Archive for மார்ச், 2012

நெல்லிக்காய்ப் பச்சடி

2011 வருஷ  சொல்லுகிறேன்  ரிவ்யூவில்  2011 வருஷத்திற்கு முன்பு

எழுதியவைகளை   எழுதும்படி   சொல்லியதாக ஞாபகம்.  இப்போது

செய்பவைகளை   அவ்வப்போது  போடுகிறேன்.

அந்தவகையில்   நெல்லிக்காய்ப் பச்சடி.

வேண்டியவைகள்.

நெல்லிக்காய்—2

பச்சைமிளகாய்—1

இஞ்சி—சிறிது

புளிப்பில்லாத தயிர்—ஒரு கப்பிற்கு அதிகம

தேங்காய்த் துருவல்—3டீஸ்பூன்

சீரகம்–கால்டீஸ்பூன்

தாளித்துக்கொட்ட—சிறிது எண்ணெயும் கடுகும்.

ருசிக்கு—உப்பு

செய்முறை–

நெல்லிக்காயை  கொட்டை நீக்கி வதக்கியோ,  வேகவைத்தோ அதனுடன்

மிளகாய், சீரகம், தேங்காய்,இஞ்சியைச் சேர்த்து  நன்றாக அறைத்து

உப்பு சேர்த்துத் தயிரில்   கலந்து  கடுகைத் தாளிக்கவும்.

கொத்தமல்லி, நறுக்கிய  தக்காளியால்   அலங்கரிக்கலாம்..

பச்சடி  தயார்.

காய்ந்த   நெல்லிக்காயானாலும்,  4, 5,  துண்டுகளை  ஊறவைத்து

அறைத்துக் கலக்கலாம்.

துவாதசி  சமையலின்  ஒரு முக்கிய  ஐட்டம் இது.

மற்றவைகளையும்   ஒவ்வொன்றாக  எழுதுகிறேன்.  வைட்டமின் ஸி நெல்லிக்காயில் அதிகம்.

நெல்லிக்காய்ப் பச்சடி

மார்ச் 30, 2012 at 9:08 முப 3 பின்னூட்டங்கள்

வேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.

புதியதான   வேர்க்கடலையைப்   ப்ரெஷ்ஷாக   பார்த்ததும்   கூட்டோடு

சேர்த்துப் பண்ணுவது   ஞாபகத்திற்கு வந்தது.  சாப்பிடறதோட எழுதறது

ஒரு வைடமின்  B12   எனக்கு. மார்க்கெட்டிலிருந்து   பீர்க்கங்காயும் நான்

தயார்  என்றது. ஸரி. கூட்டு மட்டும்   நான்  பண்றேன்.  பர்மிஷன்

வாங்கினேன்.

ஒரு  அரைகப்புக்கு மேலேயே   வேர்க்கடலையை  உறித்தேன்.

எங்கள் ஊர்பக்கம்  மல்லாக் கொட்டை  என்று சொல்லுவோம்.

மைசூர்லே  கள்லேகாய். நார்த்லே  இது  பதாம்.

வேர்க்கடலை என்ற  பெயர்  அதிகம்.காமன் இல்லையா?

வேண்டியவைகள்.

பீர்க்கங்காய்—-2  திட்டமான ஸைஸ்

தேங்காய்த்துருவல்—-2 டேபிள்ஸ்பூன்

மிளகு—1டீஸ்பூன்

சீரகம்—அரை டீஸ்பூன்

மிளகாய்—-4   காரத்திற்கு   தகுந்தாற்போல்

உளுத்தம் பருப்பு—-2 டீஸ்பூன்

அரிசி—1டீஸ்பூன்

உறித்த  பச்சை வேர்க்கடலை—அறைகப்பிற்கு மேல்

தாளித்துக்கொட்ட—-வேண்டிய அளவு எண்ணெய்

கடுகு,  உளுத்தம்பருப்பு,   பெறுங்காயம்  வகைக்கு  சிறிதளவு

இருக்கவே இருக்கு  கொத்தமல்லி  கறிவேப்பிலை.

பருப்பு–வெந்த   துவரம்பருப்போ,   அல்லது   பயத்தம்பருப்போ

4அல்லது  5 கரண்டிகள்.

ருசிக்கு—உப்பு

மஞ்சள் பொடி   சிறிது

செய்முறை.

