Archive for ஜனவரி 26, 2010
மைசூர் ரஸம்.
வேண்டியவை.—–துவரம்பருப்பு அரைகப்
புளி—-ஒரு எலுமிச்சம் பழ அளவு
தக்காளிப்பழம் –பழுத்ததாக மூன்று
வறுக்க சாமான்கள்—–தனியா–மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகு——ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் —–மூன்று
கடலைப் பருப்பு—–இரண்டு டீஸ்பூன்
சீரகம்——-இரண்டு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—இரண்டு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு
நெய் இரண்டு ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, பெருங்காயம்
வாஸனைக்கு——-கொத்தமல்லி, கறிவேப்பிலை
செய்முறை——பருப்பைக் களைந்து துளி மஞ்சள்ப் பொடி ,
தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சற்று வேகவைத்து ஊறவைத்த புளியுடன் 3கப்
தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சாறெடுக்கவும்.
தேங்காய்த் துறுவலைத் தனியாக துளி நெய்யில் வறுக்கவும்.
தனியா மிளகு பருப்பு மிளகாயையும் சிறிது நெய்யில்
சிவக்க வறுத்துக் கொண்டு, தேங்காய் சீரகம் சேர்த்து,
ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாக ரவைபோல
பொடித்துக் கொள்ளவும்.
ரஸம் வைக்கும் பாத்திரத்தில் உப்பு, புளிச்சாறு,பொடித்தபொடி
இவைகளைச் சேர்த்து நிதான தீயில் கொதிக்க விடவும்.
கலவை சற்று சுண்டியவுடன் வேக வைத்த பருப்பை
மூன்று கப்பாகத் தண்ணீர் விட்டுக் கரைத்துச்சேர்க்கவும்.
நுறைத்துப் பொங்கும் போது இறக்கி நெய்யில் கடுகு
பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கரிவேப்பிலையைச்
சேர்க்கவும். கொதிக்கும் போது துளி வெல்லம் சேர்க்கலாம்.
காரம் அதிகமாக்க ஒரு பச்சை மிளகாயையும் கொதிக்கும்
போது சேர்க்கலாம். குறைவாக்க மிளகு, மிளகாயைக்
குறைக்கலாம். சற்று கலங்கலாக கலக்கிச் சேர்த்துச்
சாப்பிடும் ரஸமிது. ருசிக்கேற்ப பருப்பு ஜலத்தைக்
கூட்டிக் குறைக்கவும்.