Archive for பிப்ரவரி, 2010
காய்கறி ஸ்டூ
இதையும் நான் கூட்டு வகையில்தான் சேர்த்திருக்கிறேன்.
தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்
பார்ப்போம்.
ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்
பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால
கிடைக்கும். பின்னர் ஒருகப் சூடான நீர் சேர்த்து
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்
தேங்காய்ப்பால் கிடைக்கும்.
வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி
நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்
உறித்த பட்டாணி–அரைகப்
கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்
நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்
நறுக்கிய கேரட்—-அரைகப்
நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்
பச்சை மிளகாய்–மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்
லவங்கம்—–6, ஏலக்காய்–ஒன்று
மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்
ஒரு துளி மஞ்சள்ப் பொடி
ருசிக்கு உப்பு
எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்
பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்
தாளித்து, வெங்காயம், மிளகாயை வதக்கி தக்காளி,
காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி
மஞ்சள் சேர்க்கவும்.
திட்டமாகத் தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.
வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு
ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து
உபயோகிக்கவும்.
கலந்த சாதம், புலவு, சேவை, அடை, தோசை,என
எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.
தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.
காய்கறிக் குருமா
வேண்டியவைகள்——–அரை அங்குல அளவில் தோல் நீக்கி
காய்களை நறுக்கிக்கொள்ளவும்.
ஒருகப்—-உருளைக் கிழங்கு
காரட்—ஒருகப்
காலிப்ளவர்—ஒருகப்
பச்சைப் பட்டாணி —-அரைகப்
நூல்கோல்——–ஒருகப்
பீன்ஸ்——-அரைகப்.
வறுத்து அறைக்கசாமான்கள்——-
கசகசா ——-2டீஸ்பூன், தனியா—-ஒரு டீஸபூன்
பெருஞ்சீரகம்—–ஒரு டீஸ்பூன்,——மிளகாய் வற்றல்—-இரண்டு
லவங்கம்—-நான்கு,—–பட்டை சிறிது
பூண்டு—–4 இதழ்கள், வெங்காயம்—-திட்டமாகஒன்று
எண்ணெய்——5, 6. டீஸ்பூன்
சேர்த்து அரைக்க—தேங்காய்த் துருவல்முக்கால் கப்
முந்திரி பாதாம் ஏதாவது 6, அல்லது 7
ருசிக்கு உப்பு, தக்காளிப் பழம் ஒன்று
துளி மஞ்சள்ப் பொடி
செய்முறை—–வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து
வறுக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வறுத்துஎடுக்கவும்.
வெங்காயம், பூண்டையும் வதக்கி , தக்காளி, சேர்த்து
, வறுத்த சாமான்களை ஆறினவுடன் தேங்காய்
சேர்த்து மிக்ஸியில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை சிறிது எண்ணெயில்
2 நிமிஷங்கள் வதக்கி உப்பு, மஞ்சள் பொடி ,வேண்டிய
தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.காய்கள் வெந்ததும்
அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி ஒரு கொதி
வந்ததும் இறக்கவும்.
ருசிக்காக அரைக்கும் போது முந்திரி, பாதாம், அல்லது
பொட்டுக்கடலை சேர்க்கவும். காரம் அதிகம்வேண்டுமானால்
பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
சாதம், ரொட்டி, பூரி, இடியாப்பம், தோசை வகைகள்என
எல்லாவற்றிர்க்கும் உகந்த சேர்மானமாகக் கொடுக்கலாம்.
காய் கறிகளும் பிடித்தவற்றைச் சேர்க்கலாம்.
அவியல்.
அவியலுக்கு வேண்டிய முக்கிய காய்கறிகள்.நீளவாக்கில்தோல்
சீவி நறுக்கிக் கொள்ளவும்.வகைக்கு ஒரு கப்பாக நறுக்கவும்
வெள்ளைப் பூசணிக்காய்
வாழைக்காய்
முருங்கைக் காய்1
சேனைக்கிழங்கு
மஞ்சள் பூசணி
உருளைக் கிழங்கு
அரைப்பதற்கு——தேங்காய்த் துருவல் ஒருகப்
பச்சைமிளகாய்—–இரண்டு
சீரகம்—-ஒரு டீஸ்பூன்
கெட்டித் தயிர் ஒண்ணரைகப் ஜலம் விடாது கடைந்து கொள்ளவும்
பச்சரிசி—-ஒரு ‘டீஸபூன் ஊற வைத்தது
வாஸனைக்கு——கரிவேப்பிலை
தாளிக்க—–தேங்காயெண்ணெய் 4 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு ,—–மஞ்சள் பொடிசிறிது
ஒரு நெல்லிக்காயளவு புளி ஊற வைக்கவும்.