பீர்க்கங்காயை   நன்றாக   அலம்பி   தோலைச் சீவி எடுக்கவும்.

தோலையும்   உபயோகப் படுத்தி  விடலாம். எதுக்குத் தெறியுமா?

அதையும் கூட ஒரு  துவையலாக   அறைக்கலாம்.

அதை  அடுத்துப் பார்ப்போம்.

காயை திட்டமான   துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளுவோம்.

மிளகாய்,  உ.பருப்பு,அரிசி,  மிளகை  துளி எண்ணெயில்  நன்றாக

வறுத்துக் கொள்வோம்.

தேங்காய் சேர்த்து   சீரகத்துடன்  வறுத்தவற்றை  மிக்ஸிலிட்டு

துளி ஜலம் சேர்த்து  அறைத்து வைத்துக் கொள்ளுவோம்.

வழக்கமான   பாத்திரம்  இருக்குமே, அதில்  சிறிது ஜலம்

வைத்து   நறுக்கிய காய்,வேர்க்கடலை,உப்பு, மஞ்சள்ப்பொடி

சேர்த்து   வேக வைப்போம் அதிக நேரமெடுக்காது.

காய்   வெந்ததும்,    அரைத்த  விழுதைக் கரைத்துக் கொட்டி

ஒரு கொதிவிட்டு  பருப்பையும்  சேர்த்துக்     கொதிக்கவைத்து

இறக்குவோம்.

அரிசி   சேர்ப்பது   நீர்க்கும்   காய்களை   ஓரளவு   சேர்ந்தாற்போல

இருப்பதற்குதான்.

இஷ்ட்டப் பட்டால்   துளி   நெய்யில்   கடுகு,  பெருங்காயத்தைத்

தாளித்துக் கொட்டினால்   கூட்டு ரெடி. எண்ணெயிலும்  தாளிக்கலாம்.

கொத்தமல்லி  கறிவேப்பிலை  சேர்க்கவும்.

இதற்கு   ஜோடியாக    புளி வைத்து அறைத்த  துவையலையும்

சொல்லி விடுகிறேன்.  கொஞ்சம்  பொறுமையாகப் பாருங்கள்.

துவையலுக்காக வேண்டியவை.

பெறிய சைஸ்  வெங்காயம்—1

இஞ்சி—1 அங்குல நீளம்

இஷ்டப்பட்டால்  4அல்லது5  பூண்டு இதழ்கள்

மிளகாய்—-3அல்லது 4 எதுவானாலும் ஸரி

வறுப்பதற்கு—எண்ணெய்

உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு,  பெருங்காயம்  துளி

புளி—ஒரு நெல்லிக்காயளவு

ருசிக்கு –உப்பு

கொத்தமல்லி,   கறிவேப்பிலை   எதுவானாலும் கூட

வைக்கலாம்.  கலர்  பச்சையாகவும்  வாஸனையாகவும் இருக்கும்.

செய்யலாமா?

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து  கடுகை வெடிக்கவிட்டு

மிளகாய் பருப்பை வறுத்துக்கொண்டு  நறுக்கிய  வெங்காயம், இஞ்சி

வதக்கிக்கொண்டு  நருக்கிய  பீர்க்கந் தோலையும் சேர்த்து  நன்றாக

வதக்கவும்

புளி,   உப்பு சேர்த்து   வதக்கியதைத்   துவையலாக மிக்ஸியில்

அறைத்தெடுக்கவும்.

பொறித்த  கூட்டும்,   புளிப்புத் துவையலும்  நல்ல காம்பினேஷன்.

கொஞ்சம்  அப்பளாத்தை சுட்டுவிட்டு   பருப்பு ஜலம்விட்ட நாட்டு

தக்காளி ரஸமும் வைத்துவிட்டால்  ஒரு ஸிம்பிளான  ருசியான

சமையல்தான்  பிடித்தவர்களுக்கு. யாருக்கு பிடிக்கும்  பார்க்கலாம்

பீர்க்கங்காய்

பச்சை வேர்க்கடலை

பீர்க்கங்காய் வேர்க்கடலை கூட்டு

துவையலுக்கான வதக்கல்

பச்சென்ற துவையல்

கூட்டும் துவையலும்

.

மார்ச் 24, 2012 at 3:54 பிப 9 பின்னூட்டங்கள்

முளைக்கீரை மசியல்.

