Archive for பிப்ரவரி 26, 2010
காய்கறிக் குருமா
வேண்டியவைகள்——–அரை அங்குல அளவில் தோல் நீக்கி
காய்களை நறுக்கிக்கொள்ளவும்.
ஒருகப்—-உருளைக் கிழங்கு
காரட்—ஒருகப்
காலிப்ளவர்—ஒருகப்
பச்சைப் பட்டாணி —-அரைகப்
நூல்கோல்——–ஒருகப்
பீன்ஸ்——-அரைகப்.
வறுத்து அறைக்கசாமான்கள்——-
கசகசா ——-2டீஸ்பூன், தனியா—-ஒரு டீஸபூன்
பெருஞ்சீரகம்—–ஒரு டீஸ்பூன்,——மிளகாய் வற்றல்—-இரண்டு
லவங்கம்—-நான்கு,—–பட்டை சிறிது
பூண்டு—–4 இதழ்கள், வெங்காயம்—-திட்டமாகஒன்று
எண்ணெய்——5, 6. டீஸ்பூன்
சேர்த்து அரைக்க—தேங்காய்த் துருவல்முக்கால் கப்
முந்திரி பாதாம் ஏதாவது 6, அல்லது 7
ருசிக்கு உப்பு, தக்காளிப் பழம் ஒன்று
துளி மஞ்சள்ப் பொடி
செய்முறை—–வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து
வறுக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வறுத்துஎடுக்கவும்.
வெங்காயம், பூண்டையும் வதக்கி , தக்காளி, சேர்த்து
, வறுத்த சாமான்களை ஆறினவுடன் தேங்காய்
சேர்த்து மிக்ஸியில் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை சிறிது எண்ணெயில்
2 நிமிஷங்கள் வதக்கி உப்பு, மஞ்சள் பொடி ,வேண்டிய
தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.காய்கள் வெந்ததும்
அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறி ஒரு கொதி
வந்ததும் இறக்கவும்.
ருசிக்காக அரைக்கும் போது முந்திரி, பாதாம், அல்லது
பொட்டுக்கடலை சேர்க்கவும். காரம் அதிகம்வேண்டுமானால்
பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
சாதம், ரொட்டி, பூரி, இடியாப்பம், தோசை வகைகள்என
எல்லாவற்றிர்க்கும் உகந்த சேர்மானமாகக் கொடுக்கலாம்.
காய் கறிகளும் பிடித்தவற்றைச் சேர்க்கலாம்.