தொட்டில்—9
ஜூலை 24, 2016 at 12:56 பிப 14 பின்னூட்டங்கள்
வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர் வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை முன்னிறுத்தியே ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.
இனி இவர்கள் இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர் ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார். அவ்விடம் போய் நாம் குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.
யாருமே வேண்டாம். அவர்களாகவே போட்டு விடட்டும். பிறகு இந்தப் பேச்சே வராது. முடிவெடுத்து விட்டனர்.
நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க ஏதோ வேலையும் கிடைத்தது. வீட்டில் இரண்டு சமையலும். பெரிம்மாவை திட்டுதலுமாக எப்போதும் சச்சரவு நீடித்தது.
தியாகு ஒருநாள் பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.
விடியற்காலமே நிலத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் புது வேஷ்டியும், பூணலும், மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சாயங்காலம் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்கிரார்கள். என்னடா இது தாய் விக்கித்துப் போய் ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான். இன்னும் என்ன வெல்லாம் ஆகப்போகிறதோ?
அந்த மனுஷன் கத்துவாரே. நன்னா இருங்கடா. காலம் விடியணும். கதறல்தான்.
பெரியபெண் கத்துகிராள். வெளியில் போங்கடா. அப்பாகாரரும் வந்து விட்டார். அடிக்கப்போய் பசங்கள் தடுத்து நாங்கள் தப்பு ஒன்றும் செய்யவில்லை. இனி உங்கள் அடியெல்லாம் மறந்து விடுங்கள். ஏக ரகளை. பக்கத்து வீட்டுப் பாட்டி வருகிராள். விஷயம் தெரிகிறது.
நகருங்கள் எல்லாம். மஞ்சபொடி இருந்தா கொண்டுவா. ஆரத்தியைக் கரைத்து பிள்ளைகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டிவிட்டு வருகிறாள். போதும் உங்கள் சண்டை. ஊர் சிரிக்கும்.கௌரவமாக இருங்கள் என்று பல விதத்திலும் சொல்லி பெருத்த சண்டையை குறைக்கிராள். சாப்பாடு,அப்படியே கிடந்தது. ஸந்தோஷமான நாள் மூலைக்கொருவராக முடங்கினர்.ஊரெல்லாம் இதே பேச்சு.
நாட்கள் ,மாதங்களாக நகருகிறது. பிரும்மசர்ய ஆசிரமம் நல்ல கல்வியை கற்கும் நேரம். இந்தப் பிள்ளைகளும், அக்கம் பக்க நிலங்களையும் கவனித்து, அவர்களுக்கு இலாபகரமாக நெல்லை விற்றுக் கொடுத்துத்,தாங்களும் அதிலும் தியாகுவும் பொருளீட்ட ஆரம்பித்தனர்.
பெரியபெண்ணுக்கு வயது அதிகம். கல்யாணமில்லை. இன்னொரு பெண் ஏதோ இரண்டாந்தாரமாக கோவிலில் வைத்து கல்யாணம்.
எதற்கும் யாரையும் கூப்பிடுவதில்லை. வன்மம் அதிகமாகிக் கொண்டே போனது. தியாகு சின்னதாக வீடுகூட வாங்கி விட்டான்.
அக்கா குடும்பம். பெரிப்பா திடீரென உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. போக்குவரத்து பேச்சு வார்த்தை இல்லை.பிரயோஜனமுமில்லை. அவருக்கு தன்நிலத்தையே பார்க்கப் போகக் கூட முடியவில்லை. அவருடைய நிலத்தின் பக்கத்து நிலக்காரரும் அவருக்கு ஸொந்தமானவர். அவர்தான் நிலத்தை கவனித்தார்.
அவருக்கும் இந்த நிலத்தின்மீது ஒரு கண். அக்கா,தங்கை குடும்பமும் விரோதிகளாக இருக்கிரார்கள். நல்ல சான்ஸ்தான் என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.
