Archive for பிப்ரவரி 13, 2010
கொண்டைக் கடலை சட்னி
சிவப்போ, வெளுப்போ ஏதாவது ஒரு கடலையில் இதைச் செய்யலாம்.
வேண்டியவை——கொண்டைக் கடலை—-அரைகப். முதல் நாளே
வெறும் வாணலியில் கடலையைச் சிவக்க வறுத்துத் தண்ணீரில்
ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய்—-இரண்டு
இஞ்சி —ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்—–இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—சிறிது
தயிர்—ஒருகப்
தாளிக்க——ஒருஸ்பூன் எண்ணெய்
கடுகு,பெருங்காயம் சிறிது
ருசிக்கு உப்பு
பிடித்தமான ருசிக்காக புதினா.வெங்காயம் போன்றவைகளும்,
சிறிது வதக்கி சேர்க்கலாம்.
தயிரைக் கடைந்து கொள்ளவும்.
ஊற வைத்த கடலையை வடிக்கட்டி உப்பு, மிளகாய்,
இஞ்சி, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து,கெட்டியாக
அரைத்துக் கொண்டு கடைந்த தயிரில் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
சட்னியில் சேர்க்கவும். வாஸனைக்காக சேர்ப்பதை
அரைக்கும் போதே சேர்த்து விடவும்.
சைட்டிஷ்ஷாக உபயோகிக்க நன்றாக இருக்கும்.
காரம் அதிகமாக்க தாளித்துக் கொட்டும் போது
மிளகாய் சேர்க்கலாம்.