இந்தக்கீரை  எல்லா வயதினரும்  சாப்பிடக்கூடிய  ஆரோக்கிய சத்து  மிகுந்த  ஒரு  நல்ல  கீரை. இதை

பருப்பு  சேர்த்தும்  சேர்க்காமலும் சமைக்கலாம்.

வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?

முளைக்கீரை—2கட்டு

அவசியமானால்  பூண்டு—4 இதழ்

மிளகு—அரை டீஸ்பூன்

சீரகம்–1 டீஸ்பூன்

மிளகாய்—1

துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன்.  ஊறவைக்கவும்.

தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்

உப்பு

தாளித்துக் கொட்ட—1ஸ்பூன்  நெய்

சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.

செய்முறை—–கீரையை நன்றாக  சுத்தம் செய்துப்

பொடியாகநறுக்கி தண்ணீரில்  2, 3,முறை  அலசித்

தண்ணீரைவடியவிடவும்.

துவரம்பருப்பை  முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்

தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து  மிக்ஸியில்

மசியஅரைத்துக் கொள்ளவும்.

நிதான தீயில் வடியவைத்த கீரையுடன்,  பூண்டைத் தட்டிப்

போட்டு கால்கப் ஜலத்துடன்  பாத்திரத்தில் சேர்த்து   வேக

வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால்  பச்சென்று

கீரை நிறம் மாறாமலிருக்கும்.

கீரை  வெந்ததும்    குழிக் கரண்டியாலோ,  மத்தாலோ

நன்றாக மசிக்கவும்.

அறைத்த கலவையுடன்  உப்பு சேர்த்து  கீரையில்க்

கொட்டிக் கலக்கி   பின்னும் இரண்டொரு கொதி விடவும்.

இறக்கி வைத்து   கடுகு,  உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்

முதலியவைகளை   நெய்யில்  தாளித்துக் கொட்டவும்.

துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில்  வேகவைத்த   பயத்தம்

பருப்போ  அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.

சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்

சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்

கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.

முளைக்கீரை மசியல்

முளைக் கீரைக் கட்டுகள்

மார்ச் 22, 2012 at 9:09 முப 20 பின்னூட்டங்கள்

சிறு கிழங்கு கிரேவியுடன்

நான்  கூட  இந்தக் கிழங்கை   அதிகம்   உபயோகப்படுத்தியது

இல்லை.இரண்டொருமுறை சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

எங்கள்   மருமகன்   கோயம்பேட்டிலிருந்து   வாங்கிக்கொண்டு

வந்ததுமல்லாமல்  ருசி  பிஸ்கெட் மாதிரி நன்றாக இருக்கும் என்று

கடைக்காரர்   சொன்னதாகவும் சொன்னார்.

ஸரி செய்து  பார்ப்போம்.  எங்கு  சாப்பிட்டோம் என்பதுஞாபகத்திற்கு

வந்தது.பாலக்காட்டு  தெறிந்தவர்களின்   வீட்டில்   சாப்பிட்டது

ஞாபகத்திற்கு  வந்தது.   உடனே   ஓரளவு    ருசியும்   இப்படிதான்

இருந்தது    என்ற   எண்ணமும்   ஏற்பட்டது.

என்னவோ   நான் செய்ததை  எழுதுகிறேன்.

வேண்டியவைகள்—-அரை கிலோ  சிறுகிழங்கு

தேங்காய்த் துறுவல்—அரைகப். சிறிது  குறைவானாலும் ஸரி.

பச்சை மிளகாய்—–3

சின்ன  வெங்காயம்–10, அல்லது  12

பெறிய  வெங்காயம்—1

சீரகம்—1 டீஸ்பூன்

எண்ணெய்—2, 3  டேபிள்ஸ்பூன்

தாளித்துக் கொட்ட—-கடுகு,  உளுத்தம் பருப்பு சிறிது

கறிவேப்பிலை—சிறிது.  மஞ்சள்ப் பொடி  சிறிது

செய்முறை

கிழங்கு   பார்ப்பதற்கு   ஒரே  மண்ணாக  இருக்கும் போல

இருக்கிறது.  வெளிநாட்டில்  எப்படி   கிடைக்குமோதெறியலே.

நிறையத் தண்ணீரில்  1 மணிநேரம்   ஊறவைத்தேன்.