அவருடைய வழக்கமே நிலமுள்ளவர்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் வலியபோய் பணம் கொடுப்பது. அவர்களுக்கு முடியாத ஸமயங்களில் கஷ்டம் கொடுத்து எழுதி வாங்குவது,மேன்மேலும் பாரம் சுமத்தி விற்கும் நிலைக்கு ஆளாக்கி தானே வாங்குவது என்பதில் கை தேர்ந்த நிபுணர். நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் நிபுணர்.
பெரிப்பாவிற்கு தான் போய் விட்டால் இந்த அசட்டு மனைவி தெருவில் நிற்பாளே! யோசனைகளே ஆளை உலுக்கியது. என்ன செய்யலாம் யோசனையை பக்கத்து நிலக்காரரையே ஆத்மார்த்தமாக நம்பி கேட்க ஆரம்பித்தார். அவருடைய புத்தி இன்னும் தீட்சண்யமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
நாமே நம்முடைய பிள்ளையை ஸ்வீகாரம் கொடுத்து ஸொத்தை அடைந்து விடலாமே. மெள்ள மெள்ள யோசனை வலுத்தது.
நான் இருக்கும் போது உனக்கேன் கவலை. உனக்கு ஒன்றும் ஆகாது. உன் மனைவி எனக்குக் கூடப் பிறந்தவள்மாதிரி. நீ கவலையே படாதே. பங்காளிகளால் கஷ்டம் வரலாம். நான் அதற்கும் யோசனை வைத்துள்ளேன் கவலைப்படாதே.
வார்த்தைகள் தேனாக இனித்தது.
செயல்படுத்த வேண்டுமே. வீட்டிற்கு வந்ததும் அவர் மனைவியிடம் நான் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறேன். யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. என்றாவது மறுப்பு சொல்ல அந்தக்கால மனைவிகளுக்கு உரிமை இருந்ததா என்ன?
யார் ஸொத்தை குறைந்த விலைக்கு வாங்கப் போகிராரோ? யார் சாபம் இடப் போகிரார்களோ? எதற்கு இந்தப் பேராசையோ? மனைவி ஸந்தோஷப்படவில்லை.
என்ன ஏது என்றும் கேட்கவில்லை.
நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். என்ன ஏது என்று யாரும் கேட்கவில்லை.
கதையில் பெரியப்பாவாக வருபவரிடம் சென்று உனக்கு இகம்,பரம் இரண்டிற்கும் உங்கள் குடும்பத்திற்கு நான் இருக்கிறேன். என் பிள்ளைதான் உன் பிள்ளை. யாருக்கும் இப்போது சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறு.
என்ன இவன் இப்படிச் சொல்லுகிறான். புரியவில்லையே. புரியும் பிறகுதான். ஓ.இவனுக்கும் ஒரு பிள்ளை இருக்கிரான். நமக்கு அதெல்லாம் ஸரிப்படுமா?
கண்ணான நிலம். பிள்ளையைக் கொடுத்தாலென்ன பெயரளவிற்குதானே. மனதில் பதிந்தாகி விட்டது.
தியாகு இன்னுமொரு வீடு வாங்கி இருக்கானாம். இதுவும் அவருக்கு ஒரு செய்தியாகத் தெரிவித்து அவர்களெல்லாம் எக்காலத்திலும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் உங்களை. நானிருக்கப் பயமேன்? தொடரலாம்.
Entry filed under: கதைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 9:44 பிப இல் ஜூலை 24, 2016
காமாக்ஷிமா,
ஒரு கஷ்டத்திற்கு …. அதுவும் பெரும்பாலும் பெண்ணின் திருமணத்திற்காகத்தான் இருக்கும் …… வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல், நிலமாகக் கொடுத்து, கடைசிவரை புலம்பியபடியே இருந்ததை நானும் பார்த்திருக்கிறேன்மா.
இவரின் சூழ்ச்சி பலிக்குமா ? அல்லது உறவே தத்துப் பிள்ளையாக வருவாரா ? அடுத்த பதிவுக்காக ஆவலுடன் சித்ரா.
2.
chollukireen | 3:55 முப இல் ஜூலை 31, 2016
அடுத்த பதிவும் போட்ட பிறகே பதில் எழுதுகிறேன். நன்றி.அன்புடன்
3.
