Archive for ஜூலை 21, 2016
பூ–பூ என்னபூ
பூ–பூ என்னபூ குழந்தைகள் சொல்வார்கள் புளியம்பூ.இல்லை இல்லை ஸாயபூ என்று பேசக் கற்றுக் கொடுப்போம்.
அந்தவகையில் தொட்டியில் பூத்த பூவைப் பார்த்து மகிழ்ச்சி. நேற்று இன்டர்நெட் வேலை செய்யவில்லை.விடை எழுத முடியவில்லை.
இது வெறெதுவும் இல்லை. நித்ய மல்லியும் இல்லை. நந்தியாவட்டையுமில்லை.
இந்தச் செடியை என் மருமகள் பிரதீஷா ஜோர்ஹாட்டிலிருந்து கொண்டு வந்து நட்டாள். சென்ற ஜூலையில் ஆகாயவிமானத்தில் பயணித்து வந்த செடி இது. அன்று பார்க்கிறேன். அதில் பூக்கள். புதியதாக கொள்ளுபேரன் பிறந்தமாதிரி பரவசம். உடனே படமெடுத்தேன். பேத்தியையும் படமெடுக்கச் சொன்னேன். பார்த்தால் சிறு காயுடன் வேறு தரிசனம் கொடுக்கிறது. நம்முடைய தமிழில் அதன் பெயர் தெரியும். பூவெல்லாம் எங்கு பார்த்திருக்கப் போறேன்.!!!!
வட இந்தியாவில் இப்பழத்தை மெல்லிய கீற்றுகளாக நறுக்கி உணவின்போது உடன் பிரியமாக உபயோகிக்கிரார்கள். பெயருக்கு வருவோமா? கதை சொல்லுகிறேனா?
மேல்நாட்டில் Finger LIME—Cavier Lime
நம் நாட்டில்,தமிழ்நாட்டில் —கொடி எலுமிச்சை Crotalaria evolvuloides
ஹிந்தியில்—நிம்பு. அஸ்ஸாமியில் காஜிநெமு. பெங்காலியில் ரஸ்ராஜ்
இன்னும் எவ்வெவ்வளவு பெயர்களோ? செடி,பூ,பிஞ்சு எல்லாம் எங்கள் வீட்டுப் படங்கள். காய் பட உதவி கூகல். மிகவும் நன்றி.
ஆக இந்த பூ–பூ கொடி எலுமிச்சை பூ. பதிலளித்த யாவருக்கும் நன்றி. காயாகவும் பழமாகவும் உபயோகிக்கலாம். நல்ல எலுமிச்சை வாஸனையும் சுவையும் உண்டு. தோல் பருமனாக இருக்கும். ஊறுகாய்க்கு அவ்வளவு ஏற்றதல்ல. பூ அழகாக இருக்கிறது. மரமாக அடர்ந்து வளரும். நிறைய தகவல்கள். இல்லையா?
செடியைக் கொண்டு வந்த பிரதீஷாவிற்கும் நன்றி.இரவு மணி 11. இன்டர்நெட் வேலை செய்தது. போட்டும் விட்டேன்.