பிறகு   பலமுறை   தண்ணீரில்  அலம்பி  அலம்பி மண்ணைப்

போக்கி   வடித்து    அதன்  மெல்லியதான  தோலைச் சீவி  எடுத்தேன்

.மெல்லிய  துண்டங்களாக  நறுக்கி  தண்ணீரில்  போட்டு வைத்தேன்

உறித்த சின்னபெறிய வெங்காயம்,  மிளகாய்,   சீரகம்,தேங்காய்

இவைகளை   மிக்ஸியில்    நன்றாக  அரைத்து வைத்தேன்.

பாத்திரத்தில்   தண்ணீரைக் கொதிக்க வைத்து   கிழங்குத்

துண்டுகளை  நன்றாக   வேக வைத்து  வடிக்கட்டினேன்.

வாணலியில்எண்ணெயில்   கடுகு  உ. பருப்பைத் தாளித்துக்கொட்டி

கிழங்கை   வதக்கி    உப்பு   சேர்த்து   அரைத்த விழுதைச் சற்று

ஜலம்  சேர்த்துக் கலக்கி   அதனுடன் சேர்த்தேன்.கொதித்ததும்

இறக்கி    கறிவேப்பிலை சேர்த்து     ருசி பார்க்கக்  கொடுத்தேன்.

ரொம்ப   நன்னாயிருக்கு   என்ற  கமென்ட்தான்  வந்தது.

தேங்காயெண்ணை சேர்த்தால்   அவியல் ருசியும் எட்டிப் பார்க்கும்.

அறைத்த விழுதைக்  கெட்டியாகச்    சேர்த்துப்  பிரட்டினால்  கறி

வகையாகும்.

இஞ்சி,  பூண்டு,  வெங்காயம்,மஸாலா சேர்த்தும்  பண்ணலாம்.

நிறைய  ஐடியாக்கள் எனக்கும்,   எல்லோருக்கும் தோன்றும்.

முதல்தரம்  பண்ணியதால்  ப்ரமாதமாக  பீடிகை  கொடுத்து

விட்டேன்.

அதுதான்   உண்மையும்  கூட.   எனக்கும்  ரொம்ப  பிடித்திருந்தது.

கிழங்கு  ருசியாக  இருக்கிறது.

இதை கூர்க்கன் கிழங்கு என்றும்  சொல்வார்கள்

இரண்டாவது படம்  கிரேவியுடன்   சிறுகிழங்கு.

காரம் வேண்டுமானால்  மிளகாய்  அதிகம்  சேர்க்கவும்.

மார்ச் 17, 2012 at 12:21 பிப 7 பின்னூட்டங்கள்

காரடை. உப்பு

பச்சரிசி–1கப்

தேங்காய்த் துருவல்—அரைகப்

பச்சைமிளகாய்—2

இஞ்சி—சிறியதாக  நறுக்கியது—2டீஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு

ஊறிய   காராமணி—-2டேபிள்ஸ்பூன்

பெருங்காயம்—வாஸனைக்கு

கறிவேப்பிலை,  கொத்தமல்லி   சிறிதளவு.

தாளித்துக் கொட்ட—எண்ணெய்  சிறிதளவு

செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்

ஊறவைத்து  வடிக்கட்டி நிழல்  உலர்த்தலாக ஒரு  துணியின் மீது

உலர்த்தவும்.

கலகலஎன்று  உலர்ந்த  அரிசியை  நிதானதீயில்   வாணலியை

வைத்து சற்று  சிவக்கும் வரை  வறுத்தெடுக்கவும்.

ஆறியபின்   வறுத்த       அரிசியை   ரவையாக    மிக்ஸியில்

பொடிக்கவும்.

காராமணியை   வெறும்  வாணலியில்  சற்று   முன்னதாகவே

வறுத்து  ஹாட்கேஸில்  வென்னீர்  விட்டு   ஊறவைக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக்  காயவைத்து  கடுகு,உ.பருப்பு

தாளித்து   இஞ்சி, பச்சைமிளகாயை  வதக்கி  ரவையின்  அளவைப்

போல   இரண்டு பங்கு   தண்ணீரைச்  சேர்க்கவும்.

வேண்டிய உப்பு,   தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை  சேர்த்து

தண்ணீரைக் கொதிக்க   விடவும்.

ஊறின  காராமணி,  பெருங்காயத்தையும் சேர்க்கவும்.

