Archive for ஜனவரி 28, 2010
பூண்டு ரஸம்.
வேண்டியவைகள்——100 கிராம் பூண்டை தோல் உறித்து வைத்துக் கொள்ளவும்.
புளி—ஒரு எலுமிச்சை அளவு
மிளகு —ஒன்றறை டீஸ்பூன்
சீரகம்–இரண்டறை டீஸ்பூன்
துவரம் பருப்பு——மூன்று டீஸ்பூன்
தனியா இரண்டு——டீஸ்பூன்
பெருங்காயம்—-சிறிது
தாளிக்க—–கடுகு,—பச்சைக் கறிவேப்பிலை
ருசிக்கு—-உப்பு
நெய்—–நான்கு டீஸ்பூன்
செய்முறை-—–புளியை ஊற வைத்து 3கப் நீறைச் சிறிது
சிறிதாகச் சேர்த்து சாறைப் பிழிந்து கொள்ளவும்.
துவரம் பருப்பு, மிளகு தனியாவை நெய்யில் சிவக்க
வறுத்து சீரகம் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில
துளி ஜலம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
உறித்த பூண்டை நெய்விட்டு நன்றாக வதக்கி,
புளிஜலம் உப்பு, துளி மஞ்சள் பொடி சேர்த்து
ரஸப் பாத்திரத்தில் நன்றாகக் கொதிக்க விடவும்.
புளி வாஸனை போக கொதித்து, பூண்டும் நன்றாக
வெந்தபின் , அரைத்த விழுதை மூன்று கப் அளவு
ஜலம் சேர்த்து கரைத்துச் சேர்க்கவும்.
நுரைத்து பொங்கி வரும் சமயம இறக்கி கடுகு
பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து
உபயோகிக்கவும்.
இம்மாதிரி ரஸம் வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு
ஐந்தாவது மாதத்தில் நல்ல நாள் பார்த்து எண்ணெய்
ஸ்நானம் செய்யச் செய்து ,ரஸத்தை அதிகமாகச்
சேர்த்து சாப்பிடச் சொல்லுவது, அடிக்கடி இம்மாதிரி
ரஸம் வைப்பது வழக்கமாக இருந்தது.
காரத்தை ஸமனாக்க துளி வெல்லம் சேர்க்கலாம்.