Archive for மார்ச் 5, 2012
ஃப்ரைட்ரைஸ்
இதுவும் ஒரு சுலபமான விதம்தான். ஃப்ரைட் ரைஸ் இருப்பதை
வைத்து பலவிதங்களில் ஒப்பேற்றலாம்.ஆனால் நான் மும்பையில் என்
பேத்திகளுக்காக லஞ்ச் பாக்ஸில் சொடுத்தனுப்ப புதியதாக காலையில்
7மணிக்குள் தயாரித்து அனுப்பியதிது. நீங்களும் தான் படித்துச் சுவையுங்கள்.
வேண்டியவைகள்—- ஒரு கப் அரிசியிலோ முக்கால் கப் அரிசியிலோ
உதிராக வடித்த சாதம்..
தண்ணீர் சற்றுக் குறைவாக வைத்து சாதம் தயாரானவுடன் தட்டில்
கொட்டி பரப்பலாக வைத்தால் சாதம் உதிர் உதிராக வரும்.
வெங்காயத் தாள்—அரைகப்பிற்கு மேலாகவே. துண்டுகளாக நறுக்கியது.
காரட்—-1
மஷ்ரூம்—5, 6
காப்ஸிகம்—1
ருசிக்கு—-உப்பு
மஞ்சள்ப்பொடி—மிகவும் துளி
எண்ணெய்—-5அல்லது 6 டீஸ்பூன்
மேகி மஸாலா க்யூப் பாதி பொடியாகச் செய்தது
அல்லது ஏதாவது மஸாலாவுடன் காரம் சிறிது.
செய்முறை
வெங்காயத் தாளைத் தனியாக நறுக்கவும்.
மீதி காய்களை நன்றாக அலம்பிப் பொடியாக நறுக்கி வடியவிட்டு
ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டுக் கலந்து மைக்ரோவேவில் ஹைபவரில்
வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத் தாளை நன்றாக
வதக்கவும்.
மைக்ரோவேவ் செய்த காய்களையும் உப்பு சேர்த்து வதக்கி வேண்டிய
மஸாலா, மஞ்சள் சேர்த்து தயாராகவுள்ள சாதத்தைச் சேர்த்துச்
சிறிது வதக்கிக் கீழே இறக்கி உபயோகிக்கவும்..
மஷ்ரூமையும் காய்கள் லிஸ்டிலேயே சேர்த்துவிட்டேன் போலுள்ளது.
சேர்ப்பது அவரவர்கள் சாய்ஸ்.
ஃப்ரைட் ரைஸ் ரெடி.
இக்காலப் பசங்களின் சாய்ஸ் மஷ்ரூமாக இருக்கிறது.
ஸிம்பிளான ரைஸ் இது. எது பிடிக்குமோ அதை உடன்
சேர்த்துச் சாப்பிடவும்.
ப்ளஸ் காரம். அவ்வளவுதான்.