Archive for திசெம்பர் 30, 2013
அன்னையர்தினம். 11
வேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.
ஊரிலுள்ளவர்கள்கூடவேளைக்கீரை விளைச்சலை நம்புபவர்கள்.
ஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.
வேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.
அம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்
குழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.
ஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்
பேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.
குறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி
அவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்
இரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்
திண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று
தீர்மானமாகியது.
புடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு
ஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே
வாம்மா,வாவா.
எப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.
இல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.
உள்ளே போகலாம் வா,வா.
இல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.
அதிகமாக பேச ஒன்றும் இல்லே.
ஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.
என்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க
ஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்
கலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.
பையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.
அதிகம் பேசினாலும் கோபம் வரது.
விடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.
நீங்க ஏதாவது வரன் பார்த்துச் சொல்லணும்.
உங்க உறவில்கூட ஸ்ரீநிவாஸன் இருக்கான். நீங்க பார்த்துச் சொன்னால்
ஸரியாக இருக்குமே.
அதிகப் பணம் காசு கிடையாது.
அதெல்லாம் தானாக வரும்,போகும், அதுக்கெல்லாம் கவலையில்லை.
..ஸ்ரீநிவாஸனா வேண்டாம்மா,வேண்டாம். அது தத்தாரி.
நம்ம பசங்க கண்காணாது இருந்தாலும், சோத்துக்கு கஷ்டப்படாத இடமா
இருக்கணும். பாக்கலாம்மா, அவனுக்குத் தெரியுமா நீ வந்தது.
இல்லே உங்களைப் பார்த்து கேட்கப்போறேன்னு சொல்லி இருக்கேன்.
எதுவும் நாளைக்காலையிலேயிலேயாஆகிவிடப்போறதா என்ன?
ஸரிம்மா பார்க்கலாம்.
வரன் தேடு்ம் படலம் ஆரம்பமாகிவிட்டது,
நம்ம தெருவில் வேண்டியவர்களே. கிட்டண்ணா பேரன்.
எங்களுக்குச் சேப்பு பெண் வேணும் என்று அடுத்த பெண்ணுக்கு அச்சாரம்
போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன செய்வது அம்மா நிறம் கம்மி. அம்மாவைப்போல் அவள்.
நிறம்தான் கம்மி. பொருமையான நல்ல பெண்.
சின்னது அப்பாவைப்போல் நல்ல நிறம்.
எந்த நிறம் இருந்தாலும் அம்மாவிற்கு யாவும் ஒரே ஸமம்தானே!!!!!!!!!!!!!!.
மனது கொஞ்சம் கஷ்டப்படும்.
அத்தை சொல்லுவாள் அவளுக்கென்று பிறந்தவன் எங்கும் ஓடிப்போக
மாட்டான் விசாரப்படாதே என்பாள் . இது தினமும் நடைமுறை.
இன்னும் இரண்டொரு பையன்கள்.
அவர்கள் அம்மாமார்களுக்கு பெண் வைரத்தோட்டுடன் வரவேண்டுமென்று
ஆசை.
நல்ல பெண் எங்களுக்கு ஆக்ஷேபணையே இல்லை. தோடு போட்டால்
போதும்,ஸம்மதமா கேளுங்கள் என்று தூது.
கடவுளே வேண்டாம் இந்த ஸம்பந்தம். நாளைக்கே அதுவேண்டும் ,இது
வேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் எங்கே போவது?
இவளையொத்த பெண்களுக்கெல்லாம் கல்யாணம் அது இது என்று
அமர்க்களமாக நடக்கிறது.
நாமும் எப்படியாவது வரன் பார்த்து முடிக்க வேண்டும் என்ற அம்மாவின்
தீவுரமான முடிவு.
வெளியூர் வரன் ஒன்று செவ்வாய்தோஷமுள்ள ஜாதகம். மற்றொன்று
ஜாதகம் பொருந்தலே.
இடையே அம்மாவின் அண்ணாவின் மருமகள் பிரஸவத்தின்போது
காலமாகி விட்டாள்.
அவர்கள் கதையே வேறுமாதிரி.
