன்றும். காலைநேரம் முடியாது. மாலைநேரம் இலைகளுடன் இலையாய் மறைந்து விடும். காக்கைகள் கூடுகட்டி இருக்கும். கிளைமாறி உட்டார்ந்து கறையும். குயிலும் ஒரு அவஸர பிரவேசமாக வரும் ஆனால்ப் பறந்து விடும்.நெல்லிமரத்தில்   பகல் வேளையில்   போனால் போகட்டும் என்று தரிசனம் கொடுத்தது. அடுத்து தினமும் வந்து குரல் கொடுப்பதுபோலக் கூவும்.  நானும் ஒரு படமாவது முயற்சி செய்வேன். அப்படி பாருங்கள்.

நானும் அதுவேதான்

நானும் அதுவேதான்

இன்னொரு நாள்

நீவேறயா

நீவேறயா

இடம் மாறிகூட உட்காருவதில்லை. சாயங்காலம்,விடியற்காலம் பெருங்கொன்றை மரத்தில் கூவும் போது     பின்பக்கத் தோட்டத்திலிருந்து  பதில் எப்போதாவது வரும்.  அதுவும் இதுவா என்று பார்த்தால் அது வேறு. என்னையும் பார் என்று அதுவும் சில நாள்  குரல் கொடுக்கும். அதையும்   பார்த்து நைஸாக படம் பிடித்தால் அழகழகாக தரிசனம் கொடுத்தது.

என்ஃபேவரேட்டாம்

என்ஃபேவரேட்டாம்

ஓ. நீ குயிலியா! நீயும் போட்டோக்கு போஸ் கொடுக்க வந்தாயாயா? வாவா

முகத்தைத் திருப்பி

முகத்தைத் திருப்பி

அப்புறம்அழகான போஸ்

நான் அழகாக இருக்கிறேனா

நான் அழகாக இருக்கிறேனா

என்னைப் பாருங்கள்.

இந்தப்பக்கம்

இந்தப்பக்கம்

நான்தான்

மீதிபேர் நாளைக்கு

மீதிபேர் நாளைக்கு

காக்கை,மைனா தவிர இன்னும் சில பறவைகள் நாளைக்கு.

ஜூலை 14, 2015 at 11:34 முப 14 பின்னூட்டங்கள்

குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.

குதிரைவாலி அரிசியின்  உப்பு,வெல்ல அப்பங்கள்

குதிரைவாலி அரிசியின் உப்பு,வெல்ல அப்பங்கள்.

விண்டுப் பார்த்து  சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.

எல்லா இடத்திலும்  இப்போது  சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை  சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது.  அளவுகளில்  சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும்   மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள்.    எங்கள் பெண்ணின்  வீட்டிலும் இது மிகவும் பிரபலம்.   வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர்  என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.

கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து  பாக்கெட்.பாக்கெட்டாக  வாங்கிவந்து  வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட  ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது.  சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின்   சக்தியை  அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது.  அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.

தானியங்களில்ச் சில

தானியங்களில்ச் சில.படம்    1

தினை, சாமை   மேல்வரிசை,    கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து

இன்னும் சில

இன்னும் சில  படம்   2மேல்வரிசை–கேழ்வரகு,   கம்பு அடுத்து   ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில்  பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள்  மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?

நல்ல சுத்தமாகக்  கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே   சற்று வாஸனை வருமளவிற்கு வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் கஞ்சிமாவு ரெடி.

இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்து,  இரண்டுகப்   நல்ல தண்ணீரில் கரைத்து, மேலும் தண்ணீருடன்அடுப்பில் வைத்துக்  கிளறினால்  வேண்டிய அளவிற்குத் திக்காகவோ,நீர்க்கவோ கஞ்சி காய்ச்ச முடியும்,பால்,சர்க்கரை,தேன் எது வேண்டுமோ  அதைச் சேர்த்துப் பருகவேண்டியதுதான்.

