Archive for ஏப்ரல் 12, 2010
பீட்ரூட் பச்சடி [கட்டா மீட்டா]
வேண்டியவைகள்—-திட்டமான அளவில் 2 பீட்ரூட்
வெல்லப் பொடி—-கால்கப்
புளி—சின்ன நெல்லிக்காயளவு
மிளகாய்ப் பொடி—அரை டீஸ்பூன்
கரம் மசாலா அல்லது ஏலக்காய்ப் பொடி–சிறிது
ஒரு டீஸ்பூன் —-எண்ணெயும், சிறிது கடுகும்.
கால் டீஸ்பூன் —உப்பு. மிளகாய் ஒன்று
செய்முறை—–பீட்ரூட்டை நன்றாக அலம்பி தோல் சீவிப் பொடியாக
நறுக்கி, திட்டமாக ஜலம் சேர்த்து வாணலியிலோ, கச்சாத பாத்திரத்திலோ
நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் ஜலத்தில் ஊற வைத்துக் கரைத்து வெந்த காயில்
சேர்க்கவும்.
உப்பு, வெல்லம், காரம் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
கடுகு, மிளகாய் ஒன்றுஎண்ணெயில் தாளிக்கவும்.குறுகி வரும்
போது இறக்கி ஏலக்காயோ, கரம் மஸாலாவோ சேர்க்கவும்.
திதிப்பு அதிகம் வேண்டுமானால் வெல்லம் அதிகரிக்கவும்.
ஜலம் ஜாஸ்தியாகிவிட்டால் துளி மாவு கரைத்து விடலாம்.
முந்திரி, திராக்ஷை சேர்த்தால் ருசி கூடும்.
கோவைக் காய்க் கறி
வேண்டியவைகள்
கோவைக்காய்—-கால்கிலோ
வெங்காயம்—2
ருசிக்கு உப்பு
எண்ணெய்—2 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி—கால் டீஸ்பூன
மிளகாய்ப் பொடி–அரை டீஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—ஒரு டீஸ்பூன்
செய்முறை—–காய்களை நன்றாக அலம்பிப் பொடிப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும் வெங்காயத்தையும் தனியாகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை—— காயுடன், உப்பு மஞ்சள்பொடி, 2 டீஸ்பூன் எண்ணெய்க்
கலந்து பிசறி மைக்ரோவேவ் பாத்திரத்தில் வைத்து ஐந்து ஐந்து
நிமிஷங்களாக மைக்ரோவேவில் வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும, கடுகு, பருப்பு
தாளித்து வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெந்த காயையும் சேர்த்துக் காரம் கலந்து நிதான தீயில்
சுருள வதக்கவும். மூடியால் மூடித் திறந்து கிளறிவிட்டு
நன்றாக வதக்கவும்.
நேராக வாணலியிலேயே வதக்குவதென்றால் நறுக்குமுன்னர்
காயை சுடு தண்ணீரில் போட்டெடுத்து வடிக்கட்டி நறுக்கவும்