பொடிபோட்ட ஸாம்பார்
ஜூலை 12, 2011 at 1:56 பிப 2 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக ஸாம்பார் பொடி போட்டு செய்யும் ஸாம்பார்களில்
காய்கறிகள் எதெது சேர்த்துச் செய்தால் நன்றாஇருக்கும். என்று
எனக்குத் தெறிந்ததைச் சொல்லுகிறேன்,
1 காப்ஸிகம்,காரட், பச்சைமிளகாய்
2 பூசணி, கத்தரிக்காய்
3 நூல்கோல்,வெங்காயம், பச்சைமிளகாய்
4பரங்கிக்காய், கேப்ஸிகம்,பச்சைமிளகாய்
5 வெண்டை ,தக்காளி, பச்சைமிளகாய், காப்ஸிகம்
வெண்டைக்காயை வதக்கிப் போடவும்.
6 அவரைக்காய், வெந்தயக்கீரை, பட்டாணி
7பாலக்,பட்டாணி,தக்காளி,சின்ன வெங்காயம்
8 காரட், பட்டாணி
9உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி
10 முள்ளங்கி, சின்ன வெங்காயம்
11முருங்கக்காய், சின்ன வெங்காயம்
12 பச்சை சுண்டைக்காய்,தக்காளி
13 பாகற்காய், தக்காளி.
சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெள்ளிக் கிழங்கு,
இவை போன்ற கிழங்குகளைத் தனித்துப் போட்டு செய்யும்
பருப்புக் குழம்புகள் ருசியாக இருக்கும்.
எல்லா ஸாம்பாரிலுமே தக்காளிப் பழம் ஒன்றை சிறியதாக நறுக்கி
வதக்கி சேர்க்கலாம்.ஸாம்பாரில் தக்காளியா என்று கேட்கும் போரும்
உண்டு. வறுத்து அறைத்த ஸாம்பார் என்றால் தக்காளியை வறுத்த
ஸாமான்களுடன் வதக்கி, சேர்த்து அறைத்து விட்டால் கூடநன்றாக
இருக்கிறது.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உறித்து ஸாம்பாரில் சேர்க்க
வேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சற்று நீளமாக நறுக்கி சற்று
வேகவைத்து ஸாம்பாரைச் செய்ய வேண்டும்.
பொதுவாக பாத்திரத்தில் தாளித்து காயை சற்று வதக்கி பிறகு புளி
ஜலம், ஸாம்பார்ப்ரொடி, உப்பு ,சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு,
வெந்த பருப்பைச் சேர்த்து பின்னும் கொதிக்கவிட்டு இறக்குவது
ஒரு முறை.
பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் காயைச் சிறிது வேகவைத்து
புளிஜலத்தைச் சேர்த்து, ஸாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க
வைத்து, வெந்த பருப்பு சேர்த்து , எண்ணெயில்கடுகு,வெந்தயம்
பெருங்காயம் தாளித்து இறக்குவதும் ஒரு முறை.
எதற்கும் ஒரு மாதிரிக்கு காரட், காப்ஸிகம் ஸாம்பார் செய்வோமா.
பெருஜ்ஜீரகம் ஸாம்பார்ப் பொடியில் நான் போடுவதில்லை.
புடலங்காய்,பீர்க்கங்காய்வாழைக்காய்,கொத்தவரங்காய்,வெள்ளரிக்காய்
முதலானது ஸாம்பாரில் போடுவதில்லை. வெங்காயம் கூட சின்ன
வெங்காயம்தான் ஸாம்பாருக்கு ஏற்றது.
தனித்த வெங்காய ஸாம்பார் மிகவும் எல்லோராலும் விரும்பப்படுகிறது.
சின்ன அளவில் புதியதாகப் பொடி செய்வோம்.
மிளகாய் வற்றல்—4, கொத்தமல்லி விதை—1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன், வெந்தயம்அரை டீஸ்பூன்,
மிளகு—எண்ணிக்கையில் 6அல்லது 7
மிளகாய் தவிர மற்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க
வறுக்கவும்.
மிளகாயை துளிஎண்ணெயிலகறுகாமல்வறுக்கவும்.யாவற்றையும்
ஆற வைத்து துளி மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில்பொடிக்கவும்.
ஸாம்பார்ப் பொடி சின்ன அளவில் ரெடி.
அல்லது வீட்டில்வைத்திருக்கும்ஸாம்பார்பொடிஉபயோகித்தாலும்
ஸரி..
திட்டமான காரட்—-3
பச்சையோ, சிகப்போ காப்ஸிகம்-1
பச்சைமிளகாய்–1
தக்காளி–1
துவரம் பருப்பு—முக்கால் கப் அளவிற்கு களைந்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளி—ஒரு சின்ன எலுமிச்சையளவு
தாளிக்க—எண்ணெய்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
வாஸனைக்கு வேண்டிய பெருங்காயம்
காரட்டைத் தோல் சீவி சற்றுப் பருமனான வில்லைகளாக
நறுக்கிக் கொள்ளுவோம்.
