Archive for ஒக்ரோபர் 4, 2010
ஜெவ்வரிசி கிச்சடி
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.