Archive for ஜூலை 29, 2016
அதிசயக் குழந்தை
மும்பை மஹிம் ஏரியாவைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு தொழிலாளியின் மனைவியை செவ்வாய்க் கிழமையன்று மூன்றாவது பிரஸவத்திற்காக ஸையான் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்தனர். ஏற்கெனவே அப்பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வயது அவருக்கு 26. பிறந்தது என்னவோ ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தை.
வலி எடுத்ததும் மருத்துவர்கள் பிரஸவம் பார்த்தும் அவருக்கு ஸுகமான பிரஸவம் ஆகவில்லை. இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரஸவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தனர். வியாழக்கிழமையன்று.
பிரஸவம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும். குழந்தைக்கு இரண்டு தலைகள்,இரண்டுகால்கள்,இரண்டு கைகள், வயிற்றில் தொப்புள் கொடிகள் இரண்டு..
மூன்று கைகள் என்று சில பத்திரிக்கை எழுதினது.
பிறந்ததும் இரண்டு வாய்களாலும், காலை அசைத்து குழந்தைகள் வீறிட்டு அழுதது.இரண்டு குழந்தைகளும் மார்புப் புறத்திலிருந்து இடுப்புவரை ஒட்டிப் பிறந்திருந்தது. டாக்டர்களுக்கு ஒரே வியப்பு. அந்தக்குழந்தை உடல் நலத்துடன் இருக்கிறது.
குழந்தைகளை ஸி.டி ஸ்கேன், ,ஈ.ஸி.ஜி என பலவித டெஸ்டுகளும் செய்து பார்த்ததில் அவர்களைப் பிரிக்கலாம். அதுவரை அந்த இரட்டையர்கள் ஒரு ஹ்ருதயத்திலேயே ஸ்வாஸிக்க வேண்டும். ஏன் என்றால் இருவருக்குமாக இருப்பது இரண்டுகால்கள்,இரண்டு கைகள், ஒரு கிட்னி, ஒரு லிவர், இரண்டு intestines, ஒரு ஆண்குறி, ஒரு ஹார்ட் இரண்டு aortas.
இரண்டு குழந்தைகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமமிருந்தாலும் நல்லபடியாகவே உள்ளது. இரண்டின் எடையும் சேர்த்து மூன்றறை கிலோ உள்ளது.
பிரித்தெடுக்கும் வகையில் ஒரு குழந்தைதான் உயிரோடிருக்க முடியும். அதுவும் உறுதி செய்வது கடினம் என்பது டாக்டர்களின் அபிப்ராயம்.
முதலிலேயே தொடர்பு கொண்டிருந்தால் கர்பத்தை கலைத்திருக்க முடியும். நல்ல தேர்ந்த டாக்டர்களின் மேற்பார்வையில்தான் யாவும் கவனிக்கப்பட்டு வருகிறது.
யாவும் நல்லபடியாக முடியவேண்டும் என்று அந்த முகம் அறிந்திராத பெண்ணிற்காக நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.
செய்தி மும்பைமிரர்,தினத்தந்தியின் வாயிலாக . நன்றி இரண்டு பத்திரிக்கைகளுக்கும்.