Archive for ஓகஸ்ட் 5, 2009
தயிர்சாதம்
வேண்டியவை——- ஒருகப் அரிசி.
தயிர்–இரண்டுகப்.——–பால்–ஒருகப் .
கடுகு —-அரை டீஸ்பூன்.——–பொடியாகநறுக்கிய இஞ்சித்துண்டுகள் இரண்டு டீஸபூன்.
பச்சைமிளகாய–ஒன்று.——ஒரு டீஸ்பூன் எண்ணெய்
தேவைக்கு உப்பு.
அலங்கரிக்க——-வெள்ளரித்துருவல்,- —– 7,8,பச்சை,திராட்சை,—கேரட்துருவல்2ஸ்பூன்,—– பொடியாக நறுக்கியசிவப்பு குடமிளகாய்இரண்டுஸ்பூன், சில கறிவேப்பிலை இலைகள். இதில்
எது விருப்பமோ அதைக் கொண்டு தூவி அலங்கரிக்கலாம்.
செய் முறை——–அரிசியைக் குழைவான சாதமாகச் சமைத்து
பாத்திரத்தில் கொட்டி கரண்டியால் மசித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி சாதத்துடன் கலந்து ஆற விடவும்.
கரண்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இஞ்சி , நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்த்து இறக்கவும்.
தயிரைக் கடைந்து உப்பு சேர்த்து ஆறின சாதக் கலவையுடன் சேர்த்துக் கட்டி இல்லாமல் பிசைந்து தயாரிக்கவும் தாளிதத்தைச் சேர்த்துக் கலந்து பறிமாறும் பாத்திரத்தில் மாற்றவும்.
சாதத்தின் மேலே அலங்கரிக்க எது விருப்பமோ அதைக் கொண்டு அலங்கறிக்கவும். தயிர் மிளகாய் இருந்தால் பச்சைமிளகாயிற்குப் பதில் 2அல்லது3 வறுத்துச் சேர்க்கலாம்.
மிளகாய்க்குப் பதில் உடம்பிற்கு நல்லதென மிளகைப் பொரித்து சேர்ப்பவர்களும் உண்டு.
ஏன் முந்திரி திராட்சை வறுத்துப் போடுபவர்களும் உண்டு.
பிரிட்ஜில் வைத்து எடுத்து, வெய்யிலுக்கு குளுமையாகப் பரிமாரலாம். தயிர் சாதம் தயார். அலஙகாரம் கலர்க் கதம்பமாக இருக்கும். மாதுளை முத்துக்கள் கூட உபயோகிக்கலாம்.
புளிப்பில்லாத மாங்காய்த் துண்டுகளும் வரிசையில்.
எதுவும் வேண்டாமென்றாலும் அதுவும் சரி.தயிர் சாதம் ரெடி.