Archive for ஜனவரி 18, 2021
அன்னையர் தின தொடர்வு. 1
அம்மாவின் கதை ஆரம்பம். பாருங்கள். படியுங்கள் அன்புடன்
என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன்.
அவர் இருந்தா நூரைவிட அதிகம் வயது. இருக்க
வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப்
கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை
தெரிந்து கொள்ள முடிகிரது. அவரின் சிறிய வயது
காலத்தில் விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு
அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய
வேண்டும், என்பதால், சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது
பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர
நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன்
தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும்,
கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள். ஆதலால் வயது
வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம்.
அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல,
கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்
போலும்.
எல்லோரும்,எல்லோருக்கும், கொண்டு கொடுத்து சம்பந்தம்
செய்வதால் எல்லோரும் ஏதோவகையில்உரவினர்கள்தான்.
என் அம்மாவைப் போலவே அவர் அம்மாவும்
வயதானவருக்கு வாழ்க்கைப் பட்டவர்தான். அவர்
பெண்களுக்காவது இதில் விதிவிலக்கு உண்டா?
நான்கு பெண்களில் நான்கு நான்கு விதம் அவருக்கும்.
ஏன் ரொம்ப ஏழையா நீங்கள் என்று என் அம்மாவைக்
கேட்டேன்.
அப்படியெல்லாம் கிடையாது. நிலம்,நீர்,வீடு,வாசல்
எல்லோருக்கும் இருந்தது. அதையெல்லாம், விற்று,வாங்கி
கலியாணம் என்பதெல்லாம் நினைக்க முடியாத விஷயம்.
இருப்பதை வைத்துக்கொண்டுதான் செய்வார்கள்.
சாப்பாட்டிற்கு கஷ்டம் யென்பதே கிடையாது. தெரியவும் தெரியாது.
மலிந்த காலம். பணப்புழக்கம் அதிகம் இல்லை.
கௌரவமாக இருப்பதைக் கொண்டு ஸமாளிப்பதுதான்
ஸரி என்று நினைக்கும் காலம்.பெரியவா சொன்னா
கேட்கணும். அது ஒன்றுதான் தெரியும்.
வேரெ ஏதாவது…
View original post 241 more words