கொதிக்கும்  நீரில்  ரவையச் சேர்த்துக்  கிளறவும்.

தீயை மட்டுப் படுத்தவும்.

பந்துபோல   வெந்து   சேர்ந்து வரும்போது  கிளறி   மூடி  இறக்கி

வைக்கவும்.

சற்று  நன்றாக  ஆறியபின்   மாவைப் பிறித்து  ஸமமாக உருட்டி

கனமான  வடைகளின்   உருவத்தில்  ,  ஒரு  பாலிதீன்  கவர்  மீது

எண்ணெயோ    ஜலமோ  தொட்டுத் தடவி

தட்டி எடுத்து,   நீராவியில்   15  நிமிஷங்கள்  வேகவைத்து

எடுக்கவும்.

இட்லி  ஸ்டீம்  செய்வது  போலவேதான்.

உப்பு  அடை தயார்.  தேங்காய் மணத்துடன்  உப்பு காரத்துடன்

கூடிய  மெத்தென்ற   காரடை தயார்.

எது இஷ்டமோ  அதை  கூடச்  சாப்பிடலாம்.

2010    மார்ச்  11    காரடை   இனிப்பு  எழுதினேன்.   இன்று

2012  மார்ச் 14  சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.

பெண்  செய்தாள்.   இன்று  காரடையான்  நோன்பு.  இதை

எப்பொழுது வேண்டுமானாலும்   செய்யலாம். அடையைச்

சொல்கிறேன்.  அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்

அடை   மிருதுவாக   மெத்தென்று  வருகிறது.  உடன் வெண்ணெய்,

வேறு   இன்று  சாப்பிடுவதால்  எல்லாமே ஸாஃப்ட்தான்.திருத்தவும்

மாவு கிளற முன்மாதிரி ஸேம்பிள்.கொதிக்கும் கலவை

மாதிரி. கிளறிய அரிசி ரவைக் கலவை

நீராவியில் வேகத் தயார் நிலையில்

சாப்பிடத் தயார் நிலையில் உப்பு ருசிக் காரடைகள்.

மார்ச் 14, 2012 at 10:56 முப 6 பின்னூட்டங்கள்

பலாக்காய் பொடித்தூவல்

பிஞ்சு  பலாக்காய்—1  அரைக்கிலோஎடை

.பச்சைமிளகாய்—3

இஞ்சி—1சிறியதுண்டு

தேங்காய்த் துருவல்—அரைகப்.

கடுகு—அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்

எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

துளி  மஞ்சள்  பொடி

கொத்தமல்லி,  கறிவேப்பிலை—சிறிது

செய்முறை.

காயை 2 துண்டங்களாக  வெட்டவும்.

பால்போல   பிசின்  வெளிப்படும்.  நிறைய  தண்ணீர்விட்டு

காயை அலம்பவும்.

கடைகளிலேயே   காயை  ஒழுங்காக  தோல் நீக்கி துண்டங்களாக

வெட்டியும்   கொடுக்கிறார்கள்.

சின்ன  காயானால்  நாமே   பட்டை பட்டையாக   தோலைச்

சீவிக் கொட்டிவிட்டு   உள் பாகத்தை  சற்று பெறியதுண்டுகளாக

நறுக்கி   தண்ணீரில் போட்டு  அலம்பிக் கொள்ளவும்.

வாணலியில்  துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி

சேர்த்து   திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.

காய்  முக்கால்பதம்  வெந்ததும்    இறக்கி  வடிக்கட்டவும்.

காய் ஆறியவுடன்   மிக்ஸியிலிட்டு  வைப்பரில் 2 ,3 முறை

சுற்றி   எடுக்கவும்.

இப்பொழுது   உதிர் உதிராக  காய்  பக்குவமாக இருக்கும்.

திரும்பவும்   வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து

கடுகை வெடிக்கவிட்டு  பருப்பை சிவக்க வறுத்து  நறுக்கிய

இஞ்சி,  பச்சை மிளகாயைப் போட்டு   வதக்கவும்.

உதிர்த்த  காயைக் கொட்டி உப்பு  சேர்த்து வதக்கவும்.

தேங்காயைச் சேர்த்து  வதக்கி இறக்கவும்.