ஸ்ரீராம் | 12:46 முப இல் ஜூலை 25, 2016
தொடர்கிறேன். நிலத்தை அடைய எத்தனை எத்தனை ஏமாற்று வேலைகள்! ம்ஹூம்… ஆனால் அந்தக் காலத்திலும் தைரியமாய்த் தட்டிக்கேட்ட மனைவிகளும் உண்டு.
4.
chollukireen | 3:58 முப இல் ஜூலை 31, 2016
மெசாரிட்டி அடங்கிப் போவதுதான். அடக்கு முறையிலேயே பழகிப்போனவர்கள் கத்தலாமே தவிர காரியம் கஷ்டம்தான். அது அந்தக் காலம். அன்புடன்
5.
Geetha Sambasivam | 8:01 முப இல் ஜூலை 25, 2016
ம்ம்ம்ம்ம், மனிதர்களில் தான் எத்தனை ரகம்! இப்படியும் சில ஏமாற்றுக்காரர்கள்!
6.
chollukireen | 4:00 முப இல் ஜூலை 31, 2016
எல்லாம் இரண்டறக் கலந்ததுதான் இவ்வுலகம். விதங்கள்,நிகழ்வுகள் வேண்டுமானால் மாறுபடுகிறது. அன்புடன்
7.
ranjani135 | 3:52 பிப இல் ஜூலை 26, 2016
நேற்றைக்கே வந்து படித்தேன். மனது கனத்துப் போனதால் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. இன்று அடுத்த பகுதியும் படித்து கருத்தும் போட்டிருக்கிறேன்.
8.
chollukireen | 4:03 முப இல் ஜூலை 31, 2016
நடந்தகதை. இப்போதெல்லாம் இம்மாதிரி நடக்காது என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். அன்புடன்
9.
கோமதி அரசு | 12:27 பிப இல் செப்ரெம்பர் 3, 2016
என்றாவது மறுப்பு சொல்ல அந்தக்கால மனைவிகளுக்கு உரிமை இருந்ததா என்ன?//
எல்லாவற்றிருக்கும் தலையாட்டல் மட்டும் தான்.
என் அம்மா சொல்வார்கள் இப்படி சில கதைகளை .
படிக்கும் போது கஷ்டமாய்தான் இருக்கிறது.
10.
chollukireen | 3:39 முப இல் நவம்பர் 17, 2020
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இந்தத் தொட்டில் எவ்வெப்படி எந்தெந்த விதத்தில் போய்க்கொண்டு ஆடத்துவங்கியது? பாருங்கள் அன்புடன்
11.
Geetha Sambasivam | 6:19 முப இல் நவம்பர் 17, 2020
மனதெல்லாம் வேதனை. ஏற்கெனவே படித்திருந்தாலும் மறுபடி மறுபடி மனித மனம் ஏமாற்றுவதில் எப்படி முன் நிற்கிறது என்பதை யோசித்து யோசித்து! ஒண்ணுமே புரியலை! இப்படியும் மனிதர்கள்!
12.
chollukireen | 12:12 பிப இல் நவம்பர் 17, 2020
நலலது,கெட்டது எல்லாம் கலந்துதானே நடக்கிறது? அதது அவ்வப்போது நடககும்போதுதான் வீர்யம் புரிகிறது.எல்லாம் பிளான் போட்டு நடப்பதில்லை. அது அந்தக்காலம். படிப்பினை சுற்றி இருப்பவர்களுக்கும். அதையும் மீறி பூனை இருக்கும் இடத்தில்தான் , எலி பேரன் பேத்தி எடுககிறது. ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள். நன்றி. ்ன்புடன்
13.
சஹானா கோவிந்த் | 8:59 முப இல் நவம்பர் 19, 2020
ஏமாளி இருந்தால் ஏய்பவன் உண்டுனு சொல்லுவாங்க, இங்கு அது தான் நடக்கிறதோ 😞
14.
chollukireen | 11:36 முப இல் நவம்பர் 21, 2020
உதவி என்ற போர்வையில் சிக்கிக் கொள்வது.அன்புடன்