Archive for திசெம்பர் 27, 2013
பாதாம்ஹல்வா
ஆங்கிலப் புத்தாண்டை ஆசையுடன் வரவேற்று அதற்காக பாதாம் ஹல்வாவை செய்து பாருங்கள். கொஞ்சம் கேஸரிக் கலரோ,குங்குமப்பூவோ அதிகம் சேர்த்துக் கிளருங்கள். முந்திரியை நெய்யில் வருத்துப் போடுங்கள். அருமையான
ஹல்வா. ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
View original post 8 more words