Archive for ஓகஸ்ட் 6, 2009
மசாலா பாத்
வேண்டியவை—–அரிசி ஒருகப்.
உருளைக்கிழங்குசுமாரானசைஸ்—ஒன்று தோல்நீக்கி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
காலிபிளவர் –நறுக்கியதுஒருகப் .கொதிக்கும் தண்ணீரை விட்டு வடிக்கட்டி வைக்கவும்.
துண்டுகளாக நறுக்கிய குடமிளகாய், அரைகப்
பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று.
தோல்சீவி நீளமாக நறுக்கிய கேரட் ஒன்று,-கீரிய பச்சை மிளகாய் மூன்று, பூண்டுப்பல்[இதழ்கள்]பொடியாக நறுக்கியது ஆறு, இஞ்சித் துண்டுகள் ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு ஆறு, நெய்—ஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் இரண்டு டேபீள் ஸ்பூன்
மஸாலா பொடிக்க——லவங்கம் 7,– பட்டைகால் அங்குலத் துண்டு,— ஏலக்காயஒன்று,.-இவைகளை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
சீரகம் அரை டீஸ்பூன் தாளிக்க.——தேவையான உப்பு.——மஞ்சள்பொடி அரைடீஸபூன்.
செய்முறை——-அரிசியை உதிரான சாதமாகச் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தை தாளித்து இஞ்சி பூண்டு, மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்து வதக்கி காய்கறிகளைச் சேர்த்து நிதானமான தீயில் கிளறிவிட்டு தட்டினால் மூடித்திறந்து ஈரப்பதம் குறையும்படி வதக்கி உப்பு, மஞ்சள்பொடி, பொடித்த மஸாலாவையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
நெய்யை சூடாக்கி முந்திரியையும் வருத்து ஒடித்து சேர்க்கவும். இம் மஸாலாக் கலவையை சாதத்துடன் சீராகக் கலக்கவும் வாஸனைக்கு பிரிஞ்சி இலையும் தாளிக்கலாம். மஸாலா பாத் ரெடி.
