Archive for செப்ரெம்பர், 2010
பீட்ரூட் கறி
இதுவும் கறிப்பொடி உபயோகித்து செய்தால் ருசியாகஇருக்கும்.
வேண்டியவைகள்
பீட்ரூட்—-அரைகிலோ
வெங்காயம்—-2
எண்ணெய்—–2டேபிள் ஸ்பூன்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு உப்பு
கடுகு—1டீஸ்பூன்
கறிப்பொடி—–1டேபிள் ஸ்பூன்
செய்முறை—–பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல்சீவி
சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எணெணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு இஞ்சி வெங்காயத்தை நன்றாக வதக்கி
பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். வேண்டிய உப்பு
சேர்த்து, சிறிது ஜலம் தெளித்து மூடியால் மூடிவைத்து,
நிதான தீயில் கிளறிவிட்டு நன்றாக வேகும்படி வதக்கவும்.
காய்வதங்கி நீர் வற்றியவுடன் கறிப் பொடியைத் தூவி
வதக்கி இறக்கவும்.
பொடிவகைகளில் கறிப்பொடி செய்யும் வகை கொடுக்கப்பட்டு
இருக்கிறது. அவசியமாயின் காரம் கூட்டிக் குறைப்பது
உங்கள் கையில்.
காரட் பருப்பு கோசுமல்லி
;வேண்டியவைகள்——பயத்தம் பருப்பு—-1கப
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
காரட் துருவல்—-2டேபிள் ஸ்பூன்
வெள்ளரித் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது—–1டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி—-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க—எணெணெய்—-2டீஸ்பூன்
கடுகு, சீரகம் சேர்த்து——1டீஸ்பூன்
எலுமிச்சம் பழம்—-1
செய்முறை
பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை
வடிக்கட்டவும்.
பிழிந்த வெள்ளரித் துருவல்,தேங்காய்த் துருவல்,கேரட்
துருவல், இஞ்சி,கொத்தமல்லி வகைகளைப் பருப்புடன்
சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு சீரகத்தைத் தாளித்து மிளகாயைவதக்கி
பருப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
சாப்பிடும் போதோ, பறிமாறும் போதோ உப்பு, எலுமிச்சை-
-சாறு கலந்து உபயோகிக்கவும்.
காப்ஸிகத் துண்டுகள் வதக்கியும், பச்சைப் பட்டாணி அப்படியே
சேர்த்தும், தக்காளி சேர்த்தும் ,செய்யலாம்.
வேண்டியவர்கள் வெங்காயம், பெருங்காயம் சேர்க்கலாம்.
வெல்லச்சீடை
வேண்டிய சாமான்கள்
சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு—-1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு—-3 டீஸ்பூன்
வெல்லத்தூள்—–அரை கப். [பாகு வெல்லமாக]
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்—-2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—-அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி——சிறிது
நெய்—2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
செய்முறை——ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.
15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
மணத்தக்காளிவற்றல் குழம்பு
வற்றல்கள் சேர்த்து பொதுவாக குழம்புகள் செய்யும் முறை.
Continue Reading செப்ரெம்பர் 19, 2010 at 2:52 பிப பின்னூட்டமொன்றை இடுக
அவல் கேஸரி
வேண்டியவைகள்
- அழுத்தமான கெட்டி அவல்—1கப்
- சர்க்கரை—-1கப்
- நெய்—கால்கப்
- பால்—அரைகப்
- ஏலப்பொடி,முந்திரி, திராட்சை (விருப்பத்திற்கிணங்க)
- கேஸரி பவுடர் ஒரு துளி
செய்முறை——அவலை நெய்விட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பாலுடன் அரைகப் ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
தீயைக் குறைத்து அவலைக் கொட்டிக் கிளறவும்.
அவல் வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.
துளி பாலில் கலரைக் கரைத்துவிடவும்..
கெட்டியாகும்வரைக் கிளறி நெய்யைச் சேர்க்கவும்.
ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
மெல்லிய அவலாக இருந்தால் தண்ணீரைக் குறைக்கவும்.
