Archive for ஓகஸ்ட் 27, 2009
ரவை கேஸரி—rava kesari
வேண்டியவைகள்
நல்ல ரவை ஒருகப்
சர்க்கரை ஒண்ணேகால் கப்
நெய் கால்கப்
ஏலக்காய் நான்கு
முந்திரிப் பருப்பு—–8
திராட்சை—–15
கேஸரிகலர்—–கால் டீஸ்பூன்
குங்குமப்பூ இதழ்கள்——7அல்லது8
செய்முறை———–அரை டீஸ்பூன் நெய்யில்முந்திரியை ஒடித்து பொன்போல்வறுத்துக் கொண்டு
திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
ஏலக்காயை தோல் நீக்கி பொடி செய்து கொள்ளவும்.
கேஸரிப் பவுடரையும் குங்குமப் பூவையும் ஒரு ஸ்பூன் சூடான பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டுகப் நீரைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி நெய்யைவிட்டு நன்றாக சூடாக்கி
ரவையைப் போட்டு தீயைக் குறைத்து பொன்நிறமாக வறுக்கவும்.
ரவை வறுபட்டதும் கொதிக்கும் நீரை அதில்விட்டுக் கிளறவும்.
தீயை நிதானமாக்கி குங்குமப்பூ கலவையையும் சேர்த்துக் கிளறி ஒரு நிமிஷம் மூடவும்.
உப்புமா பக்குவத்தில் ரவை மலர்ந்து வெந்துவிடும்.
மூடியை அகற்றி சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும்.
தளர்வான கேஸரி கிளறக் கிளற பக்குவமான தீயினால் இறுகி வரும். பந்து போன்ற மெத்தென்ற
பதத்தில் ஏலக்காய் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.
விட வேண்டிய நெய்யை முதலிலேயே வைப்பதால் ரவை நன்றாக வறுபடும்
ரவை நன்றாக வறுபட்டால் கட்டி தட்டாது.
நன்றாக வேகும். பிறகு நெய் விட வேண்டாம்.
வெந்த ரவையில் சர்க்கரை சேர்த்து சுலபமாகக் கிளறினால் கேஸரி ரெடி.
இனிப்பு அதிகம் வேண்டுமானால் சர்க்கரை அதிகம் சேர்க்கவும்.