இரண்டுடேபிள்ஸ்பூன்மாவில் தயாரான கஞ்சி

இரண்டுடேபிள்ஸ்பூன்மாவில் தயாரான கஞ்சி

கஞ்சி கொதிக்க ஆரம்பித்தபின்தீயைமட்டுப்படுத்தி ஐந்து நிமிஷம் கிளறினால்ப் போதும்.  நல்ல ஸத்துள்ள கஞ்சி. வாஸனைக்கு ஏலக்காயும், சக்திக்குத் தகுந்தாற்போல பாதாமும் போடலாம். கேழ்வரகு  மெயினாக ஒரு கிலோ அளவிற்கு    எடுத்துக் கொண்டு மற்றவைகளை  குறைத்துப் போடலாம்.

ஸரியான அளவு பின்னால் எழுதுகிறேன். குதிரைவாலி அப்பம் தலைப்பு  அதைப் பார்க்கலாம்.

சென்னையிலிருந்து வரும்போதே அரைகிலோ குதிரைவாலி அரிசியும் ஃப்லைட்டில்  கூட வந்து விட்டது.வேளை வந்தது இப்போதுதான்.   கிச்சடியும்,பச்சடியும் செய்தேன்..ஒருகப் அரிசியில்   கறிகாய்கள் சேர்த்து கிச்சடி,கூடவே தயிர்ப் பச்சடி. நல்ல டேஸ்ட்தான்.  அட திரும்பவும்  எங்கோ போகிறது குதிரைவாலி.. அப்பம்தான் நான் சொல்ல வந்தது. வாங்க அப்பம் செய்யலாம் அப்பம்,குதிக்க, குழக்கட்டை கூத்தாட என்று வசனம் உண்டு.  மோமோவாகக் கொழுக்கட்டை ஆயிற்று.  இப்போது எண்ணெயில் அப்பத்தைக்     குதிக்க விடுவோம். வேண்டியவைகள்  நான் செய்த வகையில்

குதிரைவாலி அரிசி–ஒருகப்

உளுத்தம் பருப்பு—கால்கப்,எண்ணி பத்து வெந்தயம்.

தேங்காய்த் துருவல்—-2 டேபிள்ஸ்பூன்.

அப்பம் வேக வைக்க வேண்டிய  தேவையான எண்ணெய்.

உப்பு அப்பத்திற்கு பச்சைமிளகாய்–1 ,  சீரகம்துளி,பெருங்காயம்  ஒரு துளி,உப்பு,கொத்தமல்லி இலை சிறிது.

செய்முறை—கு. வாலி அரிசி,பருப்பு,வெந்தயம்  மூன்றையும்  நன்றாக ஊறவைத்து மிக்ஸியில்,தேங்காயுடன் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைக்கவும்.,தோசைமாவு பதத்தில் இருக்கலாம்.

அப்பத்துக்கரைத்தமாவு

அப்பத்துக்கரைத்தமாவு

இரண்டு  டேபிள்ஸ்பூன்  மைதாவும்  சேர்த்துக் கரைக்கவும்.

பாதி மாவைத் தனியாக எடுத்து அதில் துளி உப்பு,பொடியாகநறுக்கிய மிளகாய்,சீரகம்,பெருங்காயம்,கொத்தமல்லி இலை சேர்த்துக் கலக்கவும்.  மிகுதி பாதி மாவில் வெல்லமோ,நாட்டுச் சக்கரையோ, சர்க்கரையோ நான்குஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கரைக்கவும். ஏலப்பொடி துளி போடவும்.

உப்புக்கார அப்பம் வேகிறது

உப்புக்கார அப்பம் வேகிறது

அப்பக்காரல் தேடினால் எனக்குக் கிடைக்கவில்லை. சின்ன வாணலியிலேயே எண்ணெயைக் காய வைத்து சின்னக்கரண்டியால்  ஒவ்வொன்றாக  அப்பத்தை வார்த்து,வேக வைத்துத் திருப்பி எடுத்தேன்.  மொத்தமே படத்தில் இருக்கும் அளவுதான். வென்தயம் போட்டால்  அப்பம் சுளைசுளையாக வரும்.  வீட்டில் யாரும் இல்லை. முதல்தரம்  இந்த அரிசி அப்பம் செய்தேன்..  சக்கரைதான் கிடைத்தது. அதான் கலர் குறைவு.

