Archive for ஜனவரி 9, 2010
ஜீராமிளகு ரஸம்.
வேண்டியவைகள்
தனியா——இரண்டு டீஸ்பூன்
மிளகு—–ஒரு டீஸ்பூன்
சீரகம்——ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்
பெரிய தக்காளிப் பழம்—–ஒன்று
புளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவு
பூண்டு——7 அல்லது 8 இதழ்கள்
நெய்—-2 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
தாளிக்க—சிறிது கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை
ஒரு துளி மஞ்சட் பொடி
மிளகாய்——சிறியதாக ஒன்று
செய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்து
இரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.
சிறிது நெய்யில் பருப்பு, மிளகு, மிளகாய், தனியாவை
சிவக்க வறுத்துக் கொண்டு பூண்டையும் சேர்த்து
கறுகாமல் வதக்கி, நறுக்கிய தக்காளியையும்,
சேர்த்து லேசாக வதக்கவும்.
ஆறியவுடன் சீரகம் சேர்த்து மிக்ஸியிலிட்டு
சிறிது ஜலம் தெளித்து விழுதாக அரைக்கவும்.
உப்பு சேர்த்த புளிக்கரைசலை பாத்திரத்திலிட்டு
நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
புளி வாஸனை போகக் கொதித்தவுடன், அரைத்த
விழுதை இரண்டரை கப் நீரில் கரைத்து சேர்க்கவும்.
நுறைத்துப் பொங்கும் அளவு கொதிக்கவிட்டு
இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து
கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
சுலபமாகச் செய்யக்கூடிய மருத்துவ குணமுள்ள
ரஸமிது. ஜலதோஷம். ஜுரம் போன்றவைகளின் போது
இம்மாதிரி ரஸம் மிகவும் நல்லது. துணைக்கு
பருப்புத் துவையல். சுட்ட அப்பளாம்.
தக்காளி ரஸம்.
வேண்டிய சாமான்கள்.
கால்கப்–துவரம் பருப்பு
ரஸப்பொடி——ஒன்றறை டீஸ்பூன்
நெய்—-ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்—சிறு துண்டு
உறித்த பூண்டு இதழ்கள்-5 அல்லது 6
திட்டமான அளவுள்ள பழு்த்த தக்காளிப் பழம —4
சிறிய நெல்லிக்காயளவு—புளி
பச்சைக் கொததமல்லி, கறிவேப்பிலை—வாஸனைக்கு
தாளிக்க–அரை டீஸ்பூன் –கடுகு
ருசிக்கு உப்பு
செய்முறை———–தக்காளியைச் சிறு துண்டங்களாக
நறுக்கி இரண்டு ஸ்பூன் ஜலம் சேர்த்து பாத்திரத்திலிட்டு
5 நிமிஷங்கள் வேக வைத்து இறக்கவும்.
புளியையும் சேர்த்து ஊறவைத்து சிறிது,சிறிதாக 2கப்
தண்ணீரை விட்டுக் கறைத்து சாறை எடுத்துக்
கொண்டு சக்கையை நீக்கி விடவும்.
சற்று வாய்க் குறுகலான பாத்திரத்தில் நிதானமான
தீயில் , ரஸப்பொடி, உப்பு , பெருங்காயம், கரைத்த
சாறு இவைகளைக் கலந்து கொதிக்க விடவும்.
முன்னதாகவே துவரம் பருப்பை ப்ரஷர் குக்கரில்
பூண்டு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வாஸனை பிடிக்காதவர்கள் பூண்டை நீக்கவும்.
கொதிக்கும் ரஸம் அரை பாகமாகச் சுண்டியதும்
வெந்த பருப்பை 3கப் தண்ணீர் விட்டுக் கரைத்து
சேர்த்துப் பொங்க விடவும். ஒருமுறை நுறைத்துப்
பொங்கியதும் கீழிறக்கி நெய்யில் கடுகை தாளித்து
கொத்தமல்லி கரிவேப்பிலை சேர்க்கவும். ரஸக்கலவை
கொதிக்கும் போது அடிக்கடி கிளறிவிட்டு அடி பிடிக்காமல்
பார்த்துக் கொள்ளவும்.
உப்பு,காரம் அவரவர்கள் இஷ்டத்திற்கு கூட்டிக்
குரைப்பது பருப்பு நீர் விடுவதில் அட்ஜஸ்ட்
செய்யலாம்.