Archive for ஓகஸ்ட் 24, 2010
காயரஸம்
புளி—-ஒரு எலுமிச்சை அளவு
வறுப்பதற்கு சாமான்கள்
மிளகாய் வற்றல்—-3
தனியா—-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1டீஸ்பூன்
வெந்தயம்——அரை டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
எள்—-1 டீஸ்பூன்
தாளிக்க–நல்லெண்ணெய்——3டேபிள்ஸ்பூன்
கடுகு—சிறிது
பச்சைமிளகாய்–1 கீறியது
இஞ்சித்துண்டுகள்—1டீஸ்பூன்
கறிவேப்பிலை—-சிறிது
ருசிக்கு —உப்பு, 2டீஸ்பூன் வெல்லப்பொடி
துளி மஞ்சள் பொடி
செய்முறை
புளியை ஊறவைத்து 2 , 3 கப் அளவிற்கு ஜலம் விட்டு கரைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.
நாரத்தங்காயைச் சிறிய துண்டங்களாக நறுக்கி கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்த ஸாமான்களைச் சிவக்கக் கருகாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்க விட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி
நாரத்தைத் துண்டுகள்,இஞ்சி, சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும்.மஞ்சள் சேர்க்கவும்.
காய் வதங்கியதும் உப்பு, புளிஜலம்,, வெல்லம் சேர்க்கவும்.
பொடித்த பொடியையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
காய் வெந்து குழம்பு சுண்டியவுடன் 1டீஸ்பூன்அரிசி மாவைச்
சிறிது ஜலத்தில் கரைத்துவிட்டு ஒரு கொதிவிட்டு கரி வேப்பிலை சேர்த்து இறக்கவும்.
வாய்க்கு ருசியும், ஆரோக்கியமுமான குழம்பிது.
உப்பு காரம் தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.