Archive for பிப்ரவரி 23, 2010
காப்ஸிக சட்னி.
வேண்டியவை எண்ணெய் —–4 டீஸ்பூன்
சிவப்பு கேப்ஸிகம் ——2 அல்லது 3
பச்சை மிளகாய்——2
உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப்
தக்காளிப் பழம்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்
செய்முறை——காய் வகைகளை சிறிய
துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க
வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.
சற்று கெட்டியானவுடன் இறக்கி உப்பைக் கலந்து
உபயோகிக்கவும்.கலர் மாறாமலிருக்க உப்பைக்
கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா
வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.
தக்காளிச் சட்னி.
வேண்டியவைகள் தக்காளிப்பழம்–4
பூண்டு இதழ்—–4
இஞ்சி—-ஒரு துண்டு
எண்ணெய்—–3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
சீரகம்——-அரை டீஸ்பூன்
செய்முறை——–இஞ்சி பூண்டை சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும். தக்காளியையும் தனியாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைத்
தாளித்து இஞ்சி, பூண்டை நன்றாக வதக்கிக் கொண்டு
தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின் ஆற வைத்து உப்பு, காரப்பொடி
சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து
உபயோகிக்கவும். தனித் தக்காளிச் சட்னி இது.
அவ்வப்போது செய்து உபயோகிக்கலாம்.