இனிப்பு அப்பம்

இனிப்பு அப்பம்

வெல்ல அப்பத்தில்  பெருஞ்சீரகம் கூட போடுபவர்களும் உண்டு,  இதுவும் ஒரு டிப்ஸ்தான்.  முதலில் செய்தது கிச்சடிதான். அதையும் அப்புறம் போட்டு விடுகிறேன். எப்படி இருக்கு?  காமா,சோமா இல்லை நன்றாக இருந்ததென்று சொன்னார்கள். பார்ப்போம்,

அப்பங்கள்

அப்பங்கள்

அப்பம் வார்க்கும்   அப்பக்காரலில் செய்தால்  ஒரே அளவாகக்  குண்டு குண்டாக வரும்..

ஜூலை 8, 2015 at 9:18 முப 16 பின்னூட்டங்கள்

தினமும் நான் பார்த்த பறவைகள்.

காக்கை என நினைக்க பருந்தாக பரந்து வந்துசிந்திக்க வைத்தது.

Continue Reading ஜூலை 4, 2015 at 12:18 பிப 16 பின்னூட்டங்கள்

வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.

நேபால் சிற்றுண்டி. அதன் நேபாலி பெயர்தான் மோ மோ.

Continue Reading ஜூன் 25, 2015 at 1:50 பிப 16 பின்னூட்டங்கள்

மினுமினு முருங்கைக்கீரை அடை

தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை. திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

View original post 304 more words

ஜூன் 17, 2015 at 7:34 முப 10 பின்னூட்டங்கள்

ஒன்றில் மூன்று

மாங்காய் ஸீஸன் இது. நல்ல மாங்காய் கிடைக்கும்போது செய்து ருசிக்க சென்ற மாங்காய் ஸீஸனில் எழுதிய குறிப்புகளே இது. மறுபதிவு செய்யத் தோன்றியது. பார்த்தோ,செய்தோ ருசியுங்கள். ஒரு வரி எழுதுங்கள்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

புளிப்பு மாங்காய்கள் புளிப்பு மாங்காய்கள்

மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்

செய்ததுதான் இது.

இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்

பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.

மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.

மூன்றாகப் பிரித்ததில்  எல்லா வகையும் செய்ய முடிந்தது.

பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்

பார்ப்போமா உங்களுடன்.

காரமாங்காய் தொக்கு.

ரெடியாகும் காரத் தொக்கு ரெடியாகும் காரத் தொக்கு

வேண்டியவைகள்.

துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.

மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்

நல்லெண்ணெய்–அரைகப்

ருசிக்கு– உப்பு

கடுகு—1 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.

செய்முறை–

கடுகையும்,வெந்தயத்தையும்,  சூடான வாணலியில் எண்ணெய்விடாது

வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை

நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது  அலுமினியம் வாணலியிலோ பாதி

எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு  வதக்கவும்.

புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்

சுருள வதக்கவும்.

நீர் வற்றி   எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி

எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்

கிளறவும்.

பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து

உப்பு காரம் ருசி பார்த்து   சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.

பாட்டிலில் அடங்கத் தயார் பாட்டிலில் அடங்கத் தயார்

ஃப்ரிஜ்ஜில் வைத்து  நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது

இனிப்புத் தொக்கு இனிப்புத் தொக்கு

இனி.ப்புத் தொக்கு.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—-2கப்

வெல்லம்—-2கப்

உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்

எண்ணெய்—-3…

View original post 143 more words

மே 29, 2015 at 8:01 முப 8 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,819 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • chitrasundar5's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.