ரஸஎலுமிச்சை
ஓகஸ்ட் 17, 2010 at 10:27 பிப 5 பின்னூட்டங்கள்
இது உப்பும் தித்திப்பும் காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.
எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்
முக்கிய ஆதாரம்.
எலுமிச்சம் பழம் —–பழுத்ததாக 12
திட்டமாக ருசிக்கேற்ற உப்பு
சர்க்கரை—–சாற்றின் அளவு
மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்
செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து
கொட்டை நீக்கி வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு
சேர்க்கவும்.
மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்
நறுக்கி கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்
எலுமிச்சை சாற்றை அளந்து அதே அளவில் சர்க்கரையைச்
சேர்த்து நறுக்கிய மெல்லிய துண்டங்களையும் அதில்
கலந்து ஒரு நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.
பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்
கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.
வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.
பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை
வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும், மஞ்சள்
பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து
எடுத்து உபயோகிக்கவும்.
இனிப்பும், காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான
ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.
ஊறும் பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு
அவசியம்.
சாற்றின் அளவு சர்க்கரை. குறைந்த அளவு உப்பு காரம்
நம் விருப்ப அளவு. முக்கியமான வஸ்து தொடர்ந்த
வெய்யில். நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.
Entry filed under: ஊறுகாய் வகைகள்.
5 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. ரஸஎலுமிச்சை ஊறுகாய் | Thamizh.in | Information Portal in Tamil | | 8:38 முப இல் பிப்ரவரி 19, 2013
[…] […]
2.
chollukireen | 9:34 முப இல் பிப்ரவரி 19, 2013
இந்தப் பதிவில் கடாரங்காய் ஊறுகாயாக குறிப்பிட்ட பாட்டில்கள் படம் நெல்லிக்காய் ஊறுகாய்.
ரஸ எலுமிச்சைக்கும் படம் நான் போடவில்லை. ரஸ எலுமிச்சையாக குறிப்பிட்டிருப்பது நெல்லிக்காய் ஊறுகாய்.
ஆவக்காய் ஊறுகாய் குறிப்பு என்னுடையது. படமிடவில்லை நான். இவை யாவும் சொல்லுகிறேனில்
வெளியானவைகள். பதிவாளராகிய சொல்லுகிறேனின் காமாட்சி மஹாலிங்கம். ஆக நெல்லிக்காய் ஊறுகாய்,ரஸ எலுமிச்சை,
கடாரங்காய் ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய் என் குறிப்புக்களே. தயவு செய்து திருத்துங்கள் என
கேட்டுக் கொள்கிறேன். எனக்கும் இது விஷயம் பதில் போடவும். இப்படிக்கு சொல்லுகிறேன் காமாட்சி.
3.
chollukireen | 11:30 முப இல் திசெம்பர் 23, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்த இனிப்பு ஊறுகாயையும் ரஸியுங்கள். அன்புடன்
4.
Geetha Sambasivam | 11:38 முப இல் திசெம்பர் 23, 2020
சாப்பிட்டிருக்கேன் அம்மா. குஜராத்தில் இந்த ஊறுகாய் நிறையச் சாப்பிட்டிருக்கேன். நானும் ஒரு முறை செய்து பார்த்தேன். வரவேற்பு இல்லை. மாங்காயில் கூட வெல்லம் சேர்த்து ஜீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி போட்டுப் பண்ணுவார்கள். நாங்க தேப்லா, பரோட்டாவுக்குத் தொட்டுக்க வைச்சுப்போம். காய் வேணும்னு இல்லை. ஊறுகாய் இருந்தால் போதும்..
5.
chollukireen | 12:20 பிப இல் திசெம்பர் 24, 2020
நன்றி. அன்புடன்