Archive for ஜனவரி 9, 2012
கீரை வடை
இது உளுத்தம் பருப்பு வடைதான். இந்த மருமகள் செய்த மாதிரியைப்
படம் பிடித்தேன். ஸரி, பொங்கல் வருகிறது. அரைக்கும் மாவில் இது
மாதிரியும் ஒரு நான்கு செய்து பார்க்கலாமே நீங்களும் என்று
தோன்றியது. ஷேப் முன்னே பின்னே இருந்தாலும் வடை ருசிதானே
முக்கியம். கரகரப்பாக நன்றாகவே இருந்தது வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு-தோல் நீக்கிய வெள்ளை உளுத்தம்பருப்பு-1கப்
முழு உளுந்து ஆனால் மிகவும் நல்லது. தோல் நீக்கியதைத்தான் .
பாலக் கீரை—-மெல்லியதாக அலம்பி நறுக்கியது 1 கப்பிற்கு அதிகம்.
பச்சையோ சிகப்போ 4 மிளகாய்கள்
துளி இஞ்சி
ருசிக்கு உப்பு
வடை தட்டி எடுக்க வேண்டிய எண்ணெய்
துளி பெருங்காயப் பொடியும். சில கறிவேப்பிலையும்.
செய்முறை
பருப்பை ஊற வைத்து வடிக்கட்டி மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து தயாராக நறுக்கிய
பொடிப்பொடியான வடிக்கட்டிய கீரை, பெருங்காயப்பொடி,உப்பு,
கறிவேப்பிலையை சேர்த்துக் கலந்து துளி ஜலத்தைத் தெளித்து
காயும் எண்ணெயில் வடைகளைப் போட்டு கரகரவென்று
வேகவைத்துஎடுத்து பச்சைப் பசேல் என்று வடை தயார்.
அரைத்த பருப்பு கெட்டியாக இருந்தால்தான் ஜலம்
தெளிக்க வேண்டும். இஞ்சியைப் போட்டே அரைக்கலாம்.
பண்டிகை நாட்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை.
அதையும் சேர்த்து ஜமாய்க்கலாம்.
இளசான எந்தக் கீரையையும் போடலாம்.