செய்முறை——–காய்களை அலம்பி, குக்கரில் ஒரு
ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி 2 நிமிஷங்கள் வதக்கவும்.
புளிக்கரைசல், உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்..
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி ஒரு விஸில் வரும்
வரை வேக வைத்து இறக்கவும்.
மிளகாய், தேங்காய், அரிசி, சீரகம் இவற்றை
மிக்ஸியிலிட்டு அதிகம் ஜலம் விடாமல் அரைத்துக்
கொள்ளவும்.
குக்கரில் ஆவி அடங்கிய பின் அரைத்த விழுதைச்
சேர்த்து ஒரு கொதிவிட்டுக் கிளறி கடைந்த தயிரையும்
தேங்காய் எண்ணெயையும் சேர்த்து கரிவேப்பிலையைப்
போட்டு இறக்கி உபயோகிக்கவும்.
கத்திரி, சௌ சௌ பட்டாணி அவரை,பீன்ஸ் என
மற்ற காய்களும் சேர்த்துச் செய்யலாம்.
சிறிது மாங்காய்த் துருவல் சேர்ப்பவர்களும் உண்டு.
காய்கள் அளவிற்கு தக்கவாறு காரம் தேங்காய்
கூடுதலாகச் சேர்க்கவும். நாட்டுக் காய்கரிகளல்லாது
காரட் போன்றவைககளும் சேர்த்துச் செய்யலாம்.
அவியலுக்கு ஆகாத காய்களே இல்லை என்ற
வசனமும் உண்டு.
Snake Performing Pooja! இந்த விவரங்கள் வளவனூர்நா பாஸகரனுடயவை.
A True incident recorded in Photo and witnessed by many ….
Believing & non believing left to choice of the reader.———
As received…………
All pictures in order…..
amazing!!!
a
strange but true incident that happened on the 16th Jan 2010 on the
day of the Solar eclipse in Teperumanallur Village Sivan temple near
Kumbakonam.
This cobra had been observed visiting the Sanctum Sanctorum on the
temple by the Priest on two earlier eclipses. He had therefore
requested a photographer who resided at Thirunegeswaram about a
kilometer from the temple in question, to be ready in case the
incident was repeated on the 16th. When the Sanctum was opened on the
16th morning, the priest finding the snake immediately sent for the
photographer. It is said that the cobra made three visits to the
Sanctum Sanctorum with a Bilva leaf in its mouth that it fetched from
the Bilva tree, which is the Sthala Vriksham of the templஇவ் விஷயங்களை அனுப்பிக் கொடுத்த வளவனூர் திரு நா.பாஸ்கரன் அவர்களுக்கு மிக்க நன்றி. ப்லாகில் பதிவு செய்ய உதவியசிறுமி பேத்தி மநஸ்வினிக்கும் ஆசிகள்.காமாட்சி.
காப்ஸிக சட்னி.
வேண்டியவை எண்ணெய் —–4 டீஸ்பூன்
சிவப்பு கேப்ஸிகம் ——2 அல்லது 3
பச்சை மிளகாய்——2
உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப்
தக்காளிப் பழம்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்
செய்முறை——காய் வகைகளை சிறிய
துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க
வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.
சற்று கெட்டியானவுடன் இறக்கி உப்பைக் கலந்து
உபயோகிக்கவும்.கலர் மாறாமலிருக்க உப்பைக்
கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா
வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.
தக்காளிச் சட்னி.
வேண்டியவைகள் தக்காளிப்பழம்–4
பூண்டு இதழ்—–4
இஞ்சி—-ஒரு துண்டு
எண்ணெய்—–3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
சீரகம்——-அரை டீஸ்பூன்
செய்முறை——–இஞ்சி பூண்டை சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும். தக்காளியையும் தனியாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைத்
தாளித்து இஞ்சி, பூண்டை நன்றாக வதக்கிக் கொண்டு
தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின் ஆற வைத்து உப்பு, காரப்பொடி
சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து
உபயோகிக்கவும். தனித் தக்காளிச் சட்னி இது.
அவ்வப்போது செய்து உபயோகிக்கலாம்.
பிஸி பேளேபாத்.