மாமாவின் பிள்ளைக்கு போலியோ வந்து கால் ஊனம்.
சென்னை வந்து படிக்க வைத்து ஒரு வேலையும் வாங்கி வைத்துவிட்டார்கள்.
அம்மாவின் வயது அவருக்கு. பண்டாபீஸில் வேலை. அதே கட்டிடத்தில்
பின்புறம் வசிக்க இடம்.
தாய்தப்பனில்லாத மிக ஏழைப்பெண் கிடைத்து கலியாணமாகி இருந்தது.
அந்தப் பெண்ணிற்கு பிரஸவம் மிகக் கஷ்டம்.
ஐந்து ஆறு குழந்தைகளுக்குப் பிரகு இரண்டு குழந்தைகள் தங்கின.
ஸிஸேரியன் ஆரம்பித்த காலம்.
இவ்வளவு கஷ்யமாயிற்றே, ஒருவருக்கும்,குடும்பக் கட்டுப்பாடு,அது
இது என்று தெரியாத காலம்.
பிரஸவகாலத்திலே முடியாமற்போய் அப்படியே காலமாகி விட்டாள்
அந்தப் பெண்.
அந்த சமயம் உபசாரத்திற்கு அம்மா போயிருந்தாள்.
வேண்டியவர்கள் பலரும் ஒறுசேரக் கூடும் ஸமயமல்லவா?
வந்தவர்கள் பலரிடமும்ஜாதகத்திற்கு சொல்லி வைத்தாள். எல்லோரும் என்ன பிரமாதம்
நான் பார்த்துச் சொல்கிறேனென்ரார்கள்
காரியம்முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்னே வேண்டியவர்கள்
நீ ஒருமுறை ஆத்துக்கு வா. என்று கூப்பிட்டார்கள்.
அங்கு போன போது அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் காட்டி
அறிமுகம் செய்து, இந்த மாமிக்கு வேண்டியவர்கள் யாரோ இருக்கிரார்கள்.
அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பெண் வேண்டுமாம். பார்க்கிராயா?
அதுக்கென்ன இப்போ பார்த்தால் போகிறது. ஜாதகம் அனுப்புகிறேன்.
உங்கள் விலாஸம் கொடுங்கள்.
விலாஸப் பரிவர்த்தனை ஆகிறது. வீட்டுக்கு வந்து கிளம்புமுன்
எங்கே போயிருந்தாய் பெரிம்மா கேட்கிராள்.
அதாந் காயத்ரி மாமி கூப்பிட்டாளே
ஜாதகம்கேக்கப் போனயா, ஆமாம் அதனாலென்ன?
பதிலொன்றும் சொல்லாமல் மொணமொணப்புகள்.
அத்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தாயிற்று.
நடுவிலா னமாமிக்கு கடிதம் போட்டு, விசாரித்து அவர்கள் அட்ரஸ்
வாங்கியாயிற்று.
அத்தை சொல்கிறாள் நாலு இடத்தில் பார்க்கத்தைன் வேணும்.
பெரியம்மா அத்தையைக் கேட்கிராள்.
உனக்கு இவர்கள் மட்டும் தான் பேத்திகளா? பேரன்கள் இல்லையா??
அதனால் என்ன இப்போ?
இவ வேறெ எதோ கதை ஆரம்பிக்கிரா. விடு உன் வேலையைப்பார்.
இந்த மனுஷரோ யாரோ,எங்கேயோ ஜாதகம் அனுப்ப வாங்க,
இதெல்லாம் நான் எழுத மாட்டேன்.
ஸரி சின்னவளை விட்டு எல்லாம் செஞ்சுகிறேன்.
எல்லாம்நீயே செய்து கொள்.
அந்த மெட்ராஸ் வரன் அதிகம் கேட்க மாட்டார்கள்.
அதைத்தான் பார்க்கணும். அம்மா மனதில் கணக்குப் போட
ஆரம்பித்தாயிற்று. பார்க்கலாம் நாமும்——–
உங்கள் யாவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்,
2014 ஆம் ஆண்டே நல்லபடி வருகவருக. யாவருக்கும் வாழ்த்துகள்
தருகதருக அன்புடன்