Archive for ஜூன் 3, 2009
மசூர் பருப்பு குணுக்கு
வேண்டியவை—-200கிராம்மசூர்டால்—–2பெரிய சைஸ் தோலுரித்து வேகவைத்த உருளைக்கிழங்கு—-3பச்சைமிளகாய்—1ஸ்பூன் சீரகம்—-1துண்டு இஞ்சி—-வேண்டிய அளவு உப்பு–பொரிப்பதற்கு எண்ணெய்.
2மணிநேரம் பருப்பை ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். கிழஙகைச் சிறிதும்,பெரிதுமாக உதிர்த்துக் கொள்ளவும். பருப்புடன் இஞ்சி,மிளகாய், சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாய் கரகரப்பாக தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உப்பும் கிழங்கையும் சேர்த்துக் கலந்து இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெயையும் விட்டு பகோடா மாதிரி எணணெயில் ஒரே சீராக திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும். விரும்பும் சட்னிகளோடு சாப்பிடலாம். புதினா, புளிச்சட்னி, தோதாக இருக்கும்.
பாலக் பட்டாணிபருப்பு வடை-
வேண்டியவை.-பட்டாணிபருப்பு200கிராம்—உளுத்தம்பருப்பு50கிராம்—-துவரம்பருப்பு50கிராம்.–இரண்டுவத்தல்மிளகாய்—-இரண்டுபச்சை மிளகாய்— ஒரு டேபிள்ஸ்பூன்பெரும் சீரகம்—-உப்பு,—–நறுக்கிய பாலக்கீரை ஒருகப்,—-கொத்தமல்லி அரைகப்,இஞ்சிஒரு துண்டு—-பொரிப்பதற்கு எண்ணெய்.
பருப்பு வகைகளை 2-3மணி நேரம் ஊறவைத்து நீரைவடித்து,உப்பு காரம், இஞ்சி,பெருஞ்சீரகத்தைச் சேர்த்து மிகஸியில் கரகரப்பாக அரைத்தெடுக்கவும். சுத்தம் செய்த கீரை கொத்தமல்லியுடன் துளி மஞ்சள் பொடி 2ஸபூன் காய்ச்சிய எண்ணெய் இவைகளுடன் மாவைக்கலந்து வடைகளாகத் தட்டி காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த பருப்புக் கலவையில் வடைகள் சீக்கிரம் நமுத்துப் போகாமல் கரகரப்பாக நீண்ட நேரம் இருக்கும். வெங்காயம் சேர்த்தும் செய்யலாம். சூடாகச் சாப்பிட வேண்டும். .
மசால்வடை—கடலைப்பருப்பு——வேண்டியவை—-கடலைப்பருப்பு200கிராம்,—-உளுத்தம்பருப்பு50கிராம்–பச்சைமிளகாய்4,—பெரியஸைஸ்வெங்காயம்3,-கொத்தமல்லி,கறிவேப்பிலை,உப்பு,–பொரிப்பதற்கு எண்ணெய்.
பருப்புகளை ஊறவைத்து தண்ணீரை வடித்து உப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து, காயும் எண்ணெயில் வடைகளாகத்தட்டிப்போட்டு சிவக்க வேகவைத்து எடுக்கவும். புதினா,சோம்பும் சேர்க்கலாம். உப்பு காரம் வேண்டிய அளவு கூட்டியும் குரைத்தும் சேர்க்கவும். ஊறவைக்கும் நேரம் 2மணி போதுமானது.பூண்டு 2-3-துண்டு உங்கள் விருப்பம்.