Archive for மார்ச் 10, 2012
பலாக்காய் பொடித்தூவல்
பிஞ்சு பலாக்காய்—1 அரைக்கிலோஎடை
.பச்சைமிளகாய்—3
இஞ்சி—1சிறியதுண்டு
தேங்காய்த் துருவல்—அரைகப்.
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்
எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை—சிறிது
செய்முறை.
காயை 2 துண்டங்களாக வெட்டவும்.
பால்போல பிசின் வெளிப்படும். நிறைய தண்ணீர்விட்டு
காயை அலம்பவும்.
கடைகளிலேயே காயை ஒழுங்காக தோல் நீக்கி துண்டங்களாக
வெட்டியும் கொடுக்கிறார்கள்.
சின்ன காயானால் நாமே பட்டை பட்டையாக தோலைச்
சீவிக் கொட்டிவிட்டு உள் பாகத்தை சற்று பெறியதுண்டுகளாக
நறுக்கி தண்ணீரில் போட்டு அலம்பிக் கொள்ளவும்.
வாணலியில் துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி
சேர்த்து திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
காய் முக்கால்பதம் வெந்ததும் இறக்கி வடிக்கட்டவும்.
காய் ஆறியவுடன் மிக்ஸியிலிட்டு வைப்பரில் 2 ,3 முறை
சுற்றி எடுக்கவும்.
இப்பொழுது உதிர் உதிராக காய் பக்குவமாக இருக்கும்.
திரும்பவும் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு பருப்பை சிவக்க வறுத்து நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
உதிர்த்த காயைக் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.
தேங்காயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பொடித்தூவல் தயார். தினப்படி சாப்பாட்டில் இதுவும்
ஒரு கறிதான்.எலுமிச்சை சாறு துளி சேர்க்கலாம்
இது சிரார்த காலங்களில் விசேஷமான ஒருகறிகாயாக
தேடி வாங்கப்படும்.1008 கறிகளுக்கு சமானமான காயிது.
கேரளாவில் இது பரவலாக எல்லோராலும் சமைக்கப்படும்
காய்.
பலா முசு என்று சிறிய வகைக் காய்கள் சமைப்பதற்கு
மிகவும் ஏற்றது.
வட இந்தியாவிலும் மிகவும் விரும்பப் படுகிறது.
மாதிரிக்கு இங்கு செய்த பொடித்தூவலும் சின்ன காயும்.
காய் ஒன்றோடொன்று உராய்ந்து சற்று கருப்பாக காட்சி
தருகிறது. அவ்வளவுதான்.