Archive for ஓகஸ்ட், 2010
உப்புச் சீடை
வேண்டியவைகள்
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு -2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது—கால்கப்
மெல்லியதாகத் துருவிய தேங்காய்த் துருவல்–1 கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்–3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள்—–10
வேண்டிய அளவு எண்ணெய் —-சீடை வறுத்தெடுக்க
செய்முறை——-உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து
அழுத்திப் பிசறவும்.கறி வேப்பிலையைச் சேர்க்கவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்.[வழவழ என்றிராமல் சொரசொரப்பாக]
10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
காயரஸம்
புளி—-ஒரு எலுமிச்சை அளவு
வறுப்பதற்கு சாமான்கள்
மிளகாய் வற்றல்—-3
தனியா—-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1டீஸ்பூன்
வெந்தயம்——அரை டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
எள்—-1 டீஸ்பூன்
தாளிக்க–நல்லெண்ணெய்——3டேபிள்ஸ்பூன்
கடுகு—சிறிது
பச்சைமிளகாய்–1 கீறியது
இஞ்சித்துண்டுகள்—1டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது
ருசிக்கு —உப்பு, 2டீஸ்பூன் வெல்லப்பொடி
துளி மஞ்சள் பொடி
செய்முறை
புளியை ஊறவைத்து 2 , 3 கப் அளவிற்கு ஜலம் விட்டு கரைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.
நாரத்தங்காயைச் சிறிய துண்டங்களாக நறுக்கி கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்த ஸாமான்களைச் சிவக்கக் கருகாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்க விட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி
நாரத்தைத் துண்டுகள்,இஞ்சி, சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும்.மஞ்சள் சேர்க்கவும்.
காய் வதங்கியதும் உப்பு, புளிஜலம்,, வெல்லம் சேர்க்கவும்.
பொடித்த பொடியையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
காய் வெந்து குழம்பு சுண்டியவுடன் 1டீஸ்பூன்அரிசி மாவைச்
சிறிது ஜலத்தில் கரைத்துவிட்டு ஒரு கொதிவிட்டு கரி வேப்பிலை சேர்த்து இறக்கவும்.
வாய்க்கு ருசியும், ஆரோக்கியமுமான குழம்பிது.
உப்பு காரம் தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.
ரஸஎலுமிச்சை
இது உப்பும் தித்திப்பும் காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.
எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்
முக்கிய ஆதாரம்.
எலுமிச்சம் பழம் —–பழுத்ததாக 12
திட்டமாக ருசிக்கேற்ற உப்பு
சர்க்கரை—–சாற்றின் அளவு
மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்
செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து
கொட்டை நீக்கி வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு
சேர்க்கவும்.
மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்
நறுக்கி கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்
எலுமிச்சை சாற்றை அளந்து அதே அளவில் சர்க்கரையைச்
சேர்த்து நறுக்கிய மெல்லிய துண்டங்களையும் அதில்
கலந்து ஒரு நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.
பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்
கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.
வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.
பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை
வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும், மஞ்சள்
பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து
எடுத்து உபயோகிக்கவும்.
இனிப்பும், காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான
ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.
ஊறும் பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு
அவசியம்.
சாற்றின் அளவு சர்க்கரை. குறைந்த அளவு உப்பு காரம்
நம் விருப்ப அளவு. முக்கியமான வஸ்து தொடர்ந்த
வெய்யில். நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
புளி—1 எலுமிச்சை அளவு
சுண்டை வற்றல்—-15
வறுக்க—நல்லெண்ணெய்—4 டேபில் ஸ்பூன்
வறுத்தரைக்க சாமான்கள்—
மிளகாய் வற்றல்—3
மிளகு—-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1டீஸ்பூன், தனியா–2 டீஸ்பூன்
அரிசி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–2 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட-
1 டீஸ்பூன் கடுகு,
அரை டீஸ்பூன்—-வெந்தயம்
பெருங்காயம்—சிறிது
வேர்க்கடலை—–2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
ருசிக்கு—உப்பு, துளி வெல்லம்
மஞ்சள் பொடி—அரைடீஸ்பூன்
செய்முறை—–புளியை ஊற வைத்து, 2, 3 கப் அளவிற்கு
சாறு எடுத்துக் கொள்ளவும
சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்தவைகளை சிவக்க
வறுத்து , தேங்காயையும் போட்டுப் பிறட்டி ஆறியவுடன்
மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்
கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்
பெருங்காயம், நிலக்கடலை, தாளித்து, கறிவேப்பிலையை
வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, வெல்லம் மஞ்சள் சேர்த்து புளிவாஸனை போனவுடன்
அரைத்த விழுதை திட்டமாகக் கரைத்துவிட்டுக் கொதிக்க விடவும்.
மிகுதி எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை நிதானமான
தீயில் நன்றாக வறுத்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி
.இறக்கவும். காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய்
அதிகம் சேர்க்கவும்.
புதினா பரோட்டா
வேண்டியவைகள் கோதுமை மாவு—–2கப் சுத்தம் செய்த பொதினா இலை–அரைகப் மாவில் கலக்க வெண்ணெய் அல்லது நெய் –2 டீஸ்பூன் ருசிக்கு –உப்பு கடலைமாவு—-1 டேபிள் ஸ்பூன் பரோட்டா செய்ய தேவையான எண்ணெய் ருசிக்கு காரப்பொடி சிறிது செய்முறை——தோசைக்கல்லை நன்றாக சூடேற்றி காயவைத்து தீயை அணைத்து விட்டு, கல்லின் மீது பாதி புதினாவைப் போட்டு சூட்டில் காயவிடவும். மீதி புதினாவை நறுக்கியும். காய்ந்த புதினாவைப் பொடித்தும் ,மாவுடன் சேர்த்து வெண்ணெய் உப்பு காரம் கலந்து தண்ணீர்விட்டு ரொட்டி மாவைப் […]
Continue Reading ஓகஸ்ட் 10, 2010 at 6:01 பிப பின்னூட்டமொன்றை இடுக