காப்ஸிகமும் அப்படியே. தக்காளியைச்துண்டுகளாக்குவோம்
புளியை ஊறவைத்து 2, 3 கப் ஜலம் சிறிதாகச்சேர்த்து
நன்றாகக் கரைத்து சக்கையை நீக்குவோம் .
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு. வெந்தயத்தையும் கூடவே சிவக்க வைத்து,
பெருங்காயத்தையும் தாளித்து, பச்சைமிளகாய் ,தக்காளியை
வதக்கி, அலம்பின காய்களையும் போட்டு 2 பிரட்டு பிரட்டி
கரைத்த புளி ஜலத்தைச் சேர்ப்போம்.
திட்டமாக உப்பு, பொடித்த ஸாம்பார்ப் பொடி , அல்லது
ஏற்கெனவே இருக்கும் ஸாம்பார்ப் பொடியில் 3 டீஸ்பூன்
சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்த பிறகு சற்று தீயைக் குறைத்து, காய்
வெந்து, புளி, பொடி வாஸனை குறைந்த பின், வெந்த
பருப்பைத் திட்டமாகக் கலக்கிச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விட்டு ஸாம்பார் நீர்க்க இருக்கும்போல்
தோன்றினால் ஒருஸ்பூன் அரிசி மாவைத் துளி
தண்ணீரில்க் கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும்
இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலையைத் தூவி
உபயோகிக்கவும். காரம் வேண்டியளவிற்கு மிளகாயை
அதிகரிக்கலாம்.
இந்தக் காய்கறி ஜோடிகள் எனக்கு மனதில்ப்பட்டு
நான் செய்கிறேன். அது ஒன்றுதான் விசேஷமே தவிர
வேறொன்றுமில்லை.
சொல்லுகிறேன்னு பேர் கொடுத்திருக்கிறேனே அதனால்
சொல்லும் மாதிரியே எழுத்து வார்த்தைகள் அமைந்து
விட்டது.
பொடிபோட்ட ஸாம்பார். அதனால் தேங்காயைக்கூப்பிடவில்லை.
மொத்தமாக இயந்திரத்தில் ஸாம்பார்ப் பொடி செய்தால்
துவரம் பருப்பு போடலாம். அரிசியும் நான் போடுவதில்லை.
கதை மாதிரி நீண்டு விட்டது பதிவு.
Entry filed under: ஸாம்பார் வகைகள்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 4:09 பிப இல் ஜூலை 12, 2011
எனக்கு கதை படிக்க ரொம்பப் பிடிக்கும்மா! 🙂 நல்லா இருக்கு கதை!
நான் தக்காளி-வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்க்காமல் சாம்பார் செய்ததே இல்ல! இன்ஃபாக்ட் இது மூணும் இல்லாம எனக்கு சமைக்கவே தெரியாது! 😉
சாம்பாரில் நூல்கோல்-கிழங்குவகைகள் எல்லாம் சேர்ப்பது புதுசா இருக்கு..கேரட் கேப்ஸிகம் எப்பொழுதாவது ஒருமுறை சேர்ப்பேன்.
அரிசிமாவு கரைத்து விடும் தேவை இதுவரை வரவில்லை,வெந்த பருப்பை சேர்க்கையிலேயே சாம்பார் பதம் வந்துவிடும் எனக்கு.
கமென்ட்டையும் கதைபோல போட்டுட்டு இருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ! 😉
2.
chollukireen | 1:58 பிப இல் ஜூலை 13, 2011
பச்சைமிளகாய், தக்காளி தினம் போடுவாய்ஸரி. தினப்படி எல்லா ஸாம்பாரிலும் வெங்காயம் சேர்க்காத ஒரு சாராரும் உண்டு. எப்போதும் ஒரே ஸாம்பார்ப் பொடியை உபயோகித்துச் செய்தாலும், காய்களின் மாற்றத்தினால் ஸாம்பார் ருசி மாறும். காயைச் சேர்த்து ஸாம்பாரின் பெயரையும் மாற்றிச் சொல்வது வழக்கம்.முள்ளங்கி போன்ற நீர்க் காய்கள் உபயோகிக்கும் போது ஸாம்பார் சற்று நீர்க்க வாய்ப்புள்ளது. பருப்பு
நிறைய போட்டால் கவலையே இல்லை. ஸாம்பார்ப்
பொடியிலேயே அரிசி சேர்ப்பவர்களும் உண்டு. எழுதினதிலேயே சில விட்டுப் போய்விட்டது போலத் தோன்றுகிறது. உன்மாதிரி கமென்ட்டுக்களை, ஆர்வமுடன் வரவேற்கிறேன். நல்லது.அன்புடன்