இதை எளிய முறையில் தயாரிக்கலாம். வாயால்
சுலபமாகச் சொல்வதானால் அரிசி பருப்பு மற்றும்
காய்களை ஒன்றாக க் குக்கரில் வேக வைத்துக்
கொண்டு கெட்டியான புளித் தண்ணீர சேர்த்து
அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும்
சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் நெய் சேர்த்து
கடுகு, முந்திரி வகையராவைத் தாளித்து, சுடச்சுட
சாப்பிடலாம் என்று சொல்லி விடலாம். நாம் சற்று
விரிவாகப் பார்க்கலாமா—–
வேண்டியவைகள்-——மெல்லிய ரகமான அரிசி-ஒருகப்
துவரம் பருப்பு—–அரை கப்
வறுத்தறைக்க சாமான்கள்
மிளகாய் வற்றல்—மூன்று
தனியா–ஒண்ணரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு—இரண்டு டீஸ்பூன்
வெந்தயம்—-கால் டீஸ்பூன்
கசகசா—-இரண்டு டீஸ்பூன்
கொப்பரைத் துருவல்—5 அல்லது6 டீஸ்பூன்
மேற் கண்டவைகளைக் கொப்பரை நீங்கலாகச்
சிறிது எண்ணெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
ஆறிய பின் கொப்பரை சேர்த்து மிக்ஸியில்
பொடித்துக் கொள்ளவும்.
வேண்டிய காயகள். சின்ன வெங்காயம்
உறித்தது ஒருகப், பச்சைப்பட்டாணி்அரைகப்
நீளமாக நறுக்கிய காரட் அரைகப்
நீளமாக நறுக்கிய நூல்கோல் அரைகப்
நறுக்கிய பீன்ஸ் அரைகப்
ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை
ஊறவைத்து அரை கப்பிற்கு மேல்சாறு
எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க நல்லெண்ணெய், நெய் வகைக்கு
இரண்டு டேபிள் ஸ்பூன்,
கடுகு சிறிது, முந்திரிப் பருப்பு 10
செய்முறை——-குக்கரில் சிறிது எண்ணெயைக்
காயவைத்து வெங்காயத்தைவதக்கிக் கொண்டு
அரிசி பருப்பைக் களைந்து 4 கப்பிற்கு மேல்
தண்ணீருடன் காய் கறிகளைச் சேர்த்து சிறிது
மஞ்சள்ப் பொடியுடன் ப்ரஷர் குக்கரில்குழைய
வேக வைக்கவும்.
பிரஷர் போனபின் நன்றாகக் கிளறி புளித் தண்ணீறைச்
சேர்த் துக் கொதிக்க வைக்கவும்.
வறுத்தரைத்தப் பொடியையும் உப்பையும் சேர்க்கவும்.
மிகுந்த எண்ணெய்,நெய்யில்கடுகைத் தாளித்து
உடைத்த முந்திரியை வறுத்துப் போட்டு
பச்சைக் கொத்தமல்லி சேர்த்து நிதான தீயில்
வைத்து இறக்கவும். கரம் மஸாலா சேர்க்க
வேண்டுமாயினும் பொடியுடன் சிறிது சேர்க்கவும்.
மிகவும் கெட்டியாக இராமல் சற்று நெகிழ்ச்சியாகத்
தண்ணீர் சேர்த்துத் தயாரித்தால் ருசியாக இருக்கும்.
பூந்திப் பச்சடி, வறுவல்களுடன் ஏற்ற ஜோடி.
காய்கள் அவரவர்கள் சாய்ஸில் சேர்க்கலாம்.
காரமும் அப்படியே.மிளகாய் கூட்டிக் குறைக்கவும்.
கார கதம்பம்.
வாங்கி மிகுந்த காய் கறிகளிலோ அல்லது வாங்கி வந்த
அன்றோ சிறிது விதவிதமான காய் கறிகளில் இதைத்
தயாரிக்கலாம்.காரட்,கத்திரி, வாழைக்காய்,காப்ஸிகம்,
பீட்ரூட்,உருளைக் கிழங்கு என கலந்து மெல்லிய
வட்டங்களாக இரண்டு கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
மேலும் வேண்டியவைகள்.——கடலைமாவுஅரைகப்.
அரிசிமாவு——–4 டீஸ்பூன்
நெய்——–3 டீஸ்பூன்
ஒரு துளி ஸோடாஉப்பு
ருசிக்கு–உப்பு
பெருங்காயம்—சிறிது
பொரிக்க எண்ணெய்
செய்முறை—–நறுக்கிய காய்கறித் துண்டுகளில்
இரண்டு ஸ்பூன் எண்ணெய், நெய்,உப்பு,ஸோடா
பெருங்காயம்,காரம் சேர்த்து நன்றாகப் பிசிறவும்.