இனிப்பு, நெய் இரண்டும் வேண்டிய அளவு அதிகரிக்கவும்.
குஙு்குமப்பூ சேர்த்தால் கலர் வேண்டாம்.
பச்சைப் பயறு சுண்டல்
பச்சைப் பயறு—–1கப்
பச்சை மிளகாய்—-2
இஞ்சி—-சிறிது
காரட் துருவல்—-அரைகப்
எண்ணெய்—-4டீஸ்பூன்
சீரகப்பொடி—அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கடுகு—அரைடீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—-விருப்பத்திற்கு
செய்முறை—-பயறை ஊறவைத்து ஜலம் சேர்த்து வேக வைத்து
வடிய வைக்கவும்.
இதற்கு கடலை, பட்டாணி போல அதிக விஸில் வைத்து
வேக வைக்க வேண்டாம்.
சீக்கிரம் வெந்து போகும்.
தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, காரட்துருவலை
வதக்கி சீரகப்பொடியுடன் வெந்த பயறையும் உப்பு சேர்த்து
சற்றே வதக்கி இறக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து
கொத்தமல்லியைத் தூவவும். மேலும் சுண்டல்களுக்கு
சீரகம், பெரு்ஞ்சீரகம், என,மசாலா பொடி, சாட்மஸாலா,
கறிப்பொடிஎன்று வாஸனைக்கு, சிறிது பொடிகளைச்
சேர்த்து, புளிப்பிற்கு அனார்தானா, ஆம்சூர்,பச்சைமாங்காய்,
எலுமிச்சை என வித்தியாஸமான வகைகளைச் சேர்க்கவும்.
கசகசாப்பொடி, புதிநாப்பொடிமுதலியனவும் ருசி கூட்டும்.
மொச்சை,நிலக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பெரும்பயறு,
காராமணி, பீன்ஸ் விதைகள், கொள்ளு ராஜ்மா
முதலானவற்றிலும், 2தினுஸுகள் சேர்த்தும் செய்யலாம்.
சிலவகை, பருப்புகளிலும் மிதமாக வேக வைத்தும் செய்யலாம்.
வெல்லம் சேர்த்தும் காராமணி, பயறு போன்றவைகளைச்
செய்யலாம். தேங்காய் எல்லாவற்றிறகும் ஜோடி சேரும்.
ஏதோ மனதிற்குப் பிடித்ததை ஜோடி சேர்த்து வித்தியாஸமான
சுண்டல்களைத் தயாரிக்கலாம்.
காபூலி செனா சுண்டல்
வெள்ளை முழுக் கடலை—–1கப்
தேங்காய்த் துருவல்—கால்கப்
கறிப்பொடி—–2ஸ்பூன்
ஆம்சூர்—அரை டீஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
பெருங்காயம்—-சிறிது
பச்சை கறிவேப்பிலை—சிறிது
ருசிக்கு உப்பு
செய்முறை—–இதையும் பட்டாணி சுண்டல் மாதிரியே முதல்நாளே
ஊறவைத்து மறுநாள் ப்ரஷர் குக்கரில் நன்றாக வேகவைத்து
எடுத்துத் தண்ணீரை வடிக்கட்டவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து
தேங்காயையும், சற்று வதக்கி,வெந்த கடலையுடன் உப்பு
சேர்த்து கறிப்பொடி, ஆம்சூர் சேர்த்து வதக்கி இறக்கவும்.
சாதாரண ப்ரவுன்கலர் கடலையானால் வேக சற்று அதிக
நேரம் வைக்க வேண்டும். சுண்டலின்
கடுகு தாளிப்பில், இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை தாளித்து
உப்பு சேர்த்து பல்லு,பல்லாக நறுக்கிய தேங்காயும் மாங்காயும்
சேர்த்து இறக்கி கொத்தமல்லியைத் தூவலாம்.
தாளித்துக் கொட்டும் போது பலதினுஸான சுவையும், மணமும்
கொண்ட பொருட்களைச் சேர்த்தால் ருசி தனிப்பட்டதாக இருக்கும்.
