Archive for ஜூன் 14, 2021
அன்னையர் தினப்பதிவு. 22.
பதிவு 22 ம் அம்மாவைப் பற்றிய கதை தொடருகிறது. எனக்குச் சென்ற பதிவிற்கு பதிலெழுதக் கூட முடியவில்லை.வயதானவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் தொடர்கதைதான். படியுங்கள். தொடருங்கள். அன்புடன்
இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம்
செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்கு வரவில்லை.
அவளுடைய இரண்டு பிள்ளைகள் சற்று வயதிற்கு வந்தவர்கள்
மாத்திரம் பிடிவாதம் பிடித்தோ என்னவோ வந்து விட்டனர்.
அம்மாவிற்கு உடல் நலம் ஸரியில்லை என்று சொன்னார்கள்.
கலியாணம் கழித்து இரண்டு நாட்களாகின்றது.
பெண்ணும் ,மாப்பிள்ளையும், நாளை,மறுநாள் வருவார்கள்.
தம்பதிகளாகப் பிறந்த வீடு வரும் பழக்கம் இருக்கிறதல்லவா?
எஙகள் ஊரில் காலை நேர வேலை பால் வாங்குவதுதான்.
விடியற்காலை. அவரவர்கள் ஸ்டோருக்குப் போய் பால் வாங்கி
வருவார்கள்.அப்படி
கதவைத் திறந்ததும் அம்மா பெயர் சொல்லி தந்திச் சேவகர் வந்து
நீங்கள்தானே அம்மா என்று கேட்கிறார்.
என்னவோ தந்தியாம் நீ வந்து பாரு. அம்மா பதைபதைக்கிராள்.
கையெழுத்துப் போட்டு வாங்கினாலும், யாருக்கு என்னவோ என்ற
பதைபதைப்பைத் , தந்தி எல்லோருக்கும் கொடுக்கும்தானே?
அம்மாவுடைய சென்னை மாப்பிள்ளையின் தந்தி.
உடனே புறப்படவும். ஆபத்து.
ஸரி அக்காவிற்குதான் ஏதோ,என்னவோ என்று தீர்மானித்து அடுத்த
இரண்டு மணி நேரத்தில் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து
அவ்விடமிருந்து சென்னை பஸ் பிடிக்க வேண்’டும்.
எல்லோரும் நல்லபடி இருக்கணும்,ஸாமி,பகவானே அம்மாவின்
புலம்பலும்,வேண்டுதல்களும்.
நீங்களெல்லாம் வேண்டாம். நான் போகிறேன். பஸ் ஏத்திட்டா போரும்.
எனக்கு வழியெல்லாம் நன்னா தெரியும். அம்மா.
இல்லை நாங்களும் வரோம். ஆச்சு விழுப்புரம் வந்து பஸ்ஸும்
பிடிச்சாச்சு.
அவளுக்குதான் உடம்பு ஸரியில்லையென்று பேரன் சொன்னான்.
பகவான் என்ன…
View original post 337 more words