யானைகளின் சிலசுபாவங்கள்
ஜனவரி 29, 2016 at 6:34 முப 8 பின்னூட்டங்கள்
யானைகள் எவ்வளவுபெரிய உருவமுடையவை?. தொண்ணூறு ஆண்டுமுதல்இருநூறு ஆண்டுகள்வரை அவைகள் உயிர் வாழக்கூடியது. இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் யானைகள் தண்ணீரில் நன்றாக நீந்தவும் செய்யும். யானை மூச்சு விடுவது தும்பிக்கையால்தானே தவிர வாஸனை அறிவது வாயினால்தான்.
யானையிடம் உள்ள சில பழக்கங்கள் நம்மை ஆச்சரியப் படுத்தும். நான் கேட்டவைகள் இவை. காட்டிலுள்ள யானைகள் அடிக்கடி சண்டை போடுமாம். ஆனால் சண்டை போடும்போது அவைகளுக்குக் களைப்பாய் இருந்தால் பேசி வைத்தாற்போல இரண்டு தரப்பும் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுமாம். இரை சாப்பிட்டுத்,தண்ணீரும் குடித்துவிட்டுத் திரும்பவும் சண்டைபோட ஆரம்பிக்குமாம். போர் ஒப்பந்தம்போலுள்ளது. இப்படியே பலநாட்கள் உக்கிரகமாக சண்டை இட்டு விட்டுதான் நிறுத்துமாம்
யானை மிகவும் வேகமாக ஓடும் மிருகமும் கூட ஒரு மணி நேரத்தில் முப்பது கிலோமீட்டர் தூரம்கூட அவைகளால் ஓடமுடியும்.நன்றாக பழகிவிட்டால் யானை பாகனின் பாஷையைப் புரிந்துகொண்டு அவன் சொற்படி நடக்கும். வார்த்தைகளுக்குக் கட்டுப்படும். இலங்கையிலுள்ள யானைகளுக்கு ஆண்பெண் எதற்குமே தந்தம் கிடையாதாம்.
கண்கள் சிறியதாகையால் அவைகளுக்கு அதிக தூரத்திலுள்ளவைகள் துல்லியமாகத் தெரியாதாம். மற்ற நான்கு கால் விலங்குகளைப்போல
இவைகளுக்குத் தாண்டமுடியாதாம். அதிசயம் ஆனால் உண்மை. யானைகளைப்பற்றி எவ்வளவோ விஷயங்களில் இது சில. ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகு எழுத இது ஒரு விஷயமாகத் தோன்றியது அவ்வளவுதான். இல்லையா? இப்போது இந்த காட்டுயானைகள் கிராமத்திற்கு வந்து அட்டஹாஸங்கள் செய்து கொண்டு நாசமும் செய்து கொண்டு இருக்கின்றன. இதுவும் செய்திதான்.படத்திலுள்ள யானைகள் ஸமாதானமாகிறது போல இருக்கிறதல்லவா?
Entry filed under: அதிசயம்.ஆனால் உண்மை..
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 6:57 முப இல் ஜனவரி 29, 2016
யானையைப்பற்றிய அற்புதமான பல செய்திகள் வாசிக்க மிகவும் இனிமையாக உள்ளன, பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 11:04 முப இல் ஜனவரி 30, 2016
நன்றிமிகவும். சிறுவர்களுக்கானதை இவ்விடம் போட்டுவிட்டீர்களா என்று கேள்விகள் வரலாம் என்று நினைத்தேன். நல்லவேளை.இனிமையானசெய்திகள் என்று எழுதியதற்கு. அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:46 பிப இல் ஜனவரி 29, 2016
சமீபத்தில் யானைகள் பற்றி தினமணியில் ஒரு கட்டுரை படித்தேன். சுவாரஸ்யமாய் இருந்தது. அதை ஃபேஸ்புக்கில் பகிர எண்ணியிருந்து மறந்தே விட்டது. நீங்கள் கொடுத்துள்ள தகவல்களும் சுவாரஸ்யம்.
4.
chollukireen | 11:06 முப இல் ஜனவரி 30, 2016
அட நீங்களும் ஸ்வாரஸ்யம் என்ற பதத்தைத் தகவல்களுக்குக் கொடுத்ததை வரவேற்கிறேன். நன்றி அன்புடன்
5.
chitrasundar5 | 3:50 முப இல் பிப்ரவரி 1, 2016
காமாஷிமா,
யானை என்றாலே குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரைக்கும் சந்தோஷம்தானே. விலங்குகளாயினும் போர் தர்மத்தை கடைபிடிக்கின்றன எனும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு. ரசித்து படித்தேன் அம்மா, அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 11:43 முப இல் பிப்ரவரி 2, 2016
ஏதாவதொரு சின்ன விஷயம் புதியதாக மனதிற்குப் பட்டால்க் கூட போதுமானது. ரஸித்துப் படித்ததற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
7.
ranjani135 | 5:21 பிப இல் பிப்ரவரி 8, 2016
நாய் மோப்பம் பிடிப்பது போல யானைகள் தங்கள் துதிக்கையினால் மோப்பம் பிடிக்குமாம். அதற்குத்தான் அவ்வப்போது துதிக்கையை மேலே தூக்குகிறது என்று நேஷனல் ஜியாகிரபி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்கள்.
உங்களுடைய கட்டுரைக்கு என் பங்களிப்பு இந்த தகவல்.
ஒரு மாறுபட்ட பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
8.
chollukireen | 8:26 முப இல் பிப்ரவரி 10, 2016
மேலும் பங்களிப்புகள் வரவேற்கத் தக்கது. நன்றியும் கூட . நானும் கேட்ட விஷயங்களைத்தான் எழுதினேன். எனக்கு கட்டுரைக்கு வாழ்த்துகள் வேறா? ஸந்தோஷம். அன்புடன்