Archive for ஜூலை 26, 2016
தொட்டில்—10
காலங்கள் வேகமாக இல்லாவிட்டாலும் அதன் போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.
வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன் உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.
மெள்ள மெள்ள நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு பண்ணி விட்டேன். இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நான் ஸம்மதிக்கவே மாட்டேன். நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான். அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன். பதில் பேசியாயிற்று.
போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம். பேச்சு வலுத்து, அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.
வீட்டைவிட்டுப் போகும் வயதா? ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர் இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள். மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன். அழலாம் மனதோடு மருகலாம்.
அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.
பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்? அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்? வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.
இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும் ஒரே நாளில். யாரும் மூச்சு பேச்சு காட்டக்கூடாது.
அவர்களிடமும் நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். இரண்டு நாள் முன்னால் யாருக்குச் சொல்லணுமோ சொல்லிக் கொள்ளலாம்.
அசட்டு அக்காவிற்கு சற்று யோசனை வலுத்தது.ஐயோ நமக்கு ஸரிப்படுமா.
எல்லாம் ஸரியாகிவிடும். நமக்கு சாப்பாடே அவர்கள் வீட்டிலிருந்து அனுப்புவதாகச் சொல்லி விட்டார். இதைவிட நமக்கு என்ன வேண்டும்.?
நான் ஸரி சொன்னதால்தான் இந்த ஏற்பாடு. எனக்கும் உடம்பு நன்றாக இல்லை. அதைப் புரிந்துகொள்.
நான் அசடு. எது சொன்னாலும்ஸரி.
ஊரே அதிசயித்தது. இது என்ன காதும்,காதும் வைத்தாற்போல ஸ்வீகாரமாம்,பூணூலாம். அதிகம் யாரையும் கூப்படவில்லை. தங்கையே உறவு இல்லை. மற்றவாளைப் பற்றி என்ன?
பத்திரம் பெற்ற பிள்ளைக்குண்டான எல்லா அதிகாரமும் ஸ்வீகாரப்பிள்ளைக்கு. ஸொத்தை விற்பதானால்கூட பிள்ளயின் அனுமதி வேண்டும்.
ஸொரத்தா ஒன்றும் இல்லை. யாருடனும் யாரும் அதிகம் பேசவில்லை. அம்மாக்காரி அழுத மூஞ்சியுடன்தானிருந்தாள். போய் வந்தவர்களின் குசுகுசுப்பான பேச்சு. ஆக ஸ்வீகாரம் ஆயிற்று. கதை இத்துடன் முடியவில்லை.
பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. அவர்கள் வீட்டிற்கு இவர்கள் பண்டிகை பருவங்களுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டும் வந்தனர். இப்படியே காலம் போகும்போதே ஸ்வீகாரத் தகப்பனாரும் போய்ச் சேர்ந்தார். பையன் பெரியவனாகி வெளியூருக்கு வேலைக்கும் போய் விட்டான்
இனிமேல்தான் அசட்டு அக்கா காலந்தள்ள வேண்டும். நீ ஒருத்திதானே. ஒரு அரிசி வைத்துக் கொண்டு சாப்பிடு. ஸாமான் வாங்கித் தரேன். இப்படி அப்படி அரிசியாகக் கொடுப்பதும்,சிலவுக்கு பத்து ரூபாய் படியளப்பதுமாக ரேஷன் அமுலுக்கு வந்தது. அசடு.கொடுத்ததை வாங்கிக் கொண்டு பணம் போரலே. இன்னும் இரண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்கும் லெவலுக்கு வந்து விட்டது.
அடுத்த தெருவில் தங்கை பணக்கஷ்டம் நீங்கி நல்ல நிலையே. அக்கா புருஷன் சாவிற்கு போகக்கூட அனுமதிக்காத குடும்பத்தினரின் ஆக்கினையில். அவளின் பெரிய பையன் அவ்வளவாகப் பணம் ஸம்பாதிக்கவில்லை. தியாகு உஷார்.வாங்கும் ஸொத்துக்களைத் தன் பணம் கொண்டே வாங்கி, தன்பேரிலேயே பத்திரங்களையும் தயார் செய்து கொண்டு மிகவும் உஷார் ஆஸாமியாக வலம் வந்தான்.
தானும் கல்யாணம் செய்து கொண்டு ஊராரைப்போல ஒழுங்காக வாழ ஆசை. பெரியவன் நமக்கு வருமானம் போதாது. நாம் இப்படியே வாழ்ந்து விட்டால் போதும். தம்பியை நீ வேண்டுமானால் செய்து கொள் . நம் வீட்டுச் சூழ் நிலையில் இன்னும் சங்கடங்கள் அதிகமாகும். கல்யாணம் வேண்டாம் என்ற தங்கை ஒருத்தி,ஆகாத அக்கா, ஆதரவில்லாத அப்பா, வேண்டாம்பா.
நீ செய்து கொண்டால்கூட நிம்மதி இருக்காது.முடிவு சொல்லி விட்டான். அங்கும் வயதான பெரியவர்கள்.