சாதாரண நாட்களாக இருந்தால் வெங்காயம், பூண்டையும்,
அணிவகுக்கச் சொல்லலாம்.
காய்ந்த பட்டாணி சுண்டல்
இதை வெள்ளைப் பட்டாணியிலும், பச்சை அல்லது பழுப்பு நிற
காய்ந்த பட்டாணியிலும், தயாரிக்கலாம்.
வேண்டியவைகள்—-பட்டாணி—1கப்
பச்சை மிளகாய்–2
தேங்காய்த் துருவல்—கால்கப்
இஞ்சி—-சிறு துண்டு
எண்ணெய்–4 டீஸ்பூன்
கடுகு–அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி—–விருப்பத்திற்கு
ருசிக்கு எலுமிச்சை சாறு
உப்பு—-ருசிக்கேற்ப
செய்முறை—–பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்
ஊறவைக்கவும்.
மிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து ஒன்றிரண்டாக
பொடித்துக் கொள்ளவும்.
ப்ரஷர் குக்கரில் பட்டாணி அமிழ ஜலம் வைத்து நிதான
தீயில் 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போனபின்
தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
வாணலியில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
தேங்காய்க் கலவையைச் சேர்த்து சிறிது வதக்கி வெந்த
பட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.
உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி, ருசிக்கேற்ப, எலுமிச்சை
சாற்றைக் கலந்து, கொதத்தமல்லியைத் தூவி த் தயார்
செய்யவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை அவரவர்கள் சாய்ஸ்.
பட்டாணி குழையாமல் வேக வேண்டியது அவசியம்.
வாங்கி பாத்
வேண்டியவைகள்——
அரிசி மெல்லியவகை—-1கப்
சாம்பார் வெங்காயம் உறித்து நறுக்கியது—முக்கால் கப்
சிறியவகை பிஞ்சு குண்டு கத்தரிக்காய்—-6
தக்காளிப் பழம்—1
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
கறிப்பொடி—-3 டீஸ்பூன்
கொப்பறைத் துருவல்–3 டீஸ்பூன்
இஞ்சித் துருவல்—-அரை டீஸ்பூன்
கடுகு—அரைடீஸ்பூன்
முந்திரி–7,8
டோபூ அல்லது, பனீர் துண்டுகள்—15
நறுக்கிய கொத்தமல்லி இலைகள்–சிறிது
நெய்—1டீஸ்பூன்
விருப்பத்திற்கிணங்க காப்ஸிகம்–1
பச்சைப் பட்டாணி——கால்கப்
ருசிக்கு உப்பு, நிறத்துக்குத் துளி மஞ்சள் பொடி,வாஸனைக்கு4கிராம்பு
செய்முறை—-அரிசியைக் களைந்து உதிர் உதிரான சாதமாகச்
சமைத்து தாம்பாளத்தில் கொட்டி ஆற விடவும்.
கத்தரிக்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து தண்ணீரில்
அலம்பி வடிய வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க
விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி, தக்காளி சேர்த்து பின்னும்
வதக்கவும். பட்டாணியைச் சேர்க்கவும்
நறுக்கிய கத்தரிக்காய், காப்ஸிகம், சேர்த்து நிதானமான தீயில்
உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய காயுடன் பனீர்த் துண்டங்களையும் சேர்த்து
வதக்கி, கறிப்பொடி தூவி இறக்கவும்.
நெய்யில் ஒடித்த முந்திரியை வறுத்து கிராம்பையும் சேர்க்கவும்.
யாவற்றையும் சாதத்தில் சேர்த்து உதிர்,உதிராகக் கலக்கவும்.
கொப்பறைத் துறுவல், கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
காய் அதிக மானால் எண்ணெய்,சற்று அதிகம் சேர்க்கவும்.
பொடி வகைகள் குறிப்பில் கறிப்பொடி செய்யும் விதம்
கொடுக்கப்பட்டு இருக்கிரது.