அதன் பின் காய்க் கலவையில் மாவைத் தூவி
பகோடா பக்குவத்தில் சிறிது ஜலம் தெளித்து
மாவைக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,பிசிறி
வைத்திருக்கும் கலவையை கையால் பிரித்துப்
போட்டு, சிவக்க, கரகரப்பாகப் பொரித்து எடுக்கவும்.
பலவித ருசிகளில் நன்றாக இருக்கும்.
மாவு கலக்கும் போது அதிக தண்ணீர் விடாமல்
சரிவரக் கலக்கவும்.
மிக்ஸ் டால்
இந்த டாலை எல்லாவித பருப்புகளைக் கலந்து செய்யலாம்.
அதாவது கதம்பப் பருப்புதான் இது.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு,பாசிப்பருப்பு,
கருப்பு உளுத்தம் பருப்பு ஆக எல்லா வகைகளிலும்
சமமாகக் கலந்து ஒருகப் பருப்பு எடுத்துக் கொள்க-
மற்றும் வேண்டியவை.
பழுத்த தக்காளிப் பழம் —-மூன்று
பச்சை மிளகாய்—–மூன்று
சின்ன வெங்காயம்——உறித்தது ஒருகப்
பூண்டு——5 அல்லது6 இதழ்கள்
இஞ்சி– அரை அங்குலத் துண்டு
லவங்கம்——6
எண்ணெய், நெய்,— 5 அல்லது 6 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு,——சிறிது மஞ்சள்ப் பொடி
வாஸனைக்கு —-பச்சைக் கொத்தமல்லி
செய்முறை——பருப்பைக் களைந்து அரைமணி நேரம்
முன்பே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாயைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியே நறுக்கிக கொள்ளவும்.
ப்ரஷர் பேனிலோ, அல்லது குக்கரிலோ நெய் கலந்த
எண்ணெயைச் சூடாக்கி லவங்கத்தைப் பொரித்து
தக்காளி நீங்கலாக வெங்காய வகைகளைப் போட்டு
வதக்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்துவதக்கவும்.
யாவும் வதங்கிய பின் ஊற வைத்த பருப்பு, மஞ்சள்,
உப்பு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில்
வேக வைக்கவும்.
அவரவர்கள் குக்கரில் பருப்பு வேக எத்தனை விஸில்
என உங்களுக்குத் தெரியும். அப்படி வேக விடவும்.
ப்ரஷர் போன பின், கரண்டியால் மசித்து நறுக்கிய
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும். அதிகம்
காரத்திற்கு வெறும் மிளகாய்ப் பொடியும் போடலாம்.
மிகவும் கெட்டியாக இல்லாமல் வேண்டிய அளவிற்கு
சிறிது வென்நீர் அவசியமானால் கலந்து கொள்ளவும்.
ரொட்டி, சாதம் மற்றும் விருப்பப் பட்டவைகளுடன்
சேர்த்து உபயோகிக்கவும்.
கொண்டைக் கடலை சட்னி
சிவப்போ, வெளுப்போ ஏதாவது ஒரு கடலையில் இதைச் செய்யலாம்.
வேண்டியவை——கொண்டைக் கடலை—-அரைகப். முதல் நாளே
வெறும் வாணலியில் கடலையைச் சிவக்க வறுத்துத் தண்ணீரில்
ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய்—-இரண்டு
இஞ்சி —ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்—–இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—சிறிது
தயிர்—ஒருகப்
தாளிக்க——ஒருஸ்பூன் எண்ணெய்
கடுகு,பெருங்காயம் சிறிது
ருசிக்கு உப்பு
பிடித்தமான ருசிக்காக புதினா.வெங்காயம் போன்றவைகளும்,
சிறிது வதக்கி சேர்க்கலாம்.
தயிரைக் கடைந்து கொள்ளவும்.
ஊற வைத்த கடலையை வடிக்கட்டி உப்பு, மிளகாய்,
இஞ்சி, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து,கெட்டியாக
அரைத்துக் கொண்டு கடைந்த தயிரில் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
சட்னியில் சேர்க்கவும். வாஸனைக்காக சேர்ப்பதை
அரைக்கும் போதே சேர்த்து விடவும்.
சைட்டிஷ்ஷாக உபயோகிக்க நன்றாக இருக்கும்.
காரம் அதிகமாக்க தாளித்துக் கொட்டும் போது
மிளகாய் சேர்க்கலாம்.