திருவாதிரைக் குழம்பு
திசெம்பர் 17, 2013 at 9:35 முப 2 பின்னூட்டங்கள்
படங்கள் போட முடியாதபடி என்னால் ஸரி செய்யமுடியாத அளவில் இருக்கிறது எனது கணினி. திருவாதிரைக் குழம்பும்
கூட வரட்டுமே. பருப்பு அதிகம் போட்டும் செய்யலாம். பாருங்கள் இதுவும் திருப்பிப் போடும் பதிவுதான்.அன்புடன்
இதை ஏழுதான் குழம்பு என்று சொல்வார்கள்.
பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் போட்டோமென்று மிகைப்
பட்டுப் போகும் அளவிற்கு காய்கள் கிடைத்து விடும்.
களியும் கூட்டும் நிவேதனம் என்று சொல்லி முருங்கை,
சுரைக்காய், முள்ளங்கி இதெல்லாம் சேர்க்க மாட்டார்கள்,
அது ஒரு கால பழக்கம்.
நாம் வேண்டியவைகளைப் பார்க்கலாம்.
பூசணி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு,
பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ
சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி
என பட்டியல் போட்டால் எதைவிட்டு எதைப் பிடிப்பது.
கத்ரிக்காய், பாகற்காய், வாழைக்காய்,வேறு இருக்கிறது.
இனிப்பு காய் வகைகளைக் குறைத்துப் போடலாம்.
நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ ஏதாவதொன்று.
வேண்டிய காய்களைச் சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும்.
மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம்.
பருப்பு —துவரம்பருப்பு முக்கால் கப்
வறுத்தரைக்க சாமான்கள்.
வற்றல் மிளகாய்—-10
தனியா—2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு——ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் ஒரு மூடி
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
புளி ஒருபெரிய எலுமிச்சை அளவு கரைப்பதற்கு
தாளிப்பிற்கு —கடுகு, பெருங்காயம்
வாஸனைக்கு—-கொத்தமல்லி கறிவேப்பிலை
ருசிக்கு உப்பு
செய்முறை. —பு்ளியை ஊறவைத்துக் கறைத்து
வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு.
வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில்
வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து
மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில் காய்களை
வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து …
View original post 76 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
adhi venkat | 1:13 பிப இல் திசெம்பர் 18, 2013
அருமையான குழம்பு…
இன்று நானும் செய்து சுவைத்தோம்…
2.
rajisivam51 | 5:39 பிப இல் திசெம்பர் 19, 2013
குழம்பு ரெசிபி அருமையாக இருக்கிறது.
நன்றி பகிர்விற்கு.