வாழத்துடித்தவனுக்குப் பெண்ணா கிடைக்காது? தெரிந்தவர்கள் மூலம் பெண் ஏற்பாடு ஆகியது. கல்யாணமும் ஆகியது. வீட்டில் வழக்கம்போல சண்டை,வாக்குவாதங்கள் தொடங்கியது. இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே தனிக்குடித்தனம். அம்மா மட்டிலும் போகவர இருந்தாள் பக்கத்து வீடே. இவர்கள் இருந்ததும் தியாகுவின் பேரிலான வீடே.
இரண்டு வருஷங்களிலேயே குழந்தை பிறக்கவில்லையே என்ற குறையில், தம்பதிகள் அயலூருக்குப் போய் வைத்தியம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். என்ன அவஸரம்? அம்மா சொன்னாலும் கேட்கவில்லை.
சண்டைக்கார அப்பா போய்விட்டார். தியாகுவிற்கு உடம்பு ஸரியில்லை. என்ன ஏது கேட்டால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பதிலே வந்தது. அக்கா தங்கைகள் பேச்சு வார்த்தை இல்லை. என்ன நடக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. டாக்டர் வந்து விட்டுப் போகிரார்.
என்னடா உடம்பு என்று கேட்டால் அவனும் ஒன்றும் இல்லேம்மா. நீ ஏன் விசாரப்படறே? என்கிறான்.
இரண்டு மூன்று தலைமுறைகளில் விஷயங்கள் கேட்கும்போது பெரியவர்கள், அவரவர்களின் காலம் ஏதோ ஒருவிதத்தில் முடிந்து விடுகிறது. ஸ்வீகாரம் கொடுத்தவரும் போயாச்சு.
அக்காக்காரியும் அசடாக இருந்ததால் கடவுள் நல்லபடியாகவே அழைத்துக் கொண்டு விட்டார் போலும்.
பிள்ளையாக நிர்ணயிக்கப் பட்டவன் வந்தான். காரியங்களைச் செய்தான். நிலம்,வீடுவாசல்,மாந்தோட்டம் எல்லாவற்றையும் விற்றான். நேராக அனாதைக்குழந்தைகளைக் காப்பாற்றும் ஸர்க்கார் காப்பகத்திற்குச் சென்று அவர்களின் நலனுக்காக இதை ஃபண்டாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

Nurses tend to nstate of Tamil Nadu June 20, 2013. These unwanted infant girls in southern India’s Tamil Nadu state are considered the fortunate ones. They are India’s “Cradle Babies,” products of a government scheme that permits parents to give their unwanted baby girls anonymously to the state, saving them from possible death in a region where daughters are seen as a burden and where their murder is a common reality. Picture taken June 20, 2013. To match INDIA-CRADLEBABIES/ Thomson Reuters Foundation/Mansi Thapliyal (INDIA – Tags: SOCIETY)
படம் உதவி—-கூகல்…நன்றி.
தங்கை. பிள்ளையின் பக்கத்திலேயே கவலையுடன் இருக்கிராள். யாரோ வக்கீல் அயலூரிலிருந்து வந்துள்ளனர். ஏதோ பத்திரம் எழுதி கையெழுத்து வாங்குகிரார்கள்.
தியாகு சொல்கிரான்.அம்மா எனக்கு மனைவி அவள். நீங்கள் இருக்கும் வீட்டில் நீங்கள் யாவரும் இருக்கும் வரையில் இருக்கலாம். விற்க வாங்க முடியாது.
ஓரளவு பணமும் உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். மீதியாவும் என் மனைவிக்கே. அவள் உன்னைப் பார்த்துக் கொள்வாள். நான் மீளமுடியாத அளவிற்கு ரத்தப் புற்றுநோயால் கடைசி நிலையில் இருக்கிறேன்.
தாய்க்குத் தாளமுடியவில்லை. மூர்ச்சையானவள் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே மூன்று நாட்களாயிற்று. அதிக வைத்திய முன்னேற்றமில்லை. கேன்ஸர் வந்தவர்கள் பிழைப்பதில்லையா?இப்போதைக்கு இந்த வார்த்தை ஸரியாக இருக்கலாம்.
முடிவு உங்களுக்கே விளங்கி இருக்கும். அவ்வளவு தெரிந்த மனிதர்கள் கூட்டம் தியாகுவை வழியனுப்பக் கூடியது. இரண்டொரு வருஷங்கள் நகர்ந்தது.
தியாகுவின் மனைவிக்கு வேண்டியவர்கள் அவளுக்கு மறுமணம் செய்வித்து விட்டனர். இருந்த எல்லாவற்றையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டு போய்விட்டாள். இரட்டையும் ஒற்றையுமாக அவளுக்கு மூன்று குழந்தைகள்.
படம் உதவி கூகல். மிக்க நன்றி
தியாகுவின் அம்மா,அக்கா என்று யாவரும் துக்கத்தின் பிடியில் போனார்கள்.
இருந்த பெரியபிள்ளை போனது வேலைக்காரி காலையில் பார்த்த போதுதான் தெரிந்தது. விவரிக்க இஷ்டமில்லை.
அந்த வீடும் தியாகுவின் மனைவியாக இருந்தவளுக்குதான். நம்ப முடிகிறதா?
தொட்டில்கள் ஆடுகிறது. அனாதை இல்லத்திலும், முன்னாள்மனைவியாக இருந்த தியாகுவின் மனைவியின் இந்நாள் குடும்பத்திலும். கதையாகப் படியுங்கள். நீண்ட கதை.நிதானமாகப் படியுங்கள்.