Archive for ஜூன் 22, 2009
சர்க்கரைப் போளி
கடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.
செய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

போளி பூர்ணம்
முன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

மாவு

பிசைந்த போளி மாவு
பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.
- பிசைந்த போளி மாவு
- மாவு
- போளி பூர்ணம்
4,5,—4,5ஆகதயாரித்துக் கொண்டு மிதமான சூட்டில் தோசைக்கல்லைக் காயவைத்து போளிகளைப போட்டு, ரொடடி தயாரிப்பது போல நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து போளியின் இருபுறமும் ஸ்பூனினால் தடவி , எடுக்கும்போதே இரண்டாக மடித்தும் எடுத்து வைக்கவும். இப்படியே எல்லாவற்றையும் பொருமையாக போளிகளாகத், தயாரிக்கவும். தீயாமல், கருகாமல் பதமாக எடுக்கவும். நல்ல ருசியாகவும் மிருதுவாகவும் இருககும்.
மாவில் எண்ணெய் சேர்ப்பதால் கல்லில் போடடெடுப்பதற்கு அதிக நெய, எண்ணெய் தேவையிராது.
பருப்புகளை ஸப்ரேட்டரில் வேகவைத்தால் இரண்டு விஸில் வைக்கலாம். உட் பாத்திரத்தை மூட வேண்டும்.20 போளியைவிட அதிகமாகவே என் கணக்கில் வருகிறது.
பருப்பு நன்றாக வேகவேண்டிய அவசியமில்லை.