Archive for பிப்ரவரி 4, 2010
புஷ்ப ரஸம்.
வேறொன்றுமில்லை.—-வேப்பம்பூ ரஸம்தான் இது.
வேண்டியவை—-காய்ந்த வேப்பம் பூ.—இது கடைகளில் கிடைக்கின்றது 2டீஸ்பூன்.
மிளகாய் வற்றல்—-இரண்டு
துவரம் பருப்பு—–இரண்டு டீஸ்பூன்
புளி சிறிது, தக்காளிப்பழம் இரண்டு
தாளிக்க நெய் 3டீஸ்பூன்
கடுகு, சீரகம்,ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் வாஸனைக்கு கறிவேப்பிலை
செய்முறை—-தக்காளியை சிறிது வேகவைத்து புளியையும்
சேர்த்து ஊறவைத்து , இரண்டு கப்பிற்கு அதிகமாகவே ஜலம்
சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் சற்று ஊற வைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலுடன, உப்பு பெருங்காயம், ஊற வைத்த
பருப்பைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
புளி வாஸனை போகக் கொதித்தபின் இரண்டுகப்
ஜலம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சிறிய வாணலியில் நெய்யைக் காயவைத்து மிளகாயைத்
துண்டு செய்து போட்டு வறுத்துக் கொண்டு கடுகு
சீரகத்தையும் போட்டு வேப்பம் பூவையும் சேர்த்து
கருகாமல் வருத்து ரஸத்தில்.சேர்க்கவும் ஒரு
துளி வெல்லமும் போடலாம். கறி வேப்பிலை சேர்த்து
சுடச்சுட சாப்பிட பிடித்தவர்களுக்கு நன்றாகவே
இருக்கும். பித்தத்திற்கு நல்லது .சாப்பிடும் போது
மேலாக தாளிதத்தை எடுத்து விடலாம்.ஜலம்
கூட்டிக் குறைக்கவும். வேப்பம்பூவைப் போட்ட
பிறகு கொதிக்க வைத்தால் ரஸம் அதிகம் கசந்து
விடும். தயார் செய். உடனே சாப்பிடு.கொள்கைதான்
சரிவரும்.
புளிப்பு சற்று அதிகம் போடவும்.