தொட்டில்—8
நவம்பர் 10, 2020 at 3:36 முப 8 பின்னூட்டங்கள்
ஸ்வீகார விஷயத்திற்காக எந்தெந்த குடும்பங்களில் விஷயங்கள் எவ்வெப்படி பயணிக்கிறது பாருங்கள். தொட்டில்கள் ஆடுகிறது. ஆனால் எதிர்பாராத விதத்தில்.
மும்முனைத் தொட்டிலாக ஆட ஒன்று வருகிறது. பாருங்கள்.
இவ்வளவு நாழி ஆயிற்று இன்னும் தியாகுவைக் காணோமே! என்ன பையன் இவன். வாசல்லேயும் கரிகாக் காரியைக் காணோம்.
வருவான் வருவான். எங்கு ஓடிப்போய் விடுகிறான் ? உங்களுக்கு விசாரமில்லே. கம்பத்து வீட்டிலிருந்து வயணமா சாப்பாடு வந்து விடுகிறது. எனக்கு சமைத்தால்தானே உண்டு. கோவில் கெணத்துக்குப் போய் ஜலம் கொண்டு வரணும். கணவன் மனைவி வாக்குவாதம்.
தோட்டத்து கிணத்து ஜலம் கொண்டு ரொப்பியாகி விட்டது. ஒரு குடம் தானே நல்ல ஜலம். அதையும் நானே கொண்டு கொடுத்து விட்டுப் போகட்டுமா?
சோம்பேறி மனைவியின் மீது கரிசனம். என்ன செய்றது. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர் நிலச்சுவான்தார் நிலங்களை மேற்பார்வை செய்பவர்.கம்பத்தத்திலிருந்து நேராக சாப்பாடு வயல்வெளி பம்ப் கொட்டாய்க்கேவந்து விடும்.
வேண்டாம்,வேண்டாம் இதுவும் புருஷன்தான் செய்யறான் என்று மத்தவா வம்பளக்கவா, அவனே வந்து விட்டான்.
தியாகு யார் ராஜியுடைய தங்கை பையன். பதினைந்து வயதாவது இருக்கலாம். ஊரில் எட்டு வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதுவும் கட்டணமில்லாத பள்ளி. அப்பா ஏதோ கடையில் கணக்கு வழக்கு எழுதுவார். எட்டோ,பத்தோ ரூபாய் சம்பளம். மலிந்தகாலத்தில் கஷ்ட ஜீவனம் செய்ய போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு என்றதெல்லாம் யாருக்குமே தெரியாத வார்த்தைகள். மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான். இந்த வார்த்தைகள்தான் பிராபல்யம்.
ஆனால் தியாகுவோடு ஐந்து,ஆறுபேர்கள் அப்பா,அம்மா என்ற எட்டுபேர் கொண்ட குடும்பத்தில் எட்டும்,பத்தும் எந்த மூலை. வரட்டு கவுரவம். பெண்டாட்டி வெளியில்…
View original post 440 more words
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
நெல்லைத்தமிழன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 6:07 முப இல் நவம்பர் 10, 2020
புதுக்கதை போல இருக்கே. சுவாரசியமாகச் செல்கிறது, தொடரக் காத்திருக்கேன்.
2.
chollukireen | 11:53 முப இல் நவம்பர் 10, 2020
முன்பு படித்தது உங்களுக்கு ஞாபகமிருக்காது. தொட்டில் என்ற தலைப்பில் பல குடும்பங்களின் நிகழ்வுச் சம்பவஙகள் சங்கமம்தானே இது. நன்றி உங்களின் மறுமொழிக்கு. அன்புடன்.உங்களினவலைப்பூ்களுக்கு த் தொடர்பு கொடுக்கப் போனால் வேறு ஏதோ பட்டியலைக் காட்டுகிறது. எங்கள் பிளாக் மூலம் முயற்சித்தேன். சிலஸமயம் குழப்பம்தான் மிஞ்சுகிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆசிகள் அன்புடன்
3.
thulasithillaiakathu | 9:41 முப இல் நவம்பர் 10, 2020
இது கதையா காமாட்சிம்மா? தொடங்கியிருக்கிறதோ…நன்றாக இருக்கிறது.தொடர்கிறேன்
கீதா
4.
chollukireen | 12:00 பிப இல் நவம்பர் 10, 2020
கீதா இது வெவ்வேறு நிகழ்வுகளின் தொட்டில் ஆடிய பட்டியல் ஸம்பவங்களுடன். 16 பதிவுகள் எழுதிஇருக்கிறேன். இன்னும் கூட இரண்டொன்று எழுதலாம். தொடர்வதற்கு மிகவும் ஸந்தோஷம். நான்கு வரி எழுதவாவது முடிகிறதே என்று அல்ப ஸந்தோஷம். நன்றி அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 4:22 முப இல் நவம்பர் 11, 2020
புதுக் கதை சுவாரசியமாகச் செல்கிறது. என்னுடைய இளமைக்காலத்தை நினைவுபடுத்துகிறது.
நான் 4வது படிக்கும்போது சற்றுத் தள்ளி இருந்த கிணற்றிலிருந்து நீர் கொண்டுவந்து வீட்டில் வைத்துக்கொள்வோம் (பொதுக்கிணறு). நல்ல ஜலத்துக்கு ஒரு மாமிக்கு பணம் கொடுத்து, அவர் தினமும் ஒரு குடம் ஜலம் கொண்டுவந்து தருவார்.
இந்த ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. குழாயைத் திறந்தால் தண்ணீர், வாட்டர் பியூரிஃபையர் வைத்தால் நல்ல ஜலம் என்றே அவங்களுக்குத் தெரியும்.
பஹ்ரைன்ல இருக்கும்போது, நாங்க கேனை வெளியில் வைத்துவிட்டால் ஒரு கேனுக்கு 25 ரூபாய்க்கு நல்ல ஜலம் (10-15 லிட்டர் கேன்).
6.
chollukireen | 11:03 முப இல் நவம்பர் 11, 2020
எங்கள் ஊரில் வீட்டுக் கிணற்றில் வரும் தண்ணீர், உப்பு கரிக்கும். கோவில் கிணற்று ஜலம் குடிக்க,சமைக்க என்று எடுத்து வருவோம். இடுப்பில்குடம், கையில் தோண்டி, உடன் ஜலமெடுக்க தாம்பக்கயிறு யாவும் லாவகமாகச் சுமந்து வருவோம். அதுவும் மடியாக. இப்போது தெருக்குழாய் வந்துள்ளது. கிணற்றைதூர்த்து விட்டு போர்போட்டு இருக்கிறார்கள். உங்கள் அனுபவமும் படிக்கக் கிடைத்தது ஸந்தோஷம்.நன்றி அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 4:23 முப இல் நவம்பர் 11, 2020
தொடர்ந்து எழுதுங்கள். என் மெயிலுக்கு புது இடுகை வந்துவிட்டது என்று தெரிந்தபிறகு இங்கு வந்து படிக்கிறேன். முன்பு எங்கள் பிளாக் வழியாக எளிதாக வந்துகொண்டிருந்தேன்.
8.
chollukireen | 11:09 முப இல் நவம்பர் 11, 2020
ஒன்றுமே எழுதாத காலத்தில் சொல்லுகிறேன் அதில் வருவதில்லை. இப்பொழுது மட்டும் என்ன? அதேதான்.எப்போது வந்தாலும் ஸரி. இதில் பின்னூட்டத்தைப் பாரத்தால் மனது எங்கோ ஸஞ்சாரம் செய்கிறதுதான் விசேஷம்.நன்றி. அன்புடன்