Archive for ஜனவரி 11, 2021
அன்னையர் தினம்.
இது ஒரு தொடராகவே நான் எழுதியது. 2013 இல் அன்னையர் தினத்திற்காக நான் எழுதிய பதிவு இது. தொடர்ந்து கதைபோல இருக்கும் இதைப் படிததுக் கருத்து சொல்லுங்கள். புதுப் பதிவு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவும் சரித்திரம் தான். எல்லா திங்கட் கிழமைகளில்த் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.அன்புடன்
அன்னையர் தினம் என்று பிரித்துக் கொண்டாட வேண்டிய அவசியம்
இல்லாமலேயே ஒவ்வொருநாளும் அன்னையை மனதிலிருத்தி
கொண்டாடிக்கொண்டே இருக்கும் , மகன்கள்,மகள்களின் ஞாபகப்
பிரதிபலிப்பாகத்தான் இந்தநாள் இருக்கிறது.
இந்த நாள் இனிய நாளாகவும் இருக்கிறது.
ஓ. இன்று அன்னையர் தினம் என்று கேட்டவுடனே அவரவர்கள்
எண்ணக் குவியல்களுக்கிடையே தாயைப் பற்றிய முக்கிய
நிகழ்வுகள் வரிசையாக கோர்வையாக பவனிவர ஆரம்பித்து
விடுகிறது.தாய் உடனிருந்தால் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களுடன் பகிர்ந்தால் அவர்களின் தாயைப்பற்றிய எண்ணக்
குவியல்களையும், அன்பையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த அன்னையர் தினம் நேபாலில் சித்திரை மாத அமாவாஸை
அன்று கொண்டாடப் படுகிரது.
ஆமாகோ மூங் ஹேர்னி என்பார்கள். ஆமா–அம்மா. மூங்—முகம்
ஹேர்னி—பார்ப்பது.
பிள்ளையானாலும், பெண் ஆனாலும், அவர்களாலியன்ற
பரிசுப்பொருள்கள், இனிப்பு பழம் என்று வாங்கிப்போய் கொடுத்து
நமஸ்கரித்து ஆசி பெருவார்கள்.
இது கட்டாயமாகச் செய்யவேண்டியது என்று சொல்லியும்,செய்தும்
பழக்கத்திலிருத்துவார்கள். என்னுடைய மூத்த பிள்ளையும்
காட்மாண்டுவினின்றும் போன் செய்து ஆசிகளைப் பெற்றான்.
அதனால் இதைக் குறிப்பிட்டேன்.
அம்மாஇல்லாதவர்கள்கோவிலுக்குப்போய்தேவியைவணங்கிவிட்டு
வரவேண்டும்.
இதே மாதிரி தகப்பனார்கள் தினமும் அவர்களுக்குண்டு. மஹாளய
பக்ஷத்தில் தகப்பனார் தினம் கொண்டாடுவார்கள்.
மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் இந்தியாவிலும் கொண்டாடப் படுகிரது.
இப்போது பரவலாக பிள்ளை, மருமகள் எனஇருவரும் வேலைக்குப் போவது வழக்கத்திலிருக்கிரது.
வயதான தாயாரை கூட வைத்துக்கொள்ள யோசிக்கிரார்கள்.
நடப்பதுதான் நடக்கும். அதனால் யாரும் யோசனை செய்யாதீர்கள்.
தாய்மார்களும் அனுஸரித்துப் போவார்களே தவிர வேறு என்ன
வேண்டும்.
View original post 274 more words