Archive for நவம்பர் 11, 2020
நேபாளத்தில் தீபாவளி
எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. தீபாவளி ஸமயத்தில் ஞாபகம் வந்தது . ஸேல் ரொட்டியின் தீபாவளி இது. அன்புடன்
குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள்
பலவித பெயர்களைச் சொல்லிக் கொண்டாடுவார்கள்.நேபாளத்தில்
கடவுள் பக்தி அதிகம். முன்பு அரசாட்சியாக இருந்த போது, நவராத்திரி
தொடங்கி, தீபாவளி முடிந்து நான்கந்து நாட்கள் வரை அதாவது ஒரு
மாதத்திற்கதிகமாக ஸ்கூலிற்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
எல்லா பண்டிகைகளின் போதும் டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம்
ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும் ரக்ஷையை நெற்றியிலிட்டுக் கொள்வது
அவர்களாகவே நெற்றியிலிட்டு ஆசீர்வதிப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும்.
டீக்கா என்பது சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன் செந்தூர்க்
குங்குமம் சேர்த்து கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக
ஒட்டிக்கொண்டு பளிச்சென்று பார்வையாக இருக்கும்.
ஒரு ரூபாயளவிற்கு இதை நெற்றியிலிட்டு வயதில்ப் பெறியவர்கள்
சிறியவர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தசராவில் இந்த ஆசியை
வாங்க எங்கிருந்தாலும் வீட்டுப் பெறியவர்களிடம் வந்து சேர்ந்து
விடுவார்கள். திஹார் என்றால் நேபாலியில் பண்டிகை என்று அர்த்தம்.
தீபாவளியை ஐப்பசி அமாவாஸையன்று கொண்டாடுகிறார்கள்.
அன்று தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள், அன்றே காய் பூஜாஅதாவது
பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.
அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில் முதல் நாள்
கௌவா பூஜா. காக்கையை கவுரவித்து அன்னமிட்டு பூஜை.
சுற்றுப்புற சூழலுக்கு நன்மை செய்வதைப் போற்றி நடக்கிறது.
மறுநாள் குகுர் அதாவது வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக்
கவுரவித்து, பைரவர் எனப்போற்றி நாய்க்கு மாலை அணிவித்து,
திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு அதைக் கவுரவிக்கிறார்கள்.
லக்ஷ்மி பூஜை பெறிய அளவில் …
View original post 295 more words
ஸேல் ரொட்டி
இந்த பக்ஷணம் நேபாலில் செய்யப் படுவது. தீபாவளி நேபாலத்தில் என்று எட்டு வருஷங்களுககு முன்பான என் பதிவினை மீள் பதிவு செய்யும் முன்னர், அந்த சிற்றுண்டியைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய அப்பம் போன்ற ஒரு ருசியுடைய வேறு உருவத்தில் இந்த தின் பண்டம். இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எவ்வளவு செய்வார்கள் தெரியுமா? நிறைய செய்து யாவருக்கும் கொடுப்பார்கள். லக்ஷ்மி பூஜைக்கு மிகவும் அவசியமாக இது வேண்டும். மாவைக் கையில் எடுத்தே இந்த வட்டத்தைச் சுற்றி விடுவார்கள்.
காலி பால்கவரில் ஒரு துளை போட்டும் ஜிலேபி சுற்றுவது போல மாவை அதில் நிரப்பியும் செய்யலாம். பார்க்கலாம்.

வேண்டியவைகள்.1-
ஒரு டம்ளர் -பச்சரிசியை நன்றாக ஊறவைத்து வடிக்கட்டி கரகர பதத்தில் மாவாக பொடித்துக் கொள்ளவும் அடுத்து நான்கில் ஒரு பாகமாக கால் டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு
டேபிள்ஸ்பூன் நெய்,ஒருசிட்டிகை ஏலப்பொடி ,ஒரு சிட்டிகை சமையல் ஸோடாஉப்பு ,துளி உப்பு சேர்த்து, அகன்ற பாத்திரத்தில் யாவையும் ஒன்றாகக் கலந்து, பாலை விட்டு நன்றாகப் பிசையவும் . ஒரு மணி நேரம் ஊறவிடவும் பிறகு இட்லி மாவு பதத்திற்கு அதை கறைத்துக் கொண்டு தயாரிக்க வேண்டியதுதான்.
வாயகன்ற வாணலியில் எண்ணெயைக் காயவைத்து டோனட் வடிவததில் மாவை எண்ணெயில் வேக வைத்து ,திருப்பிவிட்டு சிவப்பாக எடுபபார்கள். சும்மா ஓரளவு புரிந்தால் ஸரி . யாரும் செய்யப் போவதில்லை. நம்முடைய இனிப்புக்களை விடவா? இதைப் படித்து விட்டு என் மீள் பதிவையும் பாருங்கள்
.எல்லோருக்கும் வாழ்த்துகள். தீபாவளியன்று வாழ்த்த வருகிறேன். அன்புடன்.