Archive for பிப்ரவரி 19, 2021
மூலிகைப் பச்சடி—கற்பூரவல்லி.
எதையாவது மறுபதிவு செய்வோமென்று பார்த்தால் இது சிக்கியது. பெண்ணாத்தில் செய்தது. நன்றாக இருந்தது.அன்புடன்
இது ஒரு தயிர்ப் பச்சடி. உடம்பிற்கு நல்லது. ருசியாகவும் இருக்கிறது..
கற்பூர வல்லி இலை—6
தயிர்—-1கப் புளிப்பில்லாதது.
பச்சைமிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
வறுத்துப் பொடிக்க—தனியா,சீரகம்,வகைக்கு அரை டீஸ்பூன்
தாளித்துக் கொட்ட கடுகு சிறிதளவு.
எண்ணெய் சிறிதளவு.
தனியா,சீரகத்தை லேசாக வெரும் வாணலியில் வருத்துப்
பொடிக்கவும்.
தேங்காய்,மிளகாய், கற்பூர வல்லி இலையை நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.
அரைத்ததைத் தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பொடியையும் சேர்க்கவும்.
கடுகு தாளிக்கவும். பச்சடி தயார். சாதத்துடன்
துவையல்,பொடி முதலானவைகள் கலந்து சாப்பிடும் போது
தொட்டுக் கொள்ள பச்சடி சுவையாக இருக்கும்.
நெஞ்சுக்கட்டு,சளி முதலானவைகளையும் கட்டுப்படுத்தும்.
சிறியதாக ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கியும் சேர்க்கலாம்.
நன்றாகத்தான் இருக்கிறது.