கொத்தமல்லி,  கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

பொடித்தூவல் தயார்.  தினப்படி  சாப்பாட்டில் இதுவும்

ஒரு   கறிதான்.எலுமிச்சை  சாறு  துளி   சேர்க்கலாம்

இது சிரார்த    காலங்களில்  விசேஷமான  ஒருகறிகாயாக

தேடி வாங்கப்படும்.1008   கறிகளுக்கு சமானமான  காயிது.

கேரளாவில்   இது  பரவலாக எல்லோராலும்   சமைக்கப்படும்

காய்.

பலா முசு  என்று  சிறிய  வகைக் காய்கள்  சமைப்பதற்கு

மிகவும் ஏற்றது.

வட இந்தியாவிலும்   மிகவும்  விரும்பப்  படுகிறது.

மாதிரிக்கு    இங்கு  செய்த  பொடித்தூவலும்  சின்ன காயும்.

காய்  ஒன்றோடொன்று  உராய்ந்து  சற்று  கருப்பாக காட்சி

தருகிறது.  அவ்வளவுதான்.

பலாக்காய்ப் பொடித்தூவலும்,பலாப்பிஞ்சும்.

மார்ச் 10, 2012 at 7:16 முப 10 பின்னூட்டங்கள்

ஃப்ரைட்ரைஸ்

இதுவும்  ஒரு  சுலபமான விதம்தான்.  ஃப்ரைட் ரைஸ் இருப்பதை

வைத்து பலவிதங்களில்  ஒப்பேற்றலாம்.ஆனால் நான் மும்பையில் என்

பேத்திகளுக்காக லஞ்ச் பாக்ஸில் சொடுத்தனுப்ப புதியதாக காலையில்

7மணிக்குள் தயாரித்து அனுப்பியதிது. நீங்களும் தான் படித்துச் சுவையுங்கள்.

வேண்டியவைகள்—- ஒரு  கப் அரிசியிலோ முக்கால் கப்  அரிசியிலோ

உதிராக வடித்த  சாதம்..

தண்ணீர்  சற்றுக்  குறைவாக  வைத்து  சாதம் தயாரானவுடன்  தட்டில்

கொட்டி  பரப்பலாக வைத்தால் சாதம் உதிர்  உதிராக  வரும்.

வெங்காயத் தாள்—அரைகப்பிற்கு மேலாகவே.   துண்டுகளாக  நறுக்கியது.

காரட்—-1

மஷ்ரூம்—5,  6

காப்ஸிகம்—1

ருசிக்கு—-உப்பு

மஞ்சள்ப்பொடி—மிகவும்  துளி

எண்ணெய்—-5அல்லது 6 டீஸ்பூன்

மேகி  மஸாலா  க்யூப்   பாதி  பொடியாகச்  செய்தது

அல்லது  ஏதாவது   மஸாலாவுடன்  காரம் சிறிது.

செய்முறை

வெங்காயத் தாளைத் தனியாக  நறுக்கவும்.

மீதி காய்களை  நன்றாக அலம்பிப்   பொடியாக   நறுக்கி    வடியவிட்டு

ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டுக்  கலந்து    மைக்ரோவேவில்   ஹைபவரில்

வேகவைத்து   எடுக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து  வெங்காயத் தாளை  நன்றாக

வதக்கவும்.

மைக்ரோவேவ் செய்த காய்களையும்   உப்பு சேர்த்து வதக்கி  வேண்டிய

மஸாலா,  மஞ்சள்  சேர்த்து   தயாராகவுள்ள   சாதத்தைச் சேர்த்துச்

சிறிது வதக்கிக்     கீழே   இறக்கி    உபயோகிக்கவும்..

மஷ்ரூமையும்    காய்கள்  லிஸ்டிலேயே  சேர்த்துவிட்டேன் போலுள்ளது.

சேர்ப்பது  அவரவர்கள்  சாய்ஸ்.

ஃப்ரைட் ரைஸ் ரெடி.

இக்காலப்  பசங்களின்   சாய்ஸ்   மஷ்ரூமாக   இருக்கிறது.

ஸிம்பிளான   ரைஸ்  இது.  எது பிடிக்குமோ அதை  உடன்

சேர்த்துச் சாப்பிடவும்.

ப்ளஸ்   காரம்.  அவ்வளவுதான்.

_ஃப்ரைட் ரைஸ்

மார்ச் 5, 2012 at 6:36 முப 8 பின்னூட்டங்கள்


மார்ச் 2012
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,015 hits

காப்பகம்

பிரிவுகள்

  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.