Archive for ஜூன் 2, 2021
குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
மீள் பதிவு செய்வதிலும் இப்படி ஒரு மாறுதலான விஷயமாக இருக்கட்டும் என்று தோன்றியது. 5,6 வருஷங்களுக்கு முந்தைய ஸமாசாரமானாலும் இதுவும் படிக்க நன்றாக இருக்கும் என்று மனதில் பட்டது.பாருங்கள் அன்புடன்
கோதாவரி நதியின் உற்பத்தி எனப்படும் இந்த குஷவ்ரத் ஸரோவர் மிகவும் பிரஸித்தமானது. தலைக்காவிரி நதியின் உற்பத்திஸ்தானம் போல் இதுவும் ஒரு குண்டமே. கும்ப மேளா ஸமயம் இந்த இடத்தில் ஸாது ஸன்னியாசிகள் விசேஷமாக நீராடும் புண்ணியம் பொருந்திய புராதனமான நீர்நிலை இது.
இதுவே கோதாவரி நதியின் உற்பத்திஸ்தானமும். தெய்வீகச் சக்தி வாய்ந்த நீர் நிலைகளுக்கு அமானுஷ்ய சக்தி உண்டு. இப்படிப்பட்ட நீர் நிலைகளில் நீராடுவதென்பது ஹிந்துக்களின் ஒரு புராதனப்பழக்கம். நீராடுவதோடில்லாமல், தங்களின் காலஞ்சென்ற மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் தொன்று தொட்டு அனுஸரிக்கும் ஒரு நல்ல பழக்கமாகவே இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் நாஸிக் என்ற திரயம்பகேசுவரர் கோயில் கொண்டுள்ள நகரின்எண்ணூரு மீட்டர் தொலைவிலேயே இந்த ஸரோவர் அமைந்துள்ளது. குஷவ்ருத் என்று அழைக்கப்படும் இந்த ஸரோவர் ஸம்பந்தமாக கௌதம ரிஷியின் கதை கூறப்படுகிறது. ஒரே இடத்தைப்பற்றிய பலவித கதைகளிருக்கலாம். கௌதமருக்கு சிவபெருமான் கொடுத்த வரத்தின் காரணமாய் இந்த நதி உண்டானது.
இங்கு நடந்த ஷாஹிஸ்னான் அன்று ஏராளமான ஸாதுக்கள் நீராடிய பின்பு, தீர்த்த யாத்திரை செய்யும் பக்தர்களுக்கும் ஸ்னானம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.கோதாவரி தீரத்தில் எவ்வளவோ ஸ்னான கட்டங்கள் இருந்தாலும், உற்பத்திஸ்தானமாகிய இவ்விடம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. கௌதம ரிஷிக்கு விபத்தின் காரணமாய் எதிர்பாராத வகையில் ஒரு பசுவைக் கொன்ற பாவம் வந்து சேர்ந்து விட்டது. அ ந்த பாவத்தைப் போக்கக் கோதாவரியில் நீராடினால் பாவம் தீருமென்றபோது கோதாவரியில்நீராடமுடியாமற்போய்விட்டது…
View original post 233 more words