Archive for ஜூலை 24, 2009
எள் சாதம் அல்லது எள்ளோரை.
ஒரு கப் அரிசியை உதிர் உதிரான சாதமாக தயாரித்து ஆறவிடவும்.
வேண்டிய சாமான்——-வெள்ளை எள் நானகு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு நான்கு டேபில்ஸ்பூன்
மிளகாய் வற்றல் மூன்று . — கடுகு ஒரு டீஸ்பூன்
இரண்டு டேபிள்,ஸ்பூன் துருவிய தேங்காய் ,
கால்டீஸ்பூன் பெருங்காயப்பொடி,முந்திரிப் பருப்பு7—-8 எண்ணெய்,நெய் தலாஒரு டேபிள் ஸ்பூன் சிறிது கறிவேப்பிலை ருசிக்கு உப்பு.
செய்முறை———- வாணலியை நன்றாக சூடாக்கி எள்ளை நன்றாக படபடவெனறு பொரியும்படி சிவப்பாக வறுத்தெடுக்கவும். இதேமாதிரி உளுத்தம் பருப்பையும் சிவப்பாக எண்ணெய் விடாமல் வறுத்தெடுக்கவும். தேங்காயையும் சற்று சிவக்க வறுக்கவும்.யாவும் தனித்தனியே எண்ணெய் விடாது. ஞாபகமிருக்கட்டும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுககவும். மிக்ஸியில் பருப்பு ,மிளகாயைப் போட்டு சற்று பொடித்துக் கொண்டு எள்ளைப் போட்டு பொடிக்கவும். வறுத்த தேங்காயும் சேர்த்து கரகர எனற பதத்திலேயே பொடித்தெடுக்கவும். உப்பு, பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
திரும்ப வாணலியில் எண்ணெய் நெய்க்கலவையைக் காய்ச்சி கடுகுதாளித்து கறிவேப்பிலலையையும் பொரித்து, சாதத்தில பொடியையும் கலந்து பரவலாகக் கலக்கவும். வறுத்த முந்திரிப் பருப்பால் அலங்கரித்துப் பரிமாறவும். வேண்டுமானால் கால் டீஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.
உப்பு காரம் அவரவர்கள் விருப்பப்படி. எள் சாதமும் தயார் நிலையில்.
தேங்காய்ச் சாதம்.
ஒரு கப் அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்து ஆற விடவும்.
ஒரு மூடி தேங்காயை அடி சுரண்டாமல் வெண்மையாக பூப்போல துருவி வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க சாமான்கள்.—-கடுகுஅரைடீஸ்பூன்,—- உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்——உடைத்த முந்திரிப் பருப்பு 7அல்லது8,- பெருங்காயப்பொடிசிறிது,——நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு,–
10அல்லது15 கறிவேப்பிலை இலைகள், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,—ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்.
உப்பு வேண்டிய அளவு,——– எண்ணெயில் பொரித்த உளுந்து அப்பளாம் ஒன்று,.
செய்முறை—————– நெய எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து பருப்புகளையும் பொன்நிறமாக வறுத்து, பச்சைமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை தேங்காய்த்துருவல் போட்டு
நிதானமான தீயில், பெருஙகாயப் பொடியும் சேர்த்து புரட்டவும்.சற்று ஈரப்பசை குறைந்ததும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக சற்று சிவக்கும் வரை கிளறி இறக்கவும். ஆறியபின் சாதத்தில் சீராகக் கலந்து அப்பளாத்தை ப் பொடியாக உடைத்துக் கலந்து தயார் செய்யவும். தேங்காய்ச் சாதம் தயார்.
சித்ரான்னங்கள். ,எலுமிச்சை, தேங்காய், எள், மற்றும்—–
எலுமிச்சை—-
உதிராக வடிக்கப்பட்ட ஒருகப் அரிசியில்சமைத்த சாதத்தைஆற விடவும்.
மற்றும் வேண்டியவைகள் பச்சைமிளகாய்இரண்டு,—-பொடியாக நறுக்கிய சிறு துண்டு இஞ்சி,
பச்சைப் பட்டாணிஇரண்டு டேபிள்ஸ்பூன்,–நறுக்கிய குடமிளகாய் நான்கு டேபிள் ஸ்பூன்—–10,அல்லது15 கறிவேப்பிலை இலைகள்,–திட்டமான சாருள்ள ஒரு எலுமிச்சம் பழம்
தாளிக்க, வேண்டியவை——நல்எண்ணெய் 3டேபிள் ஸ்பூன்,—–கடுகு அரை டீஸ்பூன்,
வேர்க்கடலை2 டேபிள்ஸ்பூன்,—-கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,- பெருங்காயப்பொடி கால்டீஸ்பூன், —மஞ்சள்பொடி கால் டீஸ்பூன்
ருசிக்குத் தேவையான உப்பு.
செய் முறை———–மிளகாயை நான்காகக் கீறிக் கொள்ளவும். வாணலியில் தாளிக்க
எண்ணெயைக் காய வைத்து, கடுகைமுதலில்போட்டு வறுத்துக் கொண்டு பருப்பு வகைகளைப் போட்டு சிவக்கவறுத்து கறிவேப்பிலை மிளகாய் , பட்டாணி, குடமிளகாய் இஞ்சி முதலியவைகளைச்
சேர்த்து நிதானமான தீயில் வதக்கவும். உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயப் பொடி சேர்த்து இறக்கி ஆற விடவும்.
ஆறின கலவையில் எலுமிச்சம் பழத்தை நறுக்கி கொட்டையை நீக்கி சாற்றைப் பிழியவும். ஆற வைத்துள்ள சாதத்தில் கலவையைக் கொட்டி சீராகக் கலக்கவும்.
சிவக்க வறுத்துப்பொடித்த வெந்தயப்பொடி இருந்தால் வாசனைக்கு ஒர் துளி பிடித்தவர்கள் சேர்க்கலாம். எலுமிச்சம் சாதம் தயார். தொடர்ந்து